Latest Updates
-
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா?
19 வயதில் முதல் திருமணம்.. மொத்தம் இரண்டு மனைவிகள்.. ஆறு வாரிசுகள்.. இது தர்மேந்திராவின் சொந்தக் கதை
மும்பை: பாலிவுட் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த தர்மேந்திரா தனது 89வது வயதில், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் மறைந்தார். அவரது மறைவு மொத்த பாலிவுட்டையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. பாலிவுட் நட்சத்திரங்கள், அவரது இல்லத்திற்கு சென்று, தர்மேந்திராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அவரது திரைவாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கை குறித்து இங்கு காணலாம்.
தர்மேந்திராவின் இயற்பெயர் தரம் சிங் தியோல். பஞ்சாப் மாநிலம், கபுர்தலா மாவட்டத்திலுள்ள பக்வாரா கிராமத்தில், ஜாட் சீக்கிய குடும்பமொன்றில் கேவல் கிஷன் சிங் தியோலுக்கும் சத்வந்த் கவுருக்கும் மகனாக கடந்த 1935 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி அவர் பிறந்தார். குழந்தைப் பருவத்தை சஹ்னேவல் கிராமத்தில் கழித்த அவர், லூதியானாவை அடுத்த லால்டன் கலனில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். 1952-ஆம் ஆண்டு பக்வாராவிலுள்ள ராம்கார்ஹியா கல்லூரியில் இடை நிலைக் கல்வியை நிறைவு செய்தார்.
சிறுவயது முதலே திரைப்படங்களின் மீது கொண்ட தீராத காதலால், ஃபிலிம்ஃபேர் நடத்திய 'நியூ டேலண்ட் ஹண்ட்' போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். பஞ்சாபிலிருந்து கனவுகளுடன் மும்பைக்கு வந்த அவர், அர்ஜுன் ஹிங்கோரானியின் இயக்கத்தில் 1960-இல் வெளியான 'தில் பி தேரா ஹம்பி தேரே' படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 'பாய் ஃப்ரெண்ட்' (1961) உள்ளிட்ட படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.

லவ்வர் பாய் டூ ஆக்ஷன் ஹீரோ: 1960-ஆம் ஆண்டு முதல் தன் திரை பயணத்தை தொடங்கிய தரம் சிங் தியோல், முதலில் (1960-1968) காதல் நாயகனாகவும், பின்னர் (1968-1970) முழு அளவிலான ரொமான்டிக் ஹீரோவாகவும் பிரபலமடைந்தார். 1971 முதல் 1997 வரை ஆக்ஷன் ஹீரோவாக ஆதிக்கம் செலுத்தினார். தனது 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திரை வாழ்க்கையில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகவுள்ள படம் என்றால் அது இக்கிஸ். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிருஸ்துமஸ்க்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஹேம மாலினி: தர்மேந்திராவின் முதல் திருமணம் 1954-ஆம் ஆண்டு, வெறும் 19 வயதில் பிரகாஷ் கவுருடன் நடைபெற்றது. இந்தத் திருமணத்திலிருந்து அவருக்கு சன்னி தியோல், பாபி தியோல் என்ற இரு மகன்களும் (இருவரும் பிரபல நடிகர்கள்), விஜேதா தியோல் மற்றும் அஜீதா தியோல் என்ற இரு மகள்களும் பிறந்தனர்.'ஷோலே' படப்பிடிப்பின் போது ஹேமா மாலினியுடன் காதல் மலர்ந்தது.

மத மாற்றம்: இந்து திருமணச் சட்டம் பலதார மணத்தை அனுமதிக்காததால், சட்டரீதியான தடைகளைத் தாண்டி 1980-இல் ஹேமாவை மணமுடிக்க, தர்மேந்திரா 1979-இல் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இந்தத் தம்பதிக்கு ஈஷா தியோல் (நடிகை) மற்றும் அஹானா தியோல் (நடனக் கலைஞர்) என்ற இரு மகள்கள் உள்ளனர்.குடும்ப ரீதியாக அவருக்கு கரண் தியோல், ராஜ்வீர் தியோல், ஆர்யமான் தியோல், தரம் தியோல் உள்ளிட்ட பேரக் குழந்தைகளும் உள்ளனர்.திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக ஏராளமான விருதுகளைப் பெற்ற தர்மேந்திரா, 2012-ஆம் ஆண்டு இந்திய அரசின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷண் விருதால் கௌரவிக்கப்பட்டார். இவையில்லாமல் நூற்றுக்கணக்கான விருதுகளை தர்மேந்திரா பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications











