Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
சைலண்ட் மோடில் இருக்கும் தங்கம், வெள்ளி: நாளை முதல் தான் ஆட்டமே ஆரம்பம்..!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஆட்டம் காட்டி வருகிறது. காலையில் விலை குறைவது, மாலையில் விலை உயர்வது மீண்டும் காலையில் விலை குறைவது என தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போக்கினை காட்டுவது சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்றைய தினம் காலை தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் சரிந்தது, அதுவே நேற்று மாலை 200 ரூபாய் உயர்வு கண்டது. அந்த வகையில் பார்க்கும்போது சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14, 790 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் 1,18,320 ரூபாய் என விலை உயர்வு கண்டது. காலையில் விலை சரிந்த தங்கம் மாலையில் தடாலடியாக உயர்ந்ததால் மக்கள் கவலை அடைந்தனர்.

இன்றைய தினம் தங்கம் ஒரு கிராம் 190 ரூபாய் விலை குறைந்து 14 , 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, ஒரு சவரன் 1520 ரூபாய் சரிந்து 1, 16, 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை நேற்று காலை முதல் இன்று காலை வரையிலான இந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரண்டு முறை விலை குறைந்திருக்கிறது ஒரு முறை கூடி இருக்கிறது. இதனால் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் குழப்பம் அடைந்திருக்கின்றனர்.
மாசம் ரூ.9000 வட்டி வருமானம் வேணுமா? போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டத்துல இப்படி முதலீடு செஞ்சா போதும்..!
சென்னையில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. நேற்று 16,135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட ஒரு கிராம் தங்கம் இன்று 15 ,928 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று 1,29,080 ரூபாய்க்கு விற்பனையா தங்கம் இன்று 1, 27,424 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் 18 கேரட் தங்கம் விலையும் இன்று சரிவடைந்துள்ளது. நேற்று 12,700 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று 100 ரூபாய் குறைந்து 12,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனை பொறுத்தவரை 1,01,600 ரூபாய்க்கு விற்பனையான தங்கம் இன்று 800 ரூபாய் விலை சரிந்து 1,00,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை எந்த ஒரு மாற்றமும் இல்லை. தொடர்ந்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை 300 ரூபாய் என்ற அளவிலேயே நீடிக்கிறது.
30,000 டன் தங்க புதையல்!! அதுவும் இந்தியாவில்!! ஆடிப் போன உலக நாடுகள்..! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே
உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலை மாறாமல் இருப்பதே இதற்கு காரணம். அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அமெரிக்காவில் ஜனவரி மாதம் வேலைவாய்ப்பு தரவுகள் வெளியாகியுள்ளன. அது எதிர்ப்பார்த்ததை விட நன்றாகவே இருப்பதால் மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்காது என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், வெள்ளி மூதலீட்டை தவிர்க்கின்றனர். அடுத்ததாக அமெரிக்க பணவீக்க விகிதம் நாளை வெளியாகிறது. அதனை பொறுத்து தான் தங்கம், வெள்ளி விலை நிர்ணய்ம் செய்யப்படும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications











