பட்ஜெட்டில் அடிக்கப்போகுது ஜாக்பாட்! இதையெல்லாம் கண்டிப்பா எதிர்பார்க்கலாம்!

By Balasubramanian Thirumalaiappan

2026-27ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் விரைவில்தாக்கலாகிறது. இதற்காக மத்திய அரசு பட்ஜெட்டை தயாரிக்கும் பணியை துவங்கிவிட்டது. இந்தாண்டு ஆட்டோமொபைல் செக்டாரில் என்னென்ன அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஆட்டோமொபைல் செக்டாரில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அதிகம் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பிஎல்ஐ மானியம் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு எந்த விதமான வாகனங்கள் வாங்கினாலும் அதில் மானியம் உள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமலுக்கு வந்த பிஎம் இ-டிரைவ் திட்டத்தின்படி தனி நபர் பயணிகள் வாகனங்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது.


Budget 2026

இந்தியாவில் கமர்ஷியல் பயன்பாட்டிற்காக எலெக்ட்ரிக் பயணிகள் வாகனங்களை வாங்கினாலும் அதற்கு மானியம் இல்லை. இதனால் இந்த ரக வாகனங்களின் விலை அதிகமாக உள்ளத. இந்தியாவில் கமர்ஷியல் பயணிகள் வாகனங்கள் குறைவான எண்ணிக்கையில் விற்பனையானாலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் நோக்கமே மாசுவை குறைப்பது தான். கமர்ஷியல் வாகனங்கள் அதிக பயன்பாட்டில் இருப்பதால் அதற்கு மானியம் வழங்கினால் அதன் பயன்பாடு அதிகரித்து மாசு குறையும்.

இதுபோக வெளிநாட்டு இறக்குமதியை குறைத்து தற்சார்பை அதிகரிக்க வெளிநாட்டிலிருந்து தொழிற்நுட்பங்களைஇறக்குமதி செய்வது, தயாரிப்பை பெரும்பாலும் உள்நாட்டு தயாரிப்பாக மாற்றுவது, கச்சா எண்ணெய் தேவையை குறைப்பது, அந்நிய செலாவணியை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் சில எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இது போக வரிகளை பொருத்தவரை வாகனங்களுக்கான வரிகள் எல்லாம் சமீபத்தில் தான் குறைக்கப்பட்டன. இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இதில் பெரிய மாற்றங்கள் வராது. ஆனால் இவி கார்களுக்கான வரியில் மாற்றம் இல்லை. அதனால்இதில் மாற்றம் வந்து இவி கார்களுக்கு வரி இல்லாமல் போக கூட வாய்ப்புள்ளுது. தற்போதுஇவி கார்களுக்கு 5 சதவீத வரி விதிப்பு உள்ளது.

சப்ளை செயின் பிரச்சனை வாகன தயாரிப்பில் நீண்ட ஆண்டுகளாக உள்ளது. இதில் முக்கிய பிரச்சனையாக உள்ள ஸ்பெஷல் வேல்யூவேஷன் பிராஞ்ச் பிரிவில் சில மாற்றங்களை செய்து அதை எளிமையாக்கி அதில் உள்ள வரிகளை நீக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களின் சராசரி மாசு உமிழ்வு குறித்த கணக்கு கஃபே என்ற கணக்கீட்டின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிக மைலேஜ் அதே நேரம் குறைவான உமிழ்வு கொண்ட வாகனங்களை தயாரிக்கும் நிர்பந்தத்தில் இருக்கின்றனர். இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஹைபிரிட் மற்றும் இவி கார்களை தயாரிக்க ஊக்குவிக்கும் அறிவிப்புகள் வெளியாகலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய பட்ஜெட் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 5 மாநில தேர்தல் வரவுள்ளதால் தமிழ்நாட்டிற்கு அதிகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சமூகவலைத்தளங்களில் பேசப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் நீங்கள் அதிகம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் கமெண்டில் சொல்லுங்கள்.

Credit: Drivespark

Story first published: Wednesday, January 28, 2026, 20:30 [IST]
Desktop Bottom Promotion