Latest Updates
-
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி!
தூக்கி சாப்பிட்ட BSNL.. மாதம் ரூ.233 க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 3 ஜிபி டேட்டா!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படியான விலையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், வருடாந்திர திட்டங்களை கொடுக்கிறது. நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்களை மாதத்துக்கு ரூ.233 செலவில் கொடுத்து ப்ரீபெய்ட் (Prepaid) கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வருடாந்திர திட்டத்தின் சலுகைகளை பார்ப்போம்.
பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் திட்டமாக ரூ.2,799 விலை கொண்ட வருடாந்திர திட்டம் மாறிவிட்டது. ஏனென்றால், 12 மாதங்கள் வேலிடிட்டி கொடுக்கும் இந்த திட்டத்துக்கு மாத செலவானது ரூ.233ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலைக்குள் அதிகப்படியான தினசரி டேட்டா (Daily Data) சலுகையை கொடுத்து உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ. 2799 திட்ட விவரங்கள் (BSNL Rs 2799 Plan Details): 12 மாதங்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த திட்டம் கொடுத்து உள்ளது. மேலும், போஸ்ட் டேட்டா சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, வருடம் முழுவதும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) வாய்ஸ் கால்கள் கிடைக்கின்றன.
மேலும், ரோமிங் கால்களும் (Roaming Calls) கொடுக்கப்பட்டு உள்ளன. நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா சலுகையை இந்த வருடாந்திர திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, 365 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், 1,095 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கும்.
ஆனால், இதை 3 ஜிபி டேட்டா முடிந்த பிறகே பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த சலுகைகள் போக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். எப்படி பார்த்தாலும், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதுவும் வருடம் முழுவதும் கிடைக்கிறது. ஜியோ மற்றும் ஏர்டெல்லில் 2.5 ஜிபி டேட்டாவே அதிகபட்சம் வருடாந்திர திட்டங்களில் வருகிறது.
ஆகவே, இந்த பிஎஸ்என்எல் ரூ. 2799 திட்டமானது மலிவான விலைக்கு நல்ல சலுகைகளை கொடுக்கும் திட்டமாகவே இருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ போர்டலுக்கு செல்லுங்கள். ஹோம் பேஜ்ஜில் மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டி இருக்கும். இதில் தமிழ்நாடு மாநிலத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பிறகு, வாய்ஸ் வவுச்சர்கள் (Voice Vouchers) விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். இதில் கடைசி திட்டமாக பிஎஸ்என்எல் ரூ. 2799 திட்டம் கிடைக்கும். இதைவிட கம்மியான டேட்டாவுடன் வருடாந்திர திட்டம் வேண்டுமானால், 2 ஜிபி டேட்டாவுடன் கிடைக்கும் ரூ.2399 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் டேட்டாவை தவிர மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாக கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ. 2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் தினமும் 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். முந்தைய திட்டத்தில் 1 ஜிபி கூடுதலாக 3 ஜிபி டேட்டா தினசரிக்கு கிடைத்தது. இதில் கம்மியாக கிடைக்கிறது. ஆனால், விலையிலும் கம்மியாக கிடைக்கிறது.
365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் இந்த திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் பெஸ்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
Credit: Gizbot



Click it and Unblock the Notifications