Bharathiraja Health Update: பாரதிராஜாவிற்கு என்ன ஆச்சு.. நுரையீரலில் சின்ன பிரச்சனை.. தம்பி விளக்கம்

By Jaya Devi

சென்னை: இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து தவறான செய்தி சமூக வலைதளங்களில் வருவது குறித்து, அவரது சகோதரர், பாரதிராஜாவின் உடல்நிலை பற்றி விளக்கமாக பேட்டி அளித்துள்ளார்.

Wow Tamizhaa யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மீடியாவுக்கு என்று ஒரு தர்மம் இருந்தது, அதன்படி பத்திரிக்கையாளர்கள் நடந்து கொண்டார்கள். ஆனால், இப்போது அதை காற்றில் பறக்க விட்டு வியாபார ரீதியில் அனைவரும் சென்று கொண்டு இருக்கிறார்கள் என்பதே நினைக்கும் போது மனதிற்கு வேதனையாக இருக்கிறது. சினிமாக்காரர்களை குறி வைத்து அவர்களை அசிங்கப்படுத்துகிறார்கள், சிலர் அவரின் போட்டோவிற்கு மாலையை போட்டு அவரை கேவலப்படுத்துகிறார்கள். ஏன் இது போன்று கேவலமான வேலைகளை செய்கிறார்கள் என தெரியவில்லை.


Bharathiraja Health Update
Photo Credit:

அறிவு இல்லையா: ஏதோ ஒரு தவறான செய்தி பரவுகிறது என்றால் மீடியாவிற்கு அறிவு இல்லையா? வந்த தகவல் உண்மையா? பொய்யா? என சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்க மாட்டார்களா? ரோட்டில் போகிறவன் வாய்க்கு வந்ததை சொன்னால், அதை அப்படியே செய்தியாக்குவதா? பாரதிராஜா என்ன சாதாரண மனிதனா... உலகமே கொண்டாடிய ஒரு இயக்குனருக்கு இவ்வளவு பெரிய அசிங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இணையத்தில் பரவிய வதந்தியை பார்த்து கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து ஃபோன் வந்து கொண்டே இருக்கிறது. இரவில் நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை. இதற்குப் பெயர் மீடியாவா? இது மிகப் பெரிய தவறு. இதற்கு மேலாவது திருந்துங்கள், எந்த பொய்யான தகவலையும் தயவு செய்து பரப்பாதீர்கள்.

நுரையீரலில் சளி: பாரதி ராஜா இப்போது நலமாக சிங்கம் போல் இருக்கிறார். அவருக்கு எந்த விதமான குறையும் இல்லை. அவரை சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக தான் அழைத்து சென்றோம். அவருக்கு சளி தொந்தரவு இருந்ததால், அது குறித்து டெஸ்ட் எடுத்த போது நுரையீரலில் சளி இருப்பது தெரியவந்தது. அந்த சளியை வெளியில் எடுப்பதற்காக ஒரு கருவியை வைத்து சளியை எடுத்து வருகிறோம். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அந்த ட்ரீட்மென்ட் முடிந்து அவர் விரைவில் வீடு திரும்பி விடுவார். தொற்று ஏற்படும் என்பதற்காக அவரை ஐசியூவில் வைத்து அவருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்குள் அவரைப் பற்றி பலவிதமான அவர் வதந்திகளை பரப்பி கஷ்டப்படுத்துகிறார்கள். அவர் நலமாக சிங்கம் போல இருக்கிறார். மருத்துவமனையில் இருந்து வந்து நிச்சயம் அவர் ஒரு படத்தை இயக்குவர் அதற்கு தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம். இதை நான் ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன் என்று பாரதி ராஜாவின் தம்பி ஜெயராஜ் பேசி உள்ளார்.

Credit: Filmibeat

Story first published: Monday, January 5, 2026, 22:00 [IST]
Desktop Bottom Promotion