Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
Annamalai: பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியதற்கு காரணம் என்ன?
சென்னை: பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ள நிலையில் அதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தின் அரவக்குறிச்சியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமலை, தனது படிப்பாற்றல் மூலம் ஐபிஎஸ் தேர்ச்சி அடைந்து கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

அரசியலில் சேர்ந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. ஆனால் இந்த தேர்தலில் இந்த கூட்டணி தோல்வியை தழுவியது.
சட்டசபை தேர்தல்
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்விக்கு, பாஜகவுடனான கூட்டணிதான் காரணம் என முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். அந்த சமயத்தில் பாஜகவினரும் சில வார்த்தைகளை விட்டனர்.
அதிமுக- பாஜக
இவ்வாறு அதிமுக- பாஜக இடையே இப்படிப்பட்ட பேச்சுகள் எழுந்த நேரத்தில்தான் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். அப்போது அண்ணாமலை பிரஸ்மீட் வைத்தாலே திமுகவை கடுமையாக அதுவும் பாயிண்ட் பாயிண்ட்டாக விமர்சித்து வந்தார்.
அதிமுக- பாஜக மோதல்
அப்போது அதிமுகவின் குற்றச்சாட்டுகளுக்கும் விடை அளித்து வந்தார். இப்படியாக அதிமுக- பாஜகவுக்குள் மோதலை முட்டிக் கொண்டது. ஒரு ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
கூட்டணி முறிவு
இதனால் அதிமுக கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டது. இதை ஜெயக்குமார் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்த போது, "அதிமுக இனி எந்த சூழலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்காது" என தெரிவித்திருந்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி
இந்த நிலையில்தான் 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கவே இல்லை. நாள்தோறும் இப்போது கூட்டணி , அப்போது கூட்டணி என செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தது.
இதை திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்த கூட்டணியில் அதிமுக இணைய ஒரு கோரிக்கையை பாஜகவிடம் வைத்திருந்தது. அதாவது பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலையை நீக்கிவிட்டு வேறொருவரை நியமிக்க வேண்டும் என்பதுதான். அந்த நேரத்தில்தான் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பதவியேற்று 3 ஆண்டுகள் ஆனதால் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
நயினார் நாகேந்திரன் தேர்வு
இதில் போட்டியின்றி நயினார் நாகேந்திரன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கடதந் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி நயினார் நாகேந்திரன் பதவியேற்றார். இதையடுத்துதான் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக ஒப்புக் கொண்டது.
இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அண்ணாமலையை தேசிய அரசியலுக்கு கொண்டு செல்வதாக அறிவித்திருந்தார்.
பாஜக தேர்தல் அறிக்கை
ஆனால் இதுநாள் வரை அண்ணாமலைக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. அண்ணாமலையை ஓரம்கட்ட பாஜக தலைமை முடிவு செய்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிலும் அண்ணாமலை பெயர் இடம் பெறவில்லை.
தமிழக பாஜக தொடர் பயணம்
ஆனால் தமிழக பாஜக சார்பில் பேரவைத் தொகுதிகளுக்கு தொடர் சுற்றுப்பயணம் செல்ல உள்ள பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் அண்ணாமலைக்கு சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கு பாஜகவின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் பார்த்துக் கொள்ள வேண்டியது தலையாய கடமையாகும். இதனால் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
என்ன காரணம்
இதற்கு காரணம் என்ன என பாஜக வட்டாரங்களில் கேட்ட போது, "தமிழகத்தில் பாஜகவை வளர்த்த அண்ணாமலைக்கு வெறும் 6 தொகுதிகளுக்கான பொறுப்புதானா? மேலும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியோ அல்லது வேறு மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளர் பதவியோ கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனராம். ஆனால் இதுவரை டெல்லி தலைமை, அண்ணாமலை உரிய முக்கியத்துவத்தை அளிக்கவில்லை.
கடந்த மாதம் மதுராந்தகத்தில் நடந்த அதிமுக- பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது கூட அண்ணாமலைக்கு உரிய மரியாதை தரவில்லை. இந்த குமுறல்களை எல்லாம் அண்ணாமலையிடம் ஆதரவாளர்கள் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதுதான் காரணமா
இதனால்தான் அவரும் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என கூறி தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியதாக சொல்கிறார்கள். இதனால் பாஜக டெல்லி, அண்ணாமலையை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராகவோ அல்லது வேறு ஒரு முக்கிய பொறுப்புக்கு நியமிக்கும் என்பது ஆதரவாளர்களின் கணக்காக இருக்கிறதாம்.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











