Latest Updates
-
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
Vichitra: அச்சச்சோ விசித்ராவுக்கு என்னாச்சு? ஹாஸ்பிடலில் எப்படி இருக்காங்கனு பாருங்க..
சென்னை: தென்னிந்திய சினிமாவில் டான்ஸராக வாழ்க்கையைத் தொடங்கி, அதன் பின்னர் கதாநாயகி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை விசித்ரா. தனது திருமண வாழ்க்கைக்குப் பின்னர், இவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 7இல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் நடிகை விசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் சமீபத்தில் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி ஆனது குறித்தும், அங்கு தான் செய்துகொண்ட அறுவை சிகிச்சை செய்ததையும் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், அவர் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை விசித்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "வலி நம் வாழ்வைச் சற்றே நிறுத்தி வைக்கலாம், ஆனால் மனித மனதின் வலிமையை அது நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு தழும்பும் ஒரு போராட்டத்தின் வெற்றிக் கதையைச் சொல்கிறது" எனத் தனது அறுவை சிகிச்சைக்கு பிந்தைய அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

சென்னை MGM ஹெல்த் கேர் மருத்துவமனையில், டாக்டர் மொஹந்தி மற்றும் அவரது மருத்துவக் குழுவினரின் சிறப்பான வழிகாட்டலில் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த இக்கட்டான சூழலில் தமக்கு உந்துசக்தியாக விளங்கிய தனது கணவர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். "அன்பும் அரவணைப்பும் இருக்கும் போது மீண்டு வருவது எளிதாகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இவரது இந்த பதிவுடன் தான் மருத்துவமனையில் இருந்த போது எடுத்த சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ந்து போனார்கள். உடனே என்ன ஆச்சு? என்ன ஆச்சு? என்று விசாரிப்பது ஒரு புறம் நடைபெற்று வருகிறது. மற்றொரு புறம், எல்லாம் சரி ஆகிவிடும் மேடம். நீங்கள் சீக்கிரமே முழுவதுமாக குணமடைவீர்கள் என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் பலர் ஹார்ட்டீன் எமோஜிகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்த பதிவு இல்லாமல், தனக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் விளக்கும் வீடியோவையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications