Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Kanaka: மீண்டும் இணைந்த கரகாட்டக்காரன் ஜோடி.. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்த படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக ஜொலித்த நடிகை கனகா. தனது அம்மா இறந்த பின் வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டு கிடந்தார். அவர் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக பலவிதமான கருத்துக்கள் இணையத்தில் பரவிய நிலையில், தற்போது கனகா நடிகை ராமராஜனை நேரில் சந்தித்து பேசி உள்ளார். அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
நடிகை தேவிகாவின் மகளான கனகா, கரகாட்டக்காரன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என பெயர் எடுத்தார் கனகா. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக அதிசய பிறவி படத்தில் நடித்தார். அதன்பின், தங்கமான ராசா, பெரிய வீட்டுப் பண்ணக்காரன், கும்பக்கரை தங்கய்யா, தாலாட்டு கேக்குதம்மா, சாமுண்டி என அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்தார்.

நடிகை கனகா: சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே பெயர் எடுத்த கனகா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து வந்தார். மலையாளத்தில் இவர் நடித்த காட்ஃபாதர் படம் 400 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் ரஜினி, பிரபு, கார்த்திக் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த கனகா, மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து படுபிஸியாக இருந்தார்.
மீண்டும் இணைந்த ஜோடி: சினிமாவில் படு பிஸியாக இருந்த கனகா, அம்மா தேவிகாவின் இறப்பில் இருந்து மீண்டு வர முடியாமல், துயரத்தில் இருந்த கனகா, தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமலே இருந்து வருகிறார். அண்மையில், நடிகை குட்டிபத்மினி கனகாவை வீடு தேடி சென்று சந்தித்து பேசிய போட்டோவை ஷேர் செய்து இருந்தார். அந்த போட்டோவில் கனகா அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருந்தார். தற்போது கனகா, கரகாட்டக்காரன் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ராமராஜனை நேரில் சந்தித்து பேசி உள்ளார். பல வருடத்திற்கு பிறகு இருவரும் சந்தித்து பேசி உள்ளனர். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications