Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
அப்பாவானார் பிரேம்ஜி அமரன்.. என்ன குழந்தை தெரியுமா?.. வீட்டில் செம விசேஷம்.. கொண்டாட்டத்தில் குடும்பம்
சென்னை: நடிகர் பிரேம் ஜி கடந்த வருடம் இந்து என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணத்தை வெங்கட் பிரபுதான் முன் நின்று நடத்திக்கொடுத்தார். திருமணத்துக்கு பிறகு ரொம்பவே மாறிவிட்ட பிரேம்ஜி குடும்பம், கரியர் என்று கவனத்தை முழுக்க முழுக்க திசை திருப்பியிருக்கிறார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த அவரது மனைவி இந்துவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது.
கங்கை அமரனின் இரண்டாவது பிரேம்ஜி அமரன் வெளிநாட்டில் இசை தொடர்பான படிப்பை படித்துவிட்டு யுவன் ஷங்கர் ராஜாவிடம் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவருக்குள் இருக்கும் நடிப்பு திறமையை பார்த்த சிம்பு அவரை நடிகராக மடைமாற்றினார். அதன்படி வரிசையாக பல படங்களில் நடித்த அவர்; தனது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படங்களில் தவறாமல் இடம்பிடித்துவிடுவது வழக்கம்.
இசையமைப்பாளர் பிரேம்ஜி: இதற்கிடையே இசையமைப்பாளராகவும் ஜொலித்திருக்கிறார் அவர். நெஞ்சத்தை கிள்ளாதே, என்னமோ நடக்குது, கசடதபற, ஆர்.கே.நகர், பார்ட்டி என ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவற்றில் பார்ட்டி படம் மட்டும் ரிலீஸாகாமல் இருந்தது. அதுவும் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. இவை தவிர்த்து கோவா படத்துக்கு பின்னணி இசை அமைத்ததும் பிரேம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முரட்டு சிங்கிள்: பிரேம்ஜியின் பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை அவர் கடைசிவரை சிங்கிளாகவே தனது காலத்தை ஓட்டிவிடுவார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். அவரும் அதற்கேற்றபடிதான் பார்ட்டி உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாக இருந்தார். ஆனால் திடீரென அவருக்கு இந்து என்ற பெண் மீது காதல் மலர்ந்தது. சோஷியல் மீடியா மூலம் உருவான அவர்களது காதலுக்கு வீட்டில் உடனடியாக சம்மதம் கிடைத்தது.
திருத்தணியில் திருமணம்: சம்மதம் கிடைத்த கையோடு திருமண ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்தன. அதன்படி திருத்தணியில் கோலாகலமாக நடந்த திருமணத்தை வெங்கட் பிரபு முன் நின்று நடத்தி வைத்தார். அத்திருமணத்தில் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு ஆளே மொத்தமாக மாறினார் பிரேம். பார்ட்டி, வீட்டுக்கு இரவில் தாமதமாக வருவது என அத்தனையையும் ஓரங்கட்டி பொறுப்புள்ள குடும்பஸ்தனாக இருக்கிறார். தனது கரியரிலும், குடும்பத்திலும் மட்டுமே அவரது முழு கவனமும் இப்போது இருக்கிறது.
பிரதீப் ரங்கநாதன் கிஃப்ட் கொடுத்த நண்பர்.. டியூட் ஷூட்டிங்கில் நடந்த அந்த விஷயம்.. அட அவர்தானா இவரு?
பெண் குழந்தை: இந்நிலையில் அவரது மனைவி இந்து கர்ப்பமாக இருந்தார். சூழல் இப்படி இருக்க இன்று பிரேம்ஜி - இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள். தந்தையாகியிருக்கும் பிரேம்ஜிக்கு குடும்பத்தினர், திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். முக்கியமாக அவரது குடும்பத்தினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அவருக்கு குழந்தை பிறந்த தகவலை வல்லமை பட இயக்குநர் கருப்பையா முருகன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications