Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 5 ராசிக்காரங்க சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணிக்க அதிக வாய்ப்பிருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா?
திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒருவரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்கும் திருமணம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. சிலர் திருமணம் என்ற பந்தத்தில் இணைவதற்கு ஆர்வமாக இருக்கும்போது, சிலர் இதில் ஆர்வம் காட்டாமலும் இருக்கிறார்கள்.
திருமணத்தை தேடி நாமாக போக வேண்டுமென்ற அவசியமில்லை, உரிய நேரத்தில் அது தானாக கூடிவரும். சிலருக்கு இந்த காலகட்டம் தாமதமாக வரும், ஆனால் சிலருக்கோ இந்த காலகட்டம் அவர்கள் எதிர்பார்ப்பதற்கு முன்னாலேயே வந்துவிடும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்வதில் நம்பிக்கையும், ஆர்வமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எண்ணத்தின் படியே அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் வாய்ப்புள்ளது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்வார்கள் என்று பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷபம் காதலில் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறது, எனவே அவர்கள் விரைவில் காதலில் விழுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்கள் சிறுவயது முதலே காதல் மற்றும் சிற்றின்ப உறவுகளுக்காக ஏங்குகிறார்கள். தங்களுக்கு பிடித்த நபர்களால் சூழப்பட்டிருக்கும் போது அவர்கள் மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை குடும்ப உறவில் இணைவதற்கு காதல் மற்றும் திருமணமே சிறந்த வழி. எனவே அவர்கள் திருமண பந்தத்தில் இணைகிறார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சமூக பட்டாம்பூச்சிகள். அவர்கள் மக்களைச் சுற்றி இருப்பதையும் அவர்கள் விரும்பும் நபர்களால் சூழப்பட்டிருப்பதையும் விரும்புகிறார்கள். திருமணத்தைப் பொறுத்தவரை, அவர்கள் ஒரு துணை மற்றும் ஒரு ஆதரவான உறவின் தேவையை எப்போதும் உணர்வ்தால், அவர்கள் முன்கூட்டியே திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.
கடகம்
கடக ராசிக்காரர்களை பற்றி தெரிந்தவர்களுக்கு அவர்கள் ஏன் விரைவில் திருமணம் செய்து கொள்கிறார்கள் கடக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் உள்ள உணர்ச்சி வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய அவசியத்தை உணர்கிறார்கள். மேலும் அவர்கள் நெருக்கம் மற்றும் விசுவாசத்தை விரும்புகிறார்கள். எனவே, ஆரம்பகால திருமணம் பற்றிய எண்ணம் அவர்களை மிகவும் ஈர்க்கிறது. திருமணத்திற்கு பின் கேரியரை பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.
துலாம்
ரிஷப ராசியைப் போலவே துலாம் ராசியும் காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறது. துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு அதிகளவு அன்பைக் கொடுக்கிறார்கள், இறுதியில் அவர்கள் தனிமையாக உணர்கிறார்கள். திருமணம் என்று வரும்போது, அவர்களைப் போற்றும் மற்றும் வாழ்க்கையில் ஆதரவளிக்கும் ஒருவரை அவர்கள் விரும்புகிறார்கள். திருமணம் என்பது ஒரு இலக்கல்ல அது ஒரு நல்ல அனுபவம் என்று உணர்ந்தவர்கள் இவர்கள். அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள், அதாவது அவர்களின் 20 களின் ஆரம்பக்கட்டத்திலேயே திருமண பந்தத்திற்குள் நுழைய முயற்சிக்கிறார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சிறுவயது முதலே தாங்களாகவே விஷயங்களைக் கையாளப் பழகுகிறார்கள், ஆனால் இறுதியில் அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் மற்றும் எப்போதும் தங்களுக்கு பக்க பலமாக இருக்கும் ஒருவரை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள் என்பதால், அவர்களுக்கு அன்பு மற்றும் காதலின் தேவை அதிகரித்து வருகிறது, மேலும் இந்த தேவையை பூர்த்தி செய்ய, அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications













