Latest Updates
-
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா?
இந்த 5 ராசிக்காரங்க சின்ன சின்ன விஷயத்துக்கு கூட சண்டை போட்டு மத்தவங்க நிம்மதியை கெடுப்பாங்களாம்...!
வாழ்க்கையில் அனைத்து சூழ்நிலைகளிலும் நிதானமாக இருப்பது என்பது மிகவும் கடினமானது, ஆனால் அதேசமயம் மிகவும் நேர்மறையானதும் கூட. அப்படிப்பட்டவர்கள் அனைவருக்கும் பிடித்தவர்களாகவும், எதையும் சாதிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
துரதிர்ஷ்டவசமாக சிலர் இதற்கு முற்றிலும் நேர்மாறாக நடந்து கொள்வார்கள். சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட கோபப்பட்டு தங்கள் நண்பர்கள் அல்லது காதலர்களின் அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் கெடுப்பார்கள்.

இதனை அவர்கள் சில சமயங்களில் தெரிந்தும், பல சமயங்களில் தெரியாமலும் செய்கிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சின்ன விஷயங்களுக்குக் கூட வெடித்து சிதறுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
ராசி சக்கரத்தின் முதல் ராசியான மேஷம், உக்கிரமான மற்றும் போட்டித் தன்மைக்கு பெயர் பெற்றது. அவர்கள் சவாலான சூழல்களை ரசிக்கிறார்கள் மற்றும் ஒரு நல்ல வாக்குவாதத்தை அவர்களால் ஒருபோதும் தவிர்க்க முடியாது, அது மிகவும் பொருத்தமற்ற விஷயங்களைப் பற்றியதாக இருந்தாலும் கூட, அதனை அவர்கள் செய்வார்கள்.
அவர்களின் மனக்கிளர்ச்சிப் போக்குகள், பின்விளைவுகளை உணராமலேயே அடிக்கடி சண்டைகளை தொடங்க அவர்களைத் தூண்டுகிறது. எனவே உங்கள் மேஷ ராசி நண்பர் தொடர்ந்து சிறிய விஷயங்களுக்காக கலகத்தில் ஈடுபட்டால், அவர்களை அவர்களின் போக்கிலேயே விட்டுவிடுங்கள், எதிரில் ஆளில்லாத போது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது பயனற்றது என்று உணர்வார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அவர்கள் பிடிவாததம் மற்றும் அனைத்திலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்திற்கு பெயர் பெற்றவர்கள். இந்த குணாதிசயங்கள் சில சூழ்நிலைகளில் சாதகமாக இருந்தாலும், அவர்களை சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட வழிவகுக்கும்.
ஒரு குறிப்பிட்ட வியத்தை குறிப்பிட்ட வழியில் மட்டுமே செய்ய வேண்டுமென்று அவர்கள் அடம் பிடிப்பார்கள், நீங்கள் இணங்கவில்லை என்றால் அவர்கள் கோபப்படலாம். டீ போடுவதிலிருந்து, படுக்கையை எப்படி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது வரை, அவர்கள் சிறிய பிரச்சினைகளை பெரிய சர்ச்சைகளாக மாற்றலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள், நாடகமாடியாவது கவனத்தை ஈர்க்கும் குணம் கொண்டவர்கள், அதற்காக சில சமயங்களில் சிறிய பிரச்சினைகளுக்காக சண்டையிடுவதைக் காணலாம். அவர்களின் ஈகோ மற்றும் கவனத்தை ஈர்க்கும் தேவை அவர்களை கற்பனைக்கு அப்பாற்பட்டது.
தண்ணீரை சிந்துவது முதல் அல்லது பிறந்தநாளை மறப்பது வரை அவர்கள் சின்ன சின்ன விஷயங்களைக் கூட முழு வாக்குவாதமாக மாற்றுவார்கள். வாழ்க்கையின் மீதான அவர்களின் தீவிரமான உற்சாகம் இந்த விஷயத்தில் ஒரு ஆசீர்வாதமாகவும் சாபமாகவும் இருக்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளில் நல்லிணக்கத்தையும் சமநிலையையும் பராமரிக்கும் விருப்பத்திற்காக அறியப்படுகிறார்கள். இருப்பினும், அவர்களுக்கு எதிராக அநீதி அல்லது சமநிலையின்மையை அவர்கள் உணரும்போது, அவர்கள் எதிர்பாராத விதமாக ஒரு சிறிய பிரச்சினைக்காக கூட சண்டையிடலாம்.
இது தற்காலிக குழப்பத்தை உருவாக்குவதாக இருந்தாலும், இது சமநிலையை மீட்டெடுப்பதற்கான அவர்களின் வழியாகும். உங்கள் வாழ்க்கையில் துலாம் ராசிக்காரர்கள் அற்பமான ஒன்றுக்காக வாதிடுவது போல் தோன்றினால், அவர்கள் தங்கள் தனித்துவமான வழியில் நியாயத்தை நாடலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் உணர்ச்சி நிறைந்த தீவிரமான நபர்கள், மேலும் அவர்கள் பெரும்பாலும் மறைக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறியும் திறமையைக் கொண்டுள்ளனர். இது ஒரு மதிப்புமிக்க பண்பாக இருந்தாலும், முக்கியமற்ற விஷயங்களில் சண்டையிடுவதற்கும் இது வழிவகுக்கும்.
அவர்கள் ஏமாற்றம் அல்லது நேர்மையற்ற தன்மையை உணர்ந்தால், சிறிய பொய்க்காக கூட அவர்கள் மிகப்பெரிய கலகத்தை உருவாக்கலாம். விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் விசுவாசத்திற்கு பெயர் பெற்றவர்கள், மேலும் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்தும் அதையே எதிர்பார்க்கிறார்கள்.



Click it and Unblock the Notifications

