Latest Updates
-
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்!
இந்த 4 ராசிக்காரங்க தங்கத்திடமிருந்து பத்தடி தள்ளியேதான் நிப்பாங்களாம்... தங்கம் அணிய சுத்தமா பிடிக்காதாம்...!
தங்கம் என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த விலையுயர்ந்த ஒரு உலோகமாகும். இந்திய திருமணங்களில் தங்கத்தின் பங்கு என்பது இன்றியமையாத ஒன்றாகும். அனைத்து ரத்தினக் கற்களும் மற்றும் உலோகங்களும் எல்லோருக்கும் பொருந்தாது.
தங்கம் என்று வரும்போது, அவை கௌரவம் மற்றும் செல்வாக்கின் அடையாளமாகவும், சிறந்த முதலீட்டுக்கான உலோகம் போல் தோன்றலாம், ஆனால் ஜோதிடத்தின்படி, இது அனைவருக்கும் பொருந்தாது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்க தங்கத்திலிருந்து விலகி இருக்க வேண்டிய சில சில ராசிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாகசம் மற்றும் சுதந்திரத்தை விரும்புபவர்கள். அவர்கள் உடல்ரீதியான பயணம் மற்றும் தத்துவார்த்த பயணம் ஆகிய இரண்டிலும், ஆய்வுக்கான வலுவான விருப்பத்தைக் கொண்டுள்ளனர்.
தனுசு ராசிக்காரர்கள் தங்கத்தின் பொருள்சார்ந்த அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் போகலாம், ஏனெனில் அவர்கள் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவதிலும், உடைமைகளின் எல்லைக்கு அப்பால் அறிவு மற்றும் அனுபவங்களைத் தேடுவதிலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சாகசத்தில் தங்கம் தேவையற்ற கவனச்சிதறலாக அவர்கள் கருதலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலும் வழக்கத்திற்கு மாறானவர்களாகவும், முன்னோக்கிச் சிந்திப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். அவர்கள் சுதந்திரம் மற்றும் தனித்துவத்தை மதிக்கிறார்கள், பெரும்பாலும் சமூக விதிமுறைகளுக்கு சவால் விடுகிறார்கள்.
தங்கத்தின் பாரம்பரிய முக்கியத்துவமும் அதன் தனித்தன்மையும், கும்ப ராசிக்காரர்களின் சுதந்திரமான மற்றும் புதுமையான இயல்புடன் ஒத்துப்போகாது. அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் மற்றும் பொருளரீதியான செல்வத்தில் அவர்களுக்கு நம்பிக்கைக் கிடையாது, மேலும் தற்போதைய வழக்கமான வாழ்க்கை நிலையிலிருந்து விலகிச் செல்வதற்கான அவர்களின் விருப்பம், அவர்களை தங்கத்தை விட்டு தூரமாக அழைத்து செல்கிறது.
மேஷம்
மேஷம் பெரும்பாலும் செயல் மற்றும் சாகசத்தில் கவனம் செலுத்துகிறார்கள், அவர்கள் புதிய சவால்கள் மற்றும் அனுபவங்களைத் தேடுகிறார்கள். தங்கம், ஆடம்பரம் மற்றும் பொருள் உடைமைகளுடன் தொடர்புடையது, இது மேஷத்தின் அதிக ஆற்றல்மிக்க மற்றும் சாகச ஆளுமையுடன் ஒத்துப்போகாது.
மேஷ ராசிக்காரர்கள் தங்க நகைகளை வாங்குவதில் அல்லது அணிவதில் அதிக ஆர்வம் காட்டமாட்டார்கள், மேலூம் உற்சாகத்தையும் தூண்டுதலையும் அளிக்கும் செயல்களில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அவர்களின் ஆர்வமுள்ள மற்றும் எளிதில் மாறிக் கொள்ளக்கூடிய இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் அறிவுசார் தூண்டுதல்களை அனுபவிக்கும் விரைவான சிந்தனையாளர்கள். பாரம்பரியம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாக காணக்கூடிய தங்கம், மாற்றத்தையும் புதுமையையும் ஏற்றுக்கொள்ளும் மிதுன ராசியினரை ஈர்க்காது.
தங்கத்தால் அலங்கரித்துக் கொள்வதற்குப் பதிலாக, தகவல் தொடர்பு, சமூக தொடர்பு அல்லது அறிவுசார் நோக்கங்கள் போன்ற பிற வழிகளில் தங்களை தனித்துவமாக வெளிப்படுத்த அவர்கள் விரும்பலாம்.



Click it and Unblock the Notifications

