Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
இந்த 4 ராசிக்காரங்கள தெரியாமகூட குறை சொல்லிராதீங்க... இல்லனா உங்கள பழிவாங்காம விடமாட்டாங்க...!
சிலர் மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக ஆக்கபூர்வமான விமர்சனங்களை வழங்க விரும்புகிறார்கள். உண்மையில், நாம் மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய பலவீனமான விஷயங்களை சரி செய்தால் மட்டும்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். இருப்பினும், விமர்சனங்களை நேர்மறையாக எடுத்துக் கொள்வதில்லை.
சில ராசிக்காரர்கள் விமர்சனத்தை சரியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் கடுமையான மனப்பான்மை கொண்டவர்கள் மற்றும் அவர்களின் யோசனைகள் அல்லது எண்ணங்கள் கேள்விக்குட்படுத்தப்படுவதை வெறுக்கிறார்கள்.

விமர்சனங்களுக்கு நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பது உங்களின் ராசியைப் பொறுத்தது. சில ராசிக்காரர்கள் தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை நேர்மறையாக எடுத்துக் கொள்கிறார்கள், சிலரோ தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எதிர்மறையாக எடுத்துக் கொண்டு அதைக் கூறியவரை பழிவாங்குகிறார்கள். இந்த பதிவில் விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாத ராசிக்காரர்கள் யாரென்று பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை நீங்கள் விமரிசிக்கும் போது அவர்களின் தற்காப்பு உணர்வை நீங்கள் பார்க்கலாம். மற்றவர்கள் கூறும் விமர்சனங்களை அவர்கள் தங்கள் மீது குற்றம் சாட்டப்படுவதாக உணர்கிறார்கள். துலாம் பெரும்பாலும் எதிர்மறையான கருத்துக்களை தனிப்பட்ட விமர்சனமாக எடுத்துக் கொள்கிறார்கள். நேர்மறையான விமர்சனம் என்ற வார்த்தை இவர்களின் அகராதியிலேயே இல்லை. எனவே துலாம் ராசிக்காரர்களிடம் பேசும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
அவர்கள் ஒரு சுயநலமில்லாத ராசிக்காரர்கள், அவர்கள் தங்களை சுற்றியிருக்கும் அனைவருக்கும் உதவ விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்களை விமர்சிப்பதை அவர்கள் வெறுக்கிறார்கள்.
மீனம்
விமர்சனங்களை எதிர்மறையாக எடுத்துக்கொள்ளும் ராசிகளில் மீன ராசியும் ஒன்று. அது அவர்களின் தன்னம்பிக்கையைக் குலைத்து, அவர்களை தனிமைப்படுத்துகிறது. மேலும், மீன ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவதால், விமர்சனங்களின் போது உடனடியாக வெடித்துச் சிதறுகிறார்கள். அவர்கள் விமர்சனத்தை தங்களுக்கு எதிரான ஆயுதமாக எடுத்துக்கொள்ள முனைகிறார்கள்.
இது அவர்களின் சுயமரியாதையை காயப்படுத்துகிறது. உங்களுக்கு மீன ராசி நண்பர் இருந்தால், அவர்களை ஒருபோதும் விமர்சிக்க முயற்சிக்காதீர்கள். எதிர்மறையான அல்லது மாறாக ஆக்கபூர்வமான விமர்சனங்களைப் பற்றி சிந்திப்பதைத் தவிர்ப்பதற்காக அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்களை விமர்சிப்பவர்களின் உறவை துண்டிக்க முனைகிறார்கள், ஏனெனில் அவர்கள் விமர்சனங்களால் எளிதில் தூண்டப்படுகிறார்கள். அவர்கள் விமர்சனத்திற்கு தகுதியானவர்கள் என்று நினைத்தால், அவர்கள் அதை நேர்மறையாக எடுத்துக்கொள்வார்கள். இருப்பினும், பெரும்பாலான நேரங்களில் அவர்கள் தங்கள் மீதான எதிர்மறையான விமர்சனங்களால் பாதிக்கப்படுகிறார்கள். அது அவர்களை மிகவும் காயப்படுத்துகிறது மற்றும் அது அவர்களின் மனதை குழப்புகிறது.
மேலும், அவர்கள் அந்த எதிர்மறையான கருத்துக்களை மறக்க நீண்ட காலம் எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களின் மனநிலை ஊசலாட்டம் உங்களை பழிவாங்க தூண்டலாம். இருப்பினும், அவர்கள் விரைவில் சகஜ நிலைக்குத் திரும்புவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் விமர்சனங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஆனால் அதனை நேர்மறையானதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏனெனில், அவர்கள் தங்களை பரிபூரணவாதிகளாகக் கருதுகிறார்கள், மேலும் யாரோ ஒருவர் தங்கள் வேலையைப் பற்றி கருத்து தெரிவிப்பது அவர்களின் மனநிலையை பாதிக்கிறது.
யாராவது அவர்களுக்கு அறிவுரை கூறும்போது அல்லது விமர்சிக்கும் போது, குறிப்பாக அவர்களை விட தகுதி குறைவான ஒருவர் அதனை செய்யும் போது மிகவும் வெறுப்புக்கு ஆளாகிறார்கள்.



Click it and Unblock the Notifications

