Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
இந்த 4 ராசிக்காரங்க மாதிரி பேரம் பேச யாராலும் முடியாதாம்... இவங்ககிட்ட எல்லாரும் கத்துக்கணும்...!
ஒவ்வொரு ராசியும் ஒரு தனித்துவமான ஆற்றலையும், திறமையையும் கொண்டுள்ளது. சில ராசிக்காரர்கள் மற்றவர்களால் செய்ய முடியாத வேலையை செய்பவர்களாக இருக்கிறார்கள். அதில் முக்கியமானது பணத்தை சேமிப்பது. பணத்தை சேமிப்பது என்றால் செலவுகளைக் குறைத்து பணத்தை சேமிப்பது மட்டுமில்லை, செய்யும் செலவுகளிலும் பேரம் பேசி செலவைக் குறைப்பது.
பேரம் பேசுவதற்கு அதிக பொறுமையும், பொறுப்புணர்வும் அதேசமயம் தைரியமும் வேண்டும். இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் இருப்பதில்லை. சில ராசிக்காரர்களுக்கு மட்டுமே இந்த அத்தியாவசிய திறமை உள்ளது.

இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் பேரம் பேசுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்துவார்கள். மிகவும் லாஜிக்காக சிந்திப்பதால் அவர்கள் தங்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை சுயபரிசோதனை செய்கிறார்கள். ஒரு பரிபூரணவாதியாக இருப்பதால், அவர்கள் சிறந்த பொருட்களை வாங்க முனைகிறார்கள். அது என்னவாக இருந்தாலும், சமையலறை பாகங்கள், வீட்டுப் பொருட்கள், ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் விமானப் பயணங்கள் என எதுவாக இருந்தாலும் குறைந்த கட்டணத்தில் சிறந்ததை வாங்குவதற்கான வழியைக் காண்கிறார்கள். கன்னி ராசியின் நண்பர்கள் எப்பொழுதும் அவர்களின் இந்த திறமை மீது பொறாமைப்படுவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் எப்போதும் சிறந்தவற்றைத் தேடுவதால், அவர்களின் பேரம் பேசும் திறன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். புதிய மின்னணு பொருட்களையும், எலக்ட்ரானிக் சாதனங்களையும் வாங்குவதில் எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள். எந்தவொரு பொருளையும் அவர்கள் சொன்ன விலைக்கு வாங்க மாட்டார்கள், அவர்கள் நினைத்த விலைக்கு வியாபாரிகளை இழுத்து விடுவார்கள். அவர்கள் கையில் இருக்கும் பணம் எப்போதும் கரையாது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் கடினமாக உழைக்கிறார்கள், தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும் வரை கைவிட மாட்டார்கள். அதனால்தான் அவர்கள் பேரம் பேசுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் வழக்கமான வாடிக்கையாளர்களாக இருக்கும் கடைக்காரர்கள் அவர்களைப் பார்த்தாலே பயப்படுவார்கள். ஏதாவது ஒரு பொருளை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டால் அவர்களால் அன்று நிம்மதியாக தூங்கவே முடியாது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அசாதாரணமான பேரம் பேசும் திறமைக் கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் தங்கள் பணத்தை சேமிக்க போராட தயாராக இருப்பார்கள். ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் பொருள்சார்ந்தவராகவே இருந்தாலும், சிக்கனமாக இருப்பதன் மூலம் தேவையற்ற செலவினங்களை எங்கு தவிர்க்கலாம் என்பதையும் அவர்கள் அறிவார்கள். பொறுமையானவராக இருப்பதால், ரிஷப ராசிக்காரர்கள் எதையும் வாங்குவதற்கு முன் தங்கள் விருப்பங்களை பற்றி சிந்திக்க நேரம் எடுத்துக் கொள்வார்கள். இதன் விளைவாக, அவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தக்கூடிய பொருட்களை வாங்க முனைகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் "பேரம்" என்ற வார்த்தையை குறைந்த விலை என்று வரையறுக்கவில்லை, ஆனால் பேரம் என்பதன் வரையறையை ஒட்டுமொத்த மதிப்பாகப் பார்க்கிறார்கள்.



Click it and Unblock the Notifications

