சோகமாக இருப்பதற்காகவே பிறந்த 4 ராசிகள் இவங்கதான்...துரதிர்ஷ்டத்தின் செல்ல பிள்ளைகளாம் இவங்க... உங்க ராசி என்ன?

ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒரு தனித்துவமான குணாதிசயமும், பலமும் இருக்கும். ஒருவரின் பிறந்த ராசி அவர்களின் ஆளுமையை வடிவமைப்பதில் முக்கியப்பங்கு வகிப்பதாக ஜோதிடம் கூறுகிறது. சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை. இயல்பிலேயே அவர்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்களாக இருப்பார்கள்.

சில ராசிக்காரர்கள் இதற்கு முற்றிலும் எதிர்மறையாக வாழ்க்கை முழுவதும் சோகமாக இருப்பார்கள். அவர்கள் சின்ன சின்ன விஷயங்கள் கூட அவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தக்கூடும். சில சமயங்களில் அவர்களின் பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி மற்றவர்களின் பிரச்சினைகளுக்காகவும் அவர்கள் மனசோர்வடைவார்கள். அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் சவால்களும், பிரச்சினைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சோகமான வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Zodiac Signs Who Are Always Sad

கடகம்

கடக ராசிக்காரர்கள் சந்திரனால் ஆளப்படுபவர்கள். அவர்களின் இரக்க குணம் அவர்களை மற்றவர்களின் உணர்வுகளுக்கு மிகவும் இணக்கமானவர்களாக மாற்றுகிறது. மற்றவர்களின் உணர்வுகளுடனான இந்த நெருங்கிய தொடர்பு சில நேரங்களில் அவர்களைப் பெரும் மனச்சுமைக்கு ஆளாக்கி, ஆழ்ந்த துக்கத்திற்கு உள்ளாக்குகிறது.

கடக ராசிக்காரர்கள் அவர்களின் அக்கறையான குணங்களுக்காக அறியப்படுகிறார்கள், மேலும் மற்றவர்களுடனான அவர்களின் இணக்கம் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வந்தாலும், அது அவர்களை அதிக எளிதில் பாதிப்புக்குள்ளாபவர்களாகவும் மாற்றுகிறது. அவர்கள் தங்களின் உணர்வுகளை விட மற்றவர்களின் உணர்வுகளுக்காக சோகமாக இருப்பார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் மாற்றத்தின் கிரகமான நெப்டியூனால் ஆளப்படுகிறார்கள். அவர்களின் ஆழ்ந்த உணர்ச்சி உணர்திறன் அவர்களுக்கு நேர்மறையான பலன்களை வழங்கும் அதேநேரத்தில் எதிர்மறையான பலன்களையும் வழங்குகிறது. இது அவர்களை மற்றவர்களுடன் ஆழமான மட்டத்தில் இணையச் செய்தாலும், அது அவர்களைச் சுற்றியுள்ள சூழலில் இருந்து எதிர்மறை ஆற்றல்களை உள்வாங்கவும் அதற்காக எளிதில் சோகமடைபவர்களாகவும் மாற்றுகிறது.

மீன ராசிக்காரர்களின் இயல்பான பச்சாதாபம் பெரும்பாலும் அவர்களுக்குத் துயரத்தையே ஏற்படுத்துகிம், ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த உணர்வுகளை மட்டுமல்லாமல், தங்களைச் சுற்றியுள்ளவர்களின் உணர்வுகளாலும் எளிதில் பாதிப்படைவார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட இயல்பைக் கொண்டவர்கள். அவர்களின் வலுவான உணர்ச்சி பிணைப்புகள் அவர்களை ஆழ்ந்த சோகத்திற்கு ஆளாக்குகின்றன. விசுவாசம் மற்றும் நம்பிக்கையான உறவுகள் மீதான அவர்களின் ஆழ்ந்த ஆசை, வஞ்சகம் அல்லது நேர்மையில்லாத உறவுகளை எதிர்கொள்ளும்போது ஏமாற்றத்தையும், சோகத்தையும் அனுபவிக்க வழிவகுக்கும். விருச்சிக ராசியினரின் உள்ளுணர்வு அவர்களை எப்போதும் உண்மைகளைத் தேட தூண்டுகிறது, இது இறுதியில் அவர்களுக்கு சோகத்தையேப் பரிசாக தருகிறது.

கன்னி

புத்திக்கூர்மையின் கிரகமான புதனால் ஆளப்படும் எதார்த்த அணுகுமுறை கன்னி ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பது ஆச்சரியமாகத் தோன்றலாம். அவர்களின் உணர்ச்சிவசப்படும் தன்மைக்குக் காரணம், அவர்களின் ஆழ்ந்த பொறுப்புணர்வும், சூழ்நிலைகளை தேவைக்கு அதிகமாக அலசி ஆராயும் போக்கும் ஆகும்.

இந்த தொடர்ச்சியான சுயவிமர்சனம் தாங்கள் எந்த விஷயத்திற்கும் தகுதியற்றவர் என்ற உணர்விற்கும் சோகத்திற்கும் வழிவகுக்கும். கன்னி ராசிக்காரர்களின் உயர்ந்த இலட்சியங்களும், பர்பெக்ட்டாக இருக்க வேண்டும் என்ற தீவிர தேடலும் சில சமயங்களில் அவர்களையே அவர்களின் கடுமையான விமர்சகர்களாக மாற்றி, அவர்களை துன்பத்திற்கு ஆளாக்குகின்றன.

Desktop Bottom Promotion