Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
20 லட்சம் எலும்புக்கூடுகளை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்த இந்திய நகரம்... நடுங்க வைக்கும் இந்திய வரலாறு...!
கொல்கத்தா 'மகிழ்ச்சியின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் கலாச்சார தலைநகரமாக, கொல்கத்தா அதன் செழுமையான பாரம்பரியம், அறிவுசார் மரபு மற்றும் கலை உணர்வு ஆகியவற்றிற்காக புகழ்பெற்றது. இந்த நகரத்தின் தெருக்கள் வரலாற்று அடையாளங்கள், சந்தைகள் மற்றும் எங்கும் நிறைந்திருக்கும் வரலாற்று அடையாளங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்த கலாச்சார சிறப்பு வாய்ந்த நகரத்தின் பின்னணயில் ஒரு மோசமான இருண்ட பக்கம் உள்ளது, இது கேட்பதற்கு மிகவும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கலாம். உலகின் பல நாடுகளுக்கு எலும்புக்கூடுகளை ஏற்றுமதி செய்த இடமாக கொல்கத்தா இருந்தது. முன்னணி இதழின் அறிக்கையின் படி, கொல்கத்தா 200 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்களின் எலும்புக்கூடுகளை வைத்து நடக்கும் சர்வதேச வர்த்தகத்தின் மையமாக உள்ளது, இது உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு உடற்கூறியல் மாதிரிகளை வழங்கியுள்ளது.

இந்த மர்மமான மற்றும் வினோதமான வணிகம் பிரிட்டிஷ் காலத்தில் செழித்திருந்தது, இருபதாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. இந்த எலும்புக்கூடு எச்சங்களின் நெறிமுறைகள் பற்றிய கேள்விகள் எழுகின்றன. இந்த வணிகம் எவ்வளவு நெறிமுறையாக இருந்தது மற்றும் இந்த எலும்புக்கூடுகள் எங்கிருந்து வந்தது?
இந்த செய்தி பற்றிய அறிக்கைகள் உண்மையாக இருந்தால், கொல்கத்தாவில் மனித எலும்புக்கூடுகள் வர்த்தகம் செய்யப்பட்டதை பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திலேயே அறியலாம். இந்த நேரத்தில், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் உடற்கூறியல் மாதிரிகளுக்கான தேவை அதிகரித்து வந்தது.
இந்த தேவையைப் பயன்படுத்தி வியாபாரம் செய்ய, இந்திய கல்லறைகளில் இருந்து உடல்களை தோண்டி எடுக்க கல்லறை கொள்ளையர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்த உடல்கள் பின்னர் பதப்படுத்தப்பட்டு, நேபாளம் வழியாக, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் ஏற்றுமதிக்குத் தயார் செய்யப்பட்டன என்று அறிக்கை கூறுகிறது.
இந்த ஏற்றுமதி செய்யப்பட்ட எலும்புக்கூடுகள் முதன்மையாக மருத்துவமனைகள் மற்றும் கல்லறைகளில் கைவிடப்பட்ட உரிமை கோரப்படாத மனித சடலங்களிலிருந்து பெறப்பட்டன. குறிப்பாக வங்காளம், ஜார்கண்ட், பீகார் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து, கல்லறை தோண்டுபவர்கள் கல்லறைகளை தோண்டினர். இந்த இடங்களில் பெரும்பாலானவை திறந்தவெளியில் இருந்தன மற்றும் பாதுகாப்பற்றவையாக இருந்தது. எனவே கல்லறைக் கொள்ளையர்களின் வேட்டை மிகவும் எளிதாக இருந்தது.
கல்லறை கொள்ளை மட்டுமின்றி மருத்துவமனைகள் மற்றும் பிணவறைகளில் இருந்து உரிமை கோரப்படாத உடல்களும் முக்கிய குறியாக இருந்தன. இந்த உடல்கள், பெரும்பாலும் ஆதரவற்ற தனிநபர்கள் அல்லது குடும்பங்கள் இல்லாதவர்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிறுவனங்களின் அதிக தேவையைப் பூர்த்தி செய்வதற்காக எலும்புக்கூடுகள் கவனமாக சுத்தம் செய்யப்பட்டு ஏற்றுமதிக்கு தயார் செய்யப்பட்டன.
சட்டவிரோதமான இந்த வியாபாரத்தை நிறுத்த பல தடைகள் மற்றும் சட்டங்கள் இருந்தபோதிலும், இந்த வர்த்தகம் பல தசாப்தங்களாக தொடர்ந்தது. ஆகஸ்ட் 16, 1985 அன்று இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மனித எச்சங்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் சில வியாபாரிகள் எலும்புக்கூடுகளைப் பெறுவதற்கு மக்களைக் கொலை செய்யும் அளவுக்குச் சென்றார்கள். 1952 ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில், ஒரு குறுகிய கால தடை விதிக்கப்பட்டது, தொழில் வளர்ச்சியடைந்ததால் அதை நடத்த முடியவில்லை. இந்த நடைமுறைகள் மற்றும் தடைகள் பெரும்பாலும் இலாபத்தை பாதித்தது, இது கொல்கத்தாவின் வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயத்திற்கு வழிவகுத்தது.
1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கொல்கத்தாவை மையமாகக் கொண்ட நிறுவனமான யங் பிரதர்ஸ், தடைக்கு மத்தியிலும் தொடர்ந்து செயல்பட்டு வந்த குறிப்பிடத்தக்க நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் எலும்புக்கூடு பொருட்கள் உட்பட மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி மாதிரிகளின் முன்னணி தயாரிப்பாளராகவும் சப்ளையர்களாகவும் இருந்தது.
அறிக்கைகளின்படி, 1947 இல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவிலிருந்து மனித எலும்புக்கூடுகளின் ஏற்றுமதி தொடர்ந்து அதிவேகமாக வளர்ந்தது. கொல்கத்தா ஏற்றுமதியாளர்கள் 1985 தடைக்கு முன்புவரை கிட்டத்தட்ட $1.5 மில்லியன் மதிப்புள்ள எலும்புக்கூடுகளை வர்த்தகம் செய்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, சில அறிக்கைகள் $5-6 வரை இருக்கும் என்று கூறுகிறது. கொல்கத்தாவில் இருந்து மட்டும் 60,000 மண்டை ஓடுகள் அனுப்பப்பட்டதாக அறிக்கைகள் கூறுகிறது. 1947 முதல் 1985 வரை, 2.4 மில்லியன் இந்திய எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக அறிக்கைகள் கூறுகிறது.



Click it and Unblock the Notifications

