Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 5 ராசிக்காரங்க பணத்தை கண்மூடித்தனமாக செலவு செய்வார்களாம்... சேமிக்கும் பழக்கமே இவங்களுக்கு இருக்காது!
தற்போதைய காலக்கட்டத்தில் ஒருவரின் சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கும் சக்திவாய்ந்த காரணியாக இருப்பது பணம் மட்டுமே. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இதுதான் கசப்பான உண்மை. தங்களுடைய சமூக அந்தஸ்தை வெளிக்காட்ட பணத்தை செலவழிக்கும் மோசமான பழக்கம் இப்போது அனைவரிடமும் அதிகரித்து வருகிறது. அதனால்தான் ஆடம்பர தேவைகள் இப்போதும் அடிப்படைத் தேவைகளாக மாறி வருகிறது.
அனைவரும் பணத்தை செலவழித்தாலும் சில ராசிக்காரர்கள் மற்றவர்களை விட பணத்தை மிகவும் அலட்சியமாக கையாளுகிறார்கள் மற்றும் ஆடம்பரமாக செலவழிக்கிறார்கள். அவர்களுக்கு பணத்தை சேமிப்பதை விட அவர்களின் ஆசைகள் நிறைவேற்றப்படுவதே முக்கியம்.

அவர்கள் தங்கள் வரவு, செலவுகளைப் பற்றி ஒருபோதும் கவலைப்படுவதில்லை. ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்ற பணத்தை தண்ணி போல செலவழிப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு
சிலர் தங்கள் பணமாக இருந்தால் மட்டுமே பணத்தை ஆடம்பரமாக செலவழிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர், ஆனால் தனுசு ராசிக்காரர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. தனுசு ராசிக்காரர்கள் மற்றவர்களின் பணத்தில் தங்கள் ஆசைகளை நிறைவேற்றவும் தயங்க மாட்டார்கள், செலவைப் பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக, தனுசு ராசிக்காரர்களின் ஆசைகள் எப்போதும் ஒரு எல்லைக்குள் மட்டுமே இருக்கும்.
தனுசு ராசிக்காரர்கள் உடைகள், அணிகலன்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு பணம் செலவழிப்பார்கள். மேலும் இந்த ஆடம்பரங்களுக்கு செலவு செய்யும் போது அவர்கள் பில்லை பற்றி கவலைப்படவே மாட்டார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் உணர்ச்சிகளை சமநிலைப்படுத்துவதில் நல்லவராக இருக்கலாம், ஆனால் பணத்தை சமநிலைப்படுத்தும் விஷயத்தில் துலாம் ராசிக்காரர்கள் சற்று சறுக்குகிறார்கள். பொருளாதார ஆசைகளின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுவதால், துலாம் ராசிக்காரர்கள் பல விஷயங்கள் மீது ஆசைப்படுகிறார்கள் , மேலும் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை அவர்கள் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை. உண்மையில், துலாம் ராசிக்காரர்கள் தங்களின் இந்த ஆளுமையைப் பற்றி அறிந்திருந்தாலும் , அதைப்பற்றி கவலைப்படுவதில்லை.
ஒரு பொருளை வாங்க வேண்டுமென்று அவர்கள் நினைத்தால் அவர்கள் அதனை உடனடியாக வாங்க வேண்டுமென்று நினைப்பார்கள். ஏனெனில் தாமதமானால் அந்த பொருளின் மீதான ஈர்ப்பை இழந்து விடுவோம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் தங்களை விட பிறருக்காக செலவு செய்ய ஆசைப்படுவார்கள். மீனம் வளர்ச்சியின் கிரகமான வியாழனால் ஆளப்படுவதால், அவர்கள் வாழ்க்கையில் அர்த்தமுள்ள அனுபவங்களைத் தேடுகிறார்கள், மேலும் இதுபோன்ற அனுபவங்களைத் தங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கான ஒரு வழியாக பணத்தைக் கருதுகிறார்கள். மீன ராசிக்காரர்கள் தங்களின் மோசமான மனநிலையில் இருந்து தப்பிக்க ஷாப்பிங் அல்லது திரைப்படம் செல்வது போன்ற விஷயங்களை செய்கிறார்கள்.
மீனம் பணத்தை சேமிக்க முடியாததற்கு மற்றொரு காரணம், அவர்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள். அன்பான இராசி அறிகுறிகளில் ஒன்றான மீன ராசிக்காரர்கள், யாராவது அவர்களிடம் ஏதேனும் உதவி கேட்டால், அவர்கள் மிகவும் அன்பானவர்கள் மற்றும் அவர்கள் தங்கள் இதயத்தை மட்டுமல்ல, பணப்பையையும் திறக்க வேண்டும் என்று கொடுக்கிறார்கள். மேலும் கடனாக கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்பதிலும் அவர்களுக்கு சிரமம் உள்ளது.
மேஷம்
மேஷம் ஆவேசமான செலவுகளில் ஈடுபடும் ஒருவர். அவர்களின் உள்ளார்ந்த தூண்டுதல்தான் அவர்களை அதிக செலவு செய்ய தூண்டுகிறது. மேஷ ராசிக்காரர்கள் தங்களின் விருப்பங்களை தங்களின் தேவைகளாக மாற்றிக் கொள்கிறார்கள், மேலும் நாளின் முடிவில் பணத்தை மிச்சப்படுத்துவது என்பது அவர்களால் முடியாததாக மாறிவிடுகிறது.
மேஷம் செவ்வாயால் ஆளப்படுகிறது, இது மேஷத்தில் சலனத்தைத் தூண்டுகிறது. அவர்கள் தங்கள் ஆசைகளை மறுக்க விரும்புவதில்லை, எனவே அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்கின்றனர்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் இரட்டை ஆளுமையே அவர்களின் குறைவான சேமிப்பிற்குக் காரணம். இந்த ராசிக்காரர்கள் இயல்பிலேயே ஹைப்பர் மனநிலை உடையவர்கள், எனவே அவர்கள் எப்போது எதற்காக செலவிடுவார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது. மிதுன ராசிக்காரர்களின் இரட்டைத்தன்மை அவர்களை மிகவும் முக்கியமான விஷயங்களுக்காக உண்மையில் சேமிக்கும் ஒருவராக ஆக்குகிறது. ஆனால், மறுபுறம் வாழ்க்கை போரடிக்கும் போது தங்களின் மொத்த சேமிப்பையும் கரைத்து விடுவார்கள்.
மிதுன ராசிக்காரர்களுக்கு எதற்கு பணத்தை செலவழிக்க வேண்டும் மற்றும் எதற்காக செலவழிக்கக் கூடாது என்று வழிநடத்த ஒருவர் எப்போதும் உடனிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் கண்மூடித்தனமாக பணத்தை செலவழிப்பார்கள்.



Click it and Unblock the Notifications













