Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
இந்த 5 ராசிக்காரங்க துரோகிகளை கூட பழிவாங்காமல் மன்னிக்கும் நல்லவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி என்ன?
வாழ்க்கையில் நாம் அனைவருமே ஏதாவது ஒரு தருணத்தில் துரோகத்திற்கு ஆளாகியிருப்போம். ஆனால் அந்த துரோகத்திற்கு நாம் எப்படி ரியாக்ட் செய்கிறோம் என்பதை பொறுத்தே நாம் எப்படிப்பட்டவர்கள் என்பது கணிக்கப்படுகிறது. சிலர் பழிவாங்க கிளம்புவார்கள் அல்லது சிலர் மன்னிப்பு என்னும் மிகப்பெரிய ஆயுதத்தை தேர்ந்தெடுப்பார்கள்.
சிலர் தங்களுக்கு துரோகம் செய்தவர்களை மன்னிக்கும் உயர்ந்த குணத்தைக் கொண்டிருப்பார்கள். இந்த தனித்துவமான குணம் அவர்களின் பிறந்த ராசியின் மூலம் வரலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சில ராசிக்காரர்கள் பழிவாங்குதலை விட மன்னிப்பை நோக்கி அதிக நாட்டம் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள், பழிவாங்கும் தூண்டுதலின் பாதையில் இருந்து விலகிச் செல்கிறார்கள். இந்த பதவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை மன்னிக்கும் உயர்ந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மன்னிப்பதில் மேஷ ராசிக்காரர்கள் முன்னோடியாக இருக்கிறார்கள். ஆக்ரோஷமான மற்றும் உணர்ச்சிவசப்பட்ட இயல்புக்கு பெயர் பெற்ற மேஷ வெறுப்புணர்வைத் தாண்டி உயரும் வலிமையைக் கொண்டுள்ளனர்.
துரோகத்தை எதிர்கொள்ளும் போது, மேஷ ராசிக்காரர்கள் பழிவாங்குவதை விட தனிப்பட்ட வளர்ச்சியில் தங்கள் ஆற்றலை செலுத்துகிறார்கள். மேஷ ராசிக்காரர்கள், துரோகம் செய்த நண்பர்களை பழிவாங்குவதற்குப் பதிலாக, முன்னேற்றத்தை நோக்கி அவர்களை வழிநடத்துவதைத் தேர்ந்தெடுப்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சிறந்த தொடர்பாளர்கள், அவர்கள் மன்னிப்பை ஒரு தனித்துவமான உத்தியுடன் அணுகுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறார்கள், இது மோதல்கள் மற்றும் துரோகங்களை எளிதாக கடக்க அவர்களுக்கு உதவுகிறது.
ஒரு திறந்த உரையாடலைத் தொடங்கி, புரிதலை உருவாக்கி, அவர்களை மன்னிப்பதன் மூலம் மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்கிறார்கள்.
துலாம்
சிறந்த இராஜதந்திரிகளான துலாம் ராசிக்காரர்கள், சமநிலை மற்றும் நல்லிணக்கத்தில் இயற்கையான விருப்பத்தைக் கொண்டுள்ளனர். துரோகத்தை எதிர்கொள்ளும் போது, பழிவாங்குதல் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் விளைவுகளை அவர்கள் கவனமாக எடைபோடுகிறார்கள்.
துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களின் கருத்து வேறுபாடுகளை மன்னித்து, அவர்களின் உறவில் சமநிலையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மன்னிப்பை ஒரு நம்பிக்கையான கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள், சவாலான சூழ்நிலைகளில் எப்போதும் அதிலுள்ள நேர்மறை அம்சத்தைத் தேடுவார்கள். அவர்களின் சாகச மனப்பான்மை கடந்த கால குறைகளை நகர்த்த அனுமதிக்கிறது, பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகரத் தூண்டுகிறது.
தனுசு ராசிக்காரர்கள் துரோகம் செய்தவர்களை மன்னித்து, அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்துவார்கள்.
கும்பம்
தொலைநோக்கு சிந்தனைக்கு பெயர் பெற்ற கும்ப ராசிக்காரர்கள், தங்கள் புத்திசாலித்தனம் மூலம் பழிவாங்கும் தேவையை புறக்கணிக்கிறார்கள். எப்போதும் பெரிய விஷயங்களை சிந்திக்கும் அவர்களின் திறன் மன்னிக்க உதவுகிறது, கோபத்தை வைத்திருப்பது தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். தங்களுக்கு துரோகம் செய்தவர்கள் எந்த சூழலில் அதனை செய்தார்கள் என்று சிந்திக்கும் உயரிய குணம் அவர்களிடம் இருக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
