Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
எப்போதும், எதிலும் ஜெயிக்கும் புத்திசாலித்தனம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு கூடவே பிறந்ததாம்... உங்க ராசி என்ன?
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. அனைவராலும் போரில் ஈடுபட்டு ஜெயிக்க முடியாது, அதற்கான காலகட்டமும் இதுவல்ல. நம்மால் முடிந்ததெல்லாம் உடனிருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஜெயிப்பதுதான், ஆனால் அதுவும் அனைவராலும் முடியுமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
ஒரு வாக்குவாதத்தில் எப்படி வெல்வது என்பதை அறிவது எல்லோராலும் முடியாது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்கள் இதை எப்படி செய்வது என்று நன்கு அறிந்தவர்கள். இதனை நன்கு அறிந்தவர்கள் வேண்டுமென்றே விவாதங்களில் ஈடுபட்டு தங்கள் திறமையை நிரூபிக்க விரும்புவார்கள்.

அவர்கள் அனைத்தையும், அனைவரையும் வெல்ல முனைகிறார்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் எப்போதும் வாக்குவாதங்களில் வெற்றி வகை சூட விரும்புகிறார்கள். தங்கள் திறமையால் எப்போதும் வாக்குவாதத்தில் வெற்றிபெறக் கூடிய புத்திசாலி ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசி ஒரு போர்வீரரின் அடையாளம், அவர்களின் நாக்கே போர்வாள் போல எதிரில் இருப்பவர்களை காயப்படுத்தும். தங்களின் கருத்துக்கள் மற்றும் நம்பிக்கையை பாதுகாக்க அவர்கள் தங்கள் பேச்சாற்றலை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.
ஒவ்வொரு வாக்குவாதமும் அவர்களுக்கு போரில் ஈடுபடுவது போன்றதுதான். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், போரில் எப்போதும் அவர்கள்தான் வெல்வார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பேச்சாற்றலிலும், தகவல் தொடர்பிலும் சிறந்தவர்கள். எனவே அவர்கள் நிறைய நபர்களுடன் பேசுவார்கள் மற்றும் தங்களால் முடிந்தவரை தகவல்களைப் பெறுவார்கள். இது அவர்கள் அனைவரையும் பற்றிய பல தகவல்களும் கொண்ட நூலகமாக அவர்களை மாற்றுகிறது, அதை அவர்கள் பயன்படுத்தி எளிதாக வாதத்தில் வெற்றி பெறலாம்.
சிம்மம்
சிங்கம் காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது, அதனாள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது அதற்கு நன்றாகவே தெரியும். இந்த குணம் சிம்ம ராசிக்காரர்களுக்கும் பொருந்தும்.
ஒரு வாக்குவாதத்தில் ஈடுபடும் முன் அவர்கள் உண்மைகள், புள்ளிவிவரங்கள், ஆராய்ச்சி மற்றும் முழு தகவல்களுடன் தயாராக இருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் எப்பொழுதும் எந்த வாதத்திலும் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள், ஏனெனில் அவர்கள் ஜெயிப்பதற்கான வழிகளை முன்கூட்டியே அறிவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் எந்த விஷயத்திலும் முடிவெடுக்க முடியாதவர்கள் என்று அறியப்படுபவர்கள், ஆனால் அவர்கள் உண்மையில் விரும்புவது சமநிலை மற்றும் நியாயத்தை மட்டுமே. அவர்கள் பேரம் பேசுவதில் சிறந்தவர்கள் என்பதால் கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் வாதத்தில் வெற்றி பெறுகிறார்கள்.
அவர்கள் புத்திசாலிகள் மற்றும் எதிரில் இருப்பவர்களின் ஈகோவை திருப்திப்படுத்தும் அதே வேளையில் தங்கள் வெற்றியை எப்படிப் பெறுவது என்பது அவர்களுக்குத் தெரியும். தாங்கள் வென்றது எதிரிக்கே தெரியாத வண்ணம் ஜெயிப்பதில் அவர்கள் கில்லாடிகள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதக்காரர்கள். அவர்கள் மற்றவர்களால் தூண்டப்படாத வரை ஒருபோதும் வாக்குவாதங்களில் ஈடுபட மாட்டார்கள். ஆனால் அவர்கள் வாக்குவாதத்தைத் தொடங்கிவிட்டால் அவர்கள் வெற்றிபெறும் வரை எத்தனை மணி நேரமானாலும் அதனை தொடருவார்கள். மிக மிக அரிதாகவே அவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்வார்கள்.



Click it and Unblock the Notifications

