Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
இந்தியாவின் அலெக்ஸாண்டர் என்று தன்னைத்தானே அழைத்துக்கொண்ட ராஜா யார் தெரியுமா?
இந்திய வரலாறு பல சக்திவாய்ந்த ஆட்சியாளர்களைக் கண்டுள்ளது. இருப்பினும். அக்பர், இராஜ ராஜ சோழன், இராஜேந்திர சோழன், அசோகர் போன்ற பல அரசர்கள் இந்திய வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர். சில ஆட்சியாளர்கள் தங்களின் ஆற்றல், வெற்றிகள், தொலைநோக்குப் பார்வை மற்றும் சாதனைகள் மூலம் வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துள்ளனர்.
அப்படி இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத அடையாளத்தை உருவாக்கிய ஆட்சியாளர்களில் ஒருவர் கல்ஜி வம்சத்தின் இரண்டாவது பேரரசரான அலாவுதீன் கல்ஜி ஆவார், அவர் தன்னை "இரண்டாவது அலெக்சாண்டர்" அல்லது சிகந்தர்-இ-சானி என்று அழைத்துக் கொண்டார்.

அலாவுதீன் கல்ஜி
அலாவுதீன் கல்ஜி டெல்லி சுல்தானகத்தை மிகுந்த ஆர்வத்துடன் ஆட்சி செய்தார், பல முக்கியமான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார், மேலும் பல பிரமாண்ட வெற்றிகள் மூலம் தனது பேரரசை விரிவுபடுத்தினார். அவரது வீரமும், வலுவான தலைமைத்துவமும் இந்தியாவை மங்கோலிய படையெடுப்புகளிலிருந்தும் பாதுகாத்தது.
இரண்டாம் அலெக்ஸ்சாண்டர் என்று அழைத்துக்கொண்ட அரசர் யார்?
அலாவுதீன் கல்ஜி தன்னை இரண்டாம் அலெக்சாண்டர் என்று அறிவித்துக் கொண்டார். கல்ஜி வம்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஆட்சியாளர்களில் ஒருவராக அவர் விளங்கினார். விலை மற்றும் வருவாய் கொள்கையில் பல சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டார். தனது ஆட்சிக் காலத்தில், ஏராளமான நிர்வாக சீர்திருத்தங்களை அவர் மேற்பார்வையிட்டார், மேலும் உலகையே நடுங்க வைத்த மங்கோலிய படையெடுப்பை இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுத்தார். உலகத்தையே கைப்பற்ற வேண்டும் என்ற லட்சியம் அவருக்கு இருந்ததால், அவர் தனது நாணயங்களில் தன்னை "சிக்ரா-இ-சானி" என்று சித்தரிக்கத் தொடங்கினார்.
கில்ஜி வம்சத்தின் இரண்டாவது பேரரசராக அலாவுதீன் கல்ஜி பதவி வகித்தார். அலெக்சாண்டர் போலவே உலகத்தையே கைப்பற்ற வேண்டும் என்ற லட்சியம் அவருக்கு இருந்ததால், அவர் "சிகந்திரா-இ-சானி" அல்லது இரண்டாவது அலெக்சாண்டர் என்ற மாற்றுப்பெயரைப் பயன்படுத்தினார். கல்ஜி வம்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த பேரரசராக இந்திய துணைக் கண்டத்தில் டெல்லி சுல்தானகத்தை அவர் ஆட்சி செய்தார்.
அலாவுதீன் கல்ஜி யார்?
அலாவுதீன் அவரது முன்னோடி ஜலாலுதீனின் மருமகன் ஆவார். ஜலாலுதீன் மம்லூக்குகளை வீழ்த்தி டெல்லியின் சுல்தானாக பதவியேற்ற போது அலாவுதீன் கல்ஜி அமீர்-இ-துசுக் (சடங்குகளின் தலைவர்) ஆக நியமிக்கப்பட்டார். ஜலாலுதீனுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்கிய பின்னர் 1291 இல் காராவின் ஆளுநராக அலாவுதீன் நியமிக்கப்பட்டார், மேலும் பில்சா மீது படையெடுத்து வெற்றி பெற்ற பின் 1296 இல் அவத்தின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1296 இல், அலாவுதீன் தேவகிரியைத் தாக்கி, அவர் கொள்ளையடித்த செல்வங்களைப் பயன்படுத்தி அவரது மாமாவான ஜலாலுதீனுக்கு எதிராக கிளர்ச்சியைத் துவங்கினார். ஜலாலுதீனின் கொலைக்குப் பிறகு, அவர் டெல்லியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.
ஏன் இரண்டாம் அலெக்ஸாண்டர் என்று அழைத்துக் கொண்டார்?
டெல்லியை கைப்பற்றிய பின் பிற மாநிலங்களுடன் இணைந்து, குஜராத், ரந்தம்போர், சித்தூர், மால்வா மற்றும் ஜலோன் ஆகிய ராஜ்ஜியங்களையும் கைப்பற்றினார். இந்த போர் வெற்றிகள் அவரின் தன்னம்பிக்கையை அதிகரித்தது, இதன் விளைவாக உலகைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளை பற்றி அவர்கள் கற்பனை செய்யத் தொடங்கினார். இதனால் அவர் தன்னை "இரண்டாவது அலெக்சாண்டர்" என்று அழைத்துக் கொள்ளத் தொடங்கினார்.
அலாவுதீன் கல்ஜியின் இறுதி காலம்
அலாவுதீன் தனது இறுதிக் காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் நிர்வாகத்தை நிர்வகிக்க மாலிக் கஃபூரைச் சார்ந்திருந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அலாவுதீனின் மகனான ஷிஹாபுதீன் மற்றும் அவரது இந்து மனைவி ஜாத்யபாலி இருவரும் மாலிக் கஃபூரின் கைப்பாவையாக மாறினர்.



Click it and Unblock the Notifications
