Latest Updates
-
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்
விண்வெளிக்கு சென்ற முதல் நாய்க்கு என்ன நடந்தது தெரியுமா? அதன் பெயர் என்ன தெரியுமா?
விண்வெளி ஆராய்ச்சி தற்போது அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. சந்திரன், செவ்வாய் தொடங்கி இப்போது சூரியனை ஆராய்ச்சி செய்யும் வரை விண்வெளித்துறை வளர்ந்து விட்டது. ஆனால் இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக இருந்தது ஒரு நாய்தான் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
உண்மைதான் விண்வெளி ஆய்வு வரலாற்றில் லைக்கா என்ற நாய்க்கு தனி இடம் உண்டு. மாஸ்கோவைச் சேர்ந்த இந்த துணிச்சலான நாய் பூமியைச் சுற்றி வந்த முதல் உயிரினமாக வரலாற்றில் இடம் பிடித்தது, இது விண்வெளி பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருந்தது.

It's representation image only
அந்த காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி காரணமாக, மனிதர்களால் விண்வெளிப் பயணம் செய்ய இயலாத சூழல் இருந்தது. இதன் விளைவாக, சோவியத் யூனியனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விண்வெளி சோதனைகளுக்கு விலங்குகளை தேர்ந்தெடுத்தனர்.
விண்வெளி போட்டி
ஸ்பேஸ் ரேஸ் என்று அழைக்கப்பட்ட சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய காலத்தில் லைக்காவின் விண்வெளிப் பயணம் நடந்தது. உலகின் முதல் செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 1 வெற்றிகரமாக ஏவப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் புரட்சியின் 40வது ஆண்டு நிறைவு விழாவில் மற்றொரு வரலாற்று சாதனையை சோவியத் யூனியன் தலைவர் நிகிதா குருசேவ் செய்ய வேண்டுமென்று நினைத்தார்.
விண்வெளிப் பயணம் மற்றும் கிரகங்களுக்கு இடையேயான ஆராய்ச்சி ஆகியவை தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் காரணமாக மனிதர்களால் செய்ய முடியாததாக இருந்தது. எனவே விலங்குகள் முதல் விண்வெளிப் பயணிகளாக சோதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.
லைக்கா எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது?
லைக்கா மாஸ்கோவின் தெருக்களில் இருந்து வந்த ஒரு மூன்று வயது நாய். விஞ்ஞானிகள் தெரு நாய்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும் என்றும், எத்தகைய சூழ்நிலையிலும் உயிர்வாழத் தேவையான ஆற்றலை கொண்ட விலங்குகளாக இருக்கும் என்று நினைத்தார்கள். அவர்களின் தரப்பிலிருந்து, விண்வெளி பயணத்திற்கான லைக்காவிற்கான பயிற்சிகள் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒரு சிறப்பு ஜெல்லி உணவை சாப்பிடவும், விண்கலத்தின் மூச்சுத்திணறல் இடத்தை தாங்கவும், மேலும் விண்வெளியில் சந்திக்கும் சில வகையான ஈர்ப்பு மாற்றங்களை பொறுத்துக்கொள்ளவும் அதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விண்வெளி பயணம்
1957 ஆம் ஆண்ட நவம்பர் 3-ல், ஸ்புட்னிக் 2 இல் லைக்கா விண்ணில் ஏவப்பட்டது. ஒரு உயிரினத்தை விண்வெளியின் சுற்றுப்பாதையில் அனுப்புவதற்கான வாய்ப்புகளை மதிப்பிடுவது மற்றும் விண்வெளி பயணத்தின் உடலியல் விளைவுகளை தீர்மானிப்பது இந்த பயணத்தின் நோக்கமாக இருந்தது. இந்த சாதனை விண்வெளி பயணம் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும், இந்த முயற்சி ஒரு சோகமான முடிவைக் கொண்டிருந்ததால், அந்த மகிழ்ச்சி குறுகிய காலமே நீடித்தது.
சோகமான முடிவு
லைக்காவின் பயணம் ஒரு வழி பயணமாக இருந்தது. லைக்காவை மீண்டும் கொண்டு வருவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை, ஏனெனில், ஏவப்பட்ட நேரத்தில், அது பூமிக்கு பாதுகாப்பாகத் திரும்புவதற்கான தொழில்நுட்பம் எதுவும் இல்லை. அந்த நேரத்தில் சோவியத் அறிக்கைகள் லைக்கா சில நாட்கள் சுற்றுப்பாதையில் உயிர் வாழ்ந்ததாக கூறியது. இருப்பினும், அறிக்கைகளின்படி, அதிக வெப்பம் மற்றும் மன அழுத்தம் காரணமாக ஏவப்பட்ட சில மணிநேரங்களில் லைக்கா உண்மையில் இறந்தது பின்னர் கண்டறியப்பட்டது. பல தசாப்தங்களாக, அதன் மரணத்தின் உண்மையான சூழ்நிலைகள் ரகசியமாக வைக்கப்பட்டன.
லைக்காவின் தியாகத்தின் பலன்
லைக்காவின் தியாகம் வீண் போகவில்லை. அதன் தியாகம் எதிர்காலத்தில் மனிதர்களின் விண்வெளிப் பயணங்களுக்கு விலைமதிப்பற்ற தகவல்களை வழங்கியது. உண்மையில், இதுபோன்ற சோதனைகளுக்கு விலங்குகளைப் பயன்படுத்துவதற்கான நெறிமுறை சர்ச்சைகள் இருந்தபோதிலும், லைக்காவின் பயணம் ஆரம்பகால விண்வெளி ஆய்வாளர்களுக்கு அதன் ஆபத்து மற்றும் தெரியாத விஷயங்களை நினைவூட்டியது. இன்றும் லைக்காவின் தியாகம் விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் நினைவுகூரப்படுகிறது.



Click it and Unblock the Notifications

