Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
நீங்க எந்த கிழமை பிறந்தீங்கன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்...
Day Of The Week And Personality: ஜோதிடத்தின் படி, ஒருவரது குணங்களை ராசி, நட்சத்திரத்தை கொண்டு மட்டுமின்றி, பிறந்த தேதி மற்றும் கிழமையைக் கொண்டும் கணித்து கூறப்படுகின்றன. ஏனெனில் ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒருவரது வாழ்க்கையில் மட்டுமின்றி அந்நபரின் குணங்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
எப்படி ஒவ்வொரு ராசியும், நட்சத்திரத்திரமும் அதிபதிகளை கொண்டுள்ளனவோ, அதேப் போல் ஒருவர் பிறந்த கிழமையும் ஒரு தெய்வத்துடன் தொடர்புடையது. எனவே ஒவ்வொரு கிழமையில் பிறந்தவர்கள் அந்த கிழமைக்குரிய தெய்வத்தின் பரிபூர்ண அருளை பெற்றிருக்கின்றனர்.

நீங்கள் உங்களின் உண்மையான குணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் பிறந்த கிழமைப்படி உங்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஞாயிறு
ஞாயிற்றுகிழமை சூரிய பகவானுக்குரியது. இந்த கிழமையில் பிறந்திருந்தால், அந்நபர் செல்வ செழிப்போடு வாழ்வர். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். இளமையில் பல கஷ்டங்களை அனுபவித்தாலும், 40, 45 வயதிற்கு மேல் நல்ல பேரும், புகழுடனும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள். ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள். இவர்கள் சொல்வதை கட்டாயம் செய்வார்கள்.
திங்கள்
திங்கட்கிழமை சந்திரனுக்கு உரியது. இந்த திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எப்போதும் சிக்கல்களை சந்தித்த பின்னரே வெற்றி பெறுவார்கள். மேலும் இவர்கள் நல்ல பெயர் மற்றும் புகழுடன் அனைவரும் மதிக்கும்படியான வாழ்க்கையை வாழ்வார்கள். முக்கியமாக உதவி என்று யாராவது வந்து கேட்டால், அவர்களுக்கு உடனே உதவுவார்கள். எப்போதும் வாழ்க்கையில் எல்லாம் செய்த பின்னரே அதைப் பற்றி யோசிப்பார்கள். இவர்கள் வலுவான ஆளுமைதிறனை கொண்டிருப்பார்கள்.
செவ்வாய்
செவ்வாய்கிழமை செவ்வாய் பகவானுக்கு உரியது. இந்த கிழமையில் பிறந்தவர்கள் தங்களின் கடின உழைப்பால் முன்னேற்றத்தைக் காண்பதோடு, தங்கள் இலக்கையும் அடைவார்கள். இதனால் இவர்கள் நல்ல உழைப்பாளி, எடுத்த காரியத்தை முடிக்காமல் ஓயமாட்டார் என்று அனைவராலும் பாராட்டப்படுவார்கள். தேவையில்லாமல் சண்டைக்கு போகமாட்டார்கள். அதிக கோபப்படுவார்கள். மிகவும் அன்பானவர்கள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
புதன்
புதன்கிழமை புதன் பகவானுக்கு உரியது. இந்த கிழமையில் பிறந்தவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் சிறந்து திகழ்வார்கள். படிப்பில் வல்லவர்களாக இருப்பார்கள். உயர்ந்த பதவியை அடையும் திறமைசாலிகள். புதிதாக ஏதாவது கற்று கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார்கள். இயற்கையாகவே கூச்ச சுபாவம் அதிகம் கொண்டிருப்பார்கள். நீங்கள் செலவு அதிகம் செய்தாலும், உங்களைத் தேடி பணம் அதிகம் வரும்.
வியாழன்
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உரியது. இந்த கிழமையில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் அதிகம் இருக்கும். தேவையில்லாத பிரச்சனையில் அவ்வளவு சீக்கிரம் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். தன்னடக்கம் அதிகம் கொண்டவர்கள். எத்தனை முறை தோல்வி பெற்றாலும் சோர்ந்து போகமாட்டார்கள்.
வெள்ளி
வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு உரியது. இந்த கிழமையில் பிறந்தவர்கள் சகல சுகங்களையும் அனுபவிக்க பிறந்தவர்கள். விரும்புவதை அடையும் குணம் அதிகம் இருக்கும். எவ்வளவு உழைத்தாலும், அது மற்றவர்களையே போய் சேரும். புகழ்ச்சியை அதிகம் விரும்புவதால், அதைப் பெற புதிய தேடல்கள் அதிகம் இருக்கும். அதுவும் இந்த கிழமையில் பெண் குழந்தைகள் பிறந்தால், அக்குழந்தை வளர வளர செல்வம் வீட்டில் பெருகிக் கொண்டே இருக்கும்.
சனி
சனிக்கிழமை சனி பகவானுக்கு உரியது. இந்த கிழமையில் பிறந்தவர்களுக்கு அதிகமாக சமயோஜித புத்தி இருக்கும். இவர்கள் ஒரு விஷயத்தில் சோம்பேறித்தனப்பட்டால், அந்த விஷயத்தில் அப்படியே தான் இருப்பார்கள். அதுவே ஒரு விஷயத்தை ஆர்வமுடன் செய்தால், அதில் நிச்சயம் வெற்றி காண்பார்கள். மேலும் தன்னிடம் ஒருவர் நல்லவராக இருந்தால், அவருக்கு நல்லவராக இருப்பார்கள். அதுவே கெட்டவராக இருந்தால், அப்படியே கெட்டவர்களாக இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications