Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது!
ஏப்ரல் மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... கவனமா இருங்க...!
கோடைகாலத்தின்தொடக்கமான ஏப்ரல் மாதம் வந்துவிட்டது. இந்த மாதம் கிரக நிலைகளின் படி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப்போகிறது. அவர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கப்போகிறது, ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரக நிலைகள் சாதகமாக இல்லை.
அவர்கள் இந்த மாதம் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பல இன்னல்களை சந்திக்கப் போகிறார்கள்.
இந்த மாதம் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் அந்த ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
இந்த மாதம் மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்து போகும் ஆனால் சிலர் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை அரவணைக்க இந்த மாதம் தவறி விடாதீர்கள். இந்த மாதம் மிதுன ராசிக்காரர்களின் கிரக நிலைகளின் படி உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். தொழில்வாழ்க்கையைப் பொறுத்தவரை சில சவால்கள் இருக்கலாம், ஆனால் அதனை சமாளிக்கும் திறமை உங்களிடம் இருப்பதால் சில மோசமான தருணங்களுக்குப் பிறகு நிலை உங்களுக்கு சாதகமாக மாறும்.
சிம்மம்
இந்த மாதம் உங்களுக்கு கடினமாக இருக்கும் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் மிகவும் சோதனையான காலகட்டமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் கடினமான காலமாக இருக்கும். உங்கள் மனஅமைதியை குலையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீதிரீதியாக பிரச்சினைகள் உயரக்கூடும், உங்கள் பட்ஜெட்டை மீறி செலவு செய்வதைத் தவிர்க்கவும்.
துலாம்
இந்த மாதம் உங்கள் வாழ்க்கையின் பல விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியத்தையும், சோம்பேறித்தனத்தையும் அறவே தவிர்க்க வேண்டும், அனைத்து வேலைகளிலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உங்கள் தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி அல்லது தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில், திருமணமான ஆண்களும் பெண்களும் சில சிக்கல்களை சந்திப்பார்கள்.
உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை, ஏனெனில் சில ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதிரீதியாக இந்த மாதம் அதிக செல்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
விருச்சிகம்
இந்த மாதம் எது செய்வதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் உங்கள் செயல்களுக்காக நீங்கள் வருத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படலாம். கடந்த கால நினைவுகளால் நிகழ்காலத்தில் சிக்கல்கள் எழலாம். உங்கள் மீது தவறு இருந்தால் மன்னிப்பு கேட்க ஒருபோதும் தயங்காதீர்கள். அலுவலகத்தில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகளில் ஈடுபடுவதை இந்த மாதம் தவிர்க்கவும், ஏனெனில் நஷ்டங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications

