Latest Updates
-
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
வாஸ்துப்படி வீட்டின் பூஜை அறையில் இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல அது வறுமையை கொண்டு வரும்..
Vastu Tips In Tamil: நாம் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருந்தால் தான், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி, அந்த வீட்டில் உள்ளோர் நல்ல மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ முடியும். இந்துக்களின் வீடுகளை எடுத்துக் கொண்டால், அந்த வீட்டில் எந்த அறை உள்ளதோ இல்லையோ, நிச்சயம் தெய்வங்களை வழிபடுவதற்கு ஒரு பகுதியோ அல்லது அறையோ இருக்கும்.
இந்த பூஜை அறையில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். மேலும் ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போதும் பூஜை அறையில் கடவுளை வழிபட்டு செல்வார்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பூஜை அறையை சிறப்பாகவும், சரியாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

மேலும் ஒரு வீட்டிலேயே பூஜை அறையில் தான் நேர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்திருக்கும். இந்த பூஜை அறையில் செய்யும் சில தவறுகள் அந்த வீட்டில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? அதுவும் இந்த அறையில் செய்யும் தவறுகள் அந்த வீட்டில் நிறைய செலவுகளை ஏற்படுத்தும்.
அதை சரிசெய்யாமல் விட்டுவிட்டால், பின் அந்த வீட்டில் பணப் பிரச்சனை தலைவிரித்தாடும். மேலும் அந்த வீட்டில் உள்ளோர் எதிர்மறை ஆற்றல் மூலம் தோல்விகளை சந்திக்க நேரிடும். இப்போது வாஸ்துப்படி பூஜை அறையில் எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
பூஜை அறையின் திசை
வாஸ்துப்படி ஒரு வீட்டின் பூஜை அறையானது சரியான திசையில் இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை பூஜை அறையானது தவறான திசையில் இருந்தால், அந்த வீட்டில் உள்ளோர் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒரு வீட்டில் பூஜை அறையானது வடகிழக்கு பகுதியான ஈசான மூலையில் இருக்க வேண்டும். மேலும் பூஜை அறையானது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு மற்றும் மேற்கு திசையை நோக்கி பூஜை அறை இருக்கக்கூடாது.
உடைந்த சிலைகள் கூடாது
வாஸ்துப்படி, பூஜை அறையில் வைக்கும் தெய்வங்களின் சிலைகளை கவனமாக பராமரிக்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் உடைந்த தெய்வங்களின் சிலைகளை வீட்டின் பூஜை அறையில் வைத்திருக்கக்கூடாது. அப்படி வைத்தால், தெய்வங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் மற்றும் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிரம்பி, வீட்டில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
பூஜை அறை வைக்கக்கூடாத பகுதிகள்
வாஸ்துப்படி, வீட்டில் பூஜை அறையை எப்போதும் சரியான இடத்தில் அமைக்க வேண்டும். தவறுதலாக கூட பூஜை அறையை மாடிப்படிக்கு அடியில், கழிவறை அல்லது குளியலறைக்கு அருகில் அமைத்துவிடக்கூடாது. இல்லாவிட்டால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எப்போதும் பூஜை அறை திறந்த வெளியில் காற்றோட்டமான பகுதியில் தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் சிறப்பாக இருக்கும்.
பூஜை அறையில் பணத்தை வைத்து பயன்படுத்தலாமா?
வாஸ்துப்படி, வீட்டின் பூஜை அறையில் பணத்தை வைப்பது மிகவும் நல்லது. இப்படி வைப்பதனால் பண வரவைத் தடுக்கும் தோஷங்கள் நீங்குவதாக ஜோதிடம் கூறுகிறது. சில சமயங்களில் நாம் பணத்தை வைத்து பயன்படுத்தும் பகுதி வாஸ்துப்படி தவறானதாக இருக்கலாம். இதனால் வீட்டில் பண பிரச்சனைகள் எப்போதும் இருந்தவாறு இருக்கலாம். ஆனால் அந்த பணத்தை பூஜை அறையில் வைத்து பயன்படுத்தும் போது, அதிக செலவுகள் கட்டுப்படுத்தப்படுவதோடு, பணத்தட்டுப்பாடும் நீங்கும்.
ஒருவரது வீட்டின் பூஜை அறையில் பணத்தை வைத்திருப்பதன் மூலம், செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை நிறுவுவதற்கு சமம். இதனால் வீட்டில் பணம் எப்போதும் நிரம்பியிருக்கும். முக்கியமாக கடன் பிரச்சனையில் இருந்து விடுபடக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications