Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்!
தூங்கும் போது ஒருவரது உடலினுள் நடக்கும் சில விசித்திரமான விஷயங்கள் பற்றி தெரியுமா?
ஒரு மனிதன் நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட வேண்டுமானால் போதுமான ஓய்வு தேவை. இந்த ஓய்வு தூக்கத்தின் போது தான் கிடைக்கும். நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு, இரவு கண்களை மூடி தூங்கும் போது கிடைக்கும் சுகமே தனி. ஆனால் அப்படி தூங்கும் போது நமது உடலில் பலவிதமான விஷயங்கள் நடக்கும் என்பது தெரியுமா?
அதுவும் அந்த விஷயங்களுள் சிலவற்றை பெரும்பாலானோர் அனுபவித்திருப்பார்கள். ஆனால் இன்னும் சில விஷயங்கள் விசித்திரமாக இருக்கும். அதைச் சொன்னால் நம்பமுடியாதவாறும் இருக்கும். உதாரணமாக, தூக்கத்தில் நடப்பது, தூக்கத்தில் பேசுவது போன்றவை இதில் அடங்கும். இப்போது தூங்கும் போது ஒருவரது உடலில் நடக்கும் சில விசித்திரமான விஷயங்கள் என்னவென்பதைக் காண்போம்.

1. விழுவது போன்ற உணர்வு
ஹிப்னாகோஜிக் ஜெர்க் என்பது ஒருவர் தூங்கும் போது ஏற்படும் ஒரு தன்னிச்சையான மற்றும் விழுவது போன்ற உணர்வாகும். இந்நிலையில் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் போதே, ஒரு பெரிய கட்டிடத்தில் இருந்து அல்லது உயரத்தில் இருந்து கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்படும்.
2. ஸ்லீப் பேராலிசிஸ்
ஸ்லீப் பேராலிசிஸ், இந்த நிலையில் ஒருவர் தூக்கத்தில் இருந்து விழித்திருந்தாலும், சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை அசையவோ, பேசவோ, நகரவோ முடியாது. இந்த நிலை பயங்கரமான எண்ணங்கள் மற்றும் மாயத் தோற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தூக்கத்தின் போது உதரவிதானம் தவிர சுவாசம் தொடர்பான தசைகளை நமது உடல்கள் அணைத்திருப்பதால் இப்படியான நிலை நிகழ்கிறது.
3. தூக்கத்தில் நடப்பது
தூக்கத்தில் நடப்பது என்பது ஒருவர் நன்கு அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று எழுந்து நடப்பதைக் குறிக்கிறது. இந்த நிலையில் அந்நபர் உணர்வு சிறிதும் இல்லாமல் தூக்கத்தில் நடப்பர். இது மிகவும் ஆபத்தானது. இப்படி தூக்கத்தில் நடக்கும் போது, உடலை நகர்த்த நாம் விழித்திருப்போமே தவிர, மூளை முழுமையாக தூக்கத்தில் தான் இருக்கும்.
4. தூக்கத்தில் பேசுவது
தூக்கத்தில் பேசும் பழக்கமானது கிட்டத்தட்ட 5 சதவீத பெரியவர்களுக்கு ஏற்படுகிறது. இது சுமார் 30 நொடிகள் வரை நீடித்திருக்கும். இது பெரும்பாலும் தூங்கிய முதல் 2 மணிநேரத்திற்குள் நடக்கும். இப்படி ஒருவர் தூக்கத்தில் பேசுவதற்கு காரணம், ஆழ்ந்த உறக்கத்தில் நுழையும் முன், நமது உடல் நம் கனவுகளுடன் ஒலிகளை உருவாக்க போதுமான தசை ஒலிகளை கொண்டிருப்பது தான்.
5. தொடர்ச்சியான கனவுகள்
சில சமயங்களில் சிலர் ஒரே கனவை மீண்டும் மீண்டும் காண்பதுண்டு. இது நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி அதிகமாக யோசனை செய்யும் போது அல்லது உங்களால் ஒரு விஷயத்திற்கு சரியான முடிவை எடுக்க முடியாத போது, உங்கள் மூளை அதுப்பற்றிய கனவுகளை காண வைக்கிறது. எப்போது உங்கள் மூளையால் ஒரு சரியான முடிவை எடுக்க முடியவில்லையோ, அப்போது ஒரே மாதிரியான கனவு மீண்டும் மீண்டும் வரலாம்.
6. தூக்கத்தில் செக்ஸ்
தூக்கத்தில் செக்ஸ் கொள்வது என்பது பொதுவானது அல்ல. வெகு சிலருக்கே இம்மாதிரி ஏற்படும். இப்படி நன்கு தூங்கிக் கொண்டிருக்கும் போதே, திடீரென்று எழுந்து செக்ஸ் கொள்வதை செக்ஸ்சோமேனியா என்று அழைப்பர். இப்படி ஏற்படுவதற்கு பின்னுள்ள காரணம் தூக்கத்தில் நடப்பதற்கு பின்னால் இருக்கும் காரணத்தைப் போன்றது.
அதாவது இந்நிலையில் உடலானது தூக்கத்தில் இருந்து விழிதிருக்கும், ஆனால் மனமோ தூக்கத்தில் இருக்கும். இந்நிலையில் தூக்கத்திலேயே துணையுடன் உடலுறவில் ஈடுபடத் தொடங்கலாம். தூக்கத்தில் உடலுறவில் ஈடுபடும் போது நடந்து கொள்ளும் விதம், விழித்திருக்கும் போது உடலுறவின் போது நடந்து கொள்வதில் இருந்து வித்தியாசமானதாக இருக்கும் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
7. கனவில் கனவு காண்பது
இதில் கனவு காணும் போது நீங்கள் விழித்திருப்பதை உணர முடியும். இருப்பினும், கனவு போன்று தொடர்ந்து வித்தியாசமான விஷயங்கள் நடக்கும். ஏனெனில் நீங்கள் உண்மையில் எழுந்திருக்கவில்லை. கனவில் தான் எழுந்திருக்கிறீர்கள். இம்மாதிரியான நிகழ்வை 'இன்செப்ஷன்' படத்தில் கூட காண்பித்துள்ளார்கள்.



Click it and Unblock the Notifications