Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஆகஸ்ட் மாதம் முழுக்க குளம் மூடல்.. ஏன் தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகபுகழ் பெற்ற கோயில்களில் ஒன்றாகும்.. இந்த கோவிலுக்கு வெளிநாடுகளிலும் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று மட்டும் 70,000க்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். இதில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் திருப்பதி கோயிலில் நாளை முதல் ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ள நிலையில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி 9 நாட்கள் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது... இந்த விழாவின் கடைசிநாள் அங்குள்ள தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். இந்த தீர்த்தவாரி முடிந்தவுடன் பக்தர்கள் குளத்தில் நீராடுவது வழக்கம்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த திருமலை ஏழுமலையான் கோயிலில் உள்ள திருக்குளம் ஆண்டுக்கு ஒரு முறை வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு முன்பு சுத்தப்படுத்தப்படுகிறது.. அப்போது அந்த குளத்தில் உள்ள நீர் முழுவதுமாக அகற்றப்பட்டு குழாய் சீரமைப்பு மற்றும் குடிமராமத்து பணிகளுக்காக மூடப்பட உள்ளது. இதனால் 1 மாதம் முழுக்க திருக்குள ஆரத்தி சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது..
திருக்குளத்தில் உள்ள தண்ணீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த மறுசுழற்சி அமைப்பு உள்ளது. குறிப்பிட்ட சதவீத நீர் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்துக்காக குளத்தில் தண்ணீர் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.
திருப்பதி கோயிலில் குளத்தை சுத்தம் செய்யும் பணி
திருப்பதி கோயிலில் திருக்குளம் மராமத்து பணிகளுக்காக முதல் பத்து நாள்களுக்கு தண்ணீர் அகற்றப்படுகிறது. அடுத்த பத்து நாள்களுக்கு குழாய்களில் உள்ள பழுதுகள் சரிசெய்யப்பட்டு சுண்ணாம்பு, வண்ணபூச்சு அடிக்கும் பணிகள் நடைபெறும்.. பின்னர் அவை முடிந்து அடுத்த பத்து நாள்களுக்கு புஷ்கரணியில் தண்ணீர் நிரப்பப்பட்டு முழுமையாக தயார் செய்யப்படும்.
மேலும் திருக்குளத்தில் உள்ள நீரின் பிஎச் மதிப்பு 7 ஆக பராமரிக்கப்படுகிறது. இந்தப் பணிகள் திருமலை திருப்பதி தேவஸ்தான நீர்ப்பணித் துறையின் கீழ் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. வருடாந்திர பிரம்மோற்சவ விழா அக்டோபர் 4ஆம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வருடாந்திர பிரம்மோற்சவ விழா 2024
பிரம்மோத்ஸவம் என்பது பிரம்மாவின் தலைமையில் ஸ்ரீனிவாசன் (விஷ்ணு) சுயம்புவாகத் தோன்றியதன் நினைவாக 9 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த சிறப்பு ஸ்தலங்களில் நீராடி தங்கள் உடலையும் மனதையும் சுத்தமாக்கி கொள்வார்கள்.. இந்த 9 நாள் திருவிழா பக்தர்களுக்கும் இந்து மதத்திற்கும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. ஆந்திராவிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்த முக்கிய திருவிழா திருமலையில் திருப்பதி கோயிலில் கொண்டாடப்படுகிறது.
பிரம்மோற்சவ காலத்தில் நடைபெறும் உற்சவங்கள்
பிரம்மோற்சவ காலத்தில் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் செய்வார்கள். பிரம்மோற்சவ காலத்தில் திருமலையில் மூன்று விதமான தரிசனங்கள் நடைபெறும். அதாவது சர்வ தரிசனத்தில் அனைத்து பக்தர்களும் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வாகன சேவை தரிசனத்தில், சுவாமி அந்ததந்த நாளுக்குரிய வாகனத்தில் எழுந்தருள்வதை காண முடியும். மூன்றாவதாக ஆர்ஜித சேவை. இதிற்காக திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் முன்கூட்டியே முன்பதிவு செய்த பக்தர்கள் அவர்களுக்கான சேவைகளின் போது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.



Click it and Unblock the Notifications