Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
தர்பூசணி வாங்கப் போறீங்களா? அப்போ வாங்கும் போது இந்த மாதிரி பார்த்து வாங்குங்க...
Summer Fruits In Tamil: கோடைகாலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாக தர்பூசணி உள்ளது. தர்பூசணியில் 90% அளவிற்கு நீர்ச்சத்துக்கள் காணப்படுகிறது. மேலும் தர்பூசணியில் நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் காணப்படுகிறது. சில சமயங்களில் நாம் விருப்பமாக வாங்கும் தர்பூசணி பழம் சரியாக இனிக்காமல் போய் விடும் அல்லது உள்ளே கெட்டுப் போய் இருக்கும்.
எனவே அந்த மாதிரியான சமயங்களில் சரியான பழத்தை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது நம்மளுக்கு தெரியாது. எனவே இனி தர்பூசணி பழத்தை வாங்கும் போது அதன் வெளி தோற்றத்தை மட்டும் பார்த்து வாங்காமல் நாங்கள் சொல்லும் சில ஐடியாக்களையும் பயன்படுத்தி வாங்குங்கள். சரியான தர்பூசணி பழத்தை தேர்ந்தெடுக்க இந்த ஐடியாக்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.

1. தர்பூசணியின் வெளியில் இருக்கும் புள்ளிகள்
தர்பூசணியை வாங்குவதற்கு முன்பு தர்பூசணியின் வெளியில் இருக்கும் புள்ளிகளை ஆராய வேண்டும். இந்த புள்ளிகள் தர்பூசணியை தரையில் வைத்து இருப்பதால் ஏற்படுகிறது. நீங்கள் சிறந்த தர்பூசணியை தேர்ந்தெடுக்க க்ரீமி - மஞ்சள் அல்லது ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறமுடைய புள்ளிகளை உடைய தர்பூசணியை பார்த்து தேர்ந்தெடுங்கள்.
2. தர்பூசணியில் உள்ள மஞ்சள் பாகம்
தர்பூசணியில் உள்ள மஞ்சள் பாகம் அதன் இனிப்பு சுவையை பறைசாற்றுகிறது. அது தேனீக்கள் மகரந்த சேர்க்கைக்காக பூவைத் தொட்ட காலத்தை குறிக்கிறது. எனவே அதிக மகரந்த சேர்க்கை செய்யப்பட்ட தர்பூசணி மிகவும் இனிப்பாக இருக்கும்.
3. ஆண் அல்லது பெண் தர்பூசணி
தர்பூசணியிலும் பாலினம் இருப்பது உங்களுக்கு தெரியுமா. ஆம் தர்பூசணியிலும் ஆண் மற்றும் பெண் தர்பூசணி என்று உண்டு. ஆண் தர்பூசணிகள் மிகவும் உயரமாகவும், நீளமாகவும் இருக்கும். அதே சமயம் பெண் தர்பூசணிகள் மிகவும் வட்டமாகவும், தடினமாகவும் இருக்கும். இதில் ஆண் தர்பூசணியில் நீர்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படும். இதுவே பெண் தர்பூசணி என்றால் இனிப்பு சுவையுடன் காணப்படும். எனவே இனி வாங்கும் போது உங்கள் தேவைக்கேற்ப தர்பூசணியை பார்த்து வாங்குங்கள்.
4. தர்பூசணியின் அளவு
தர்பூசணியின் அளவு என்று பார்க்கும் போது நடுத்தர அளவிலான தர்பூசணி மிகவும் சிறந்தது. மிகச் சிறிய மற்றும் பெரிய தர்பூசணிக்கு செல்லாதீர்கள். நடுத்தர அளவிலான தர்பூசணியையே எப்பொழுதும் தேர்ந்தெடுங்கள்.
5. தர்பூசணியின் வால் பகுதி
தர்பூசணியின் வால் பகுதி அதன் முதிர்ச்சியை குறிக்கிறது. எனவே வால் பகுதி பச்சை நிறத்தில் இருந்தால் அது விரைவில் பிடுங்கப்பட்டது. சுவையாக இருக்காது என்பதை குறிக்கிறது. அதுவே வால் பகுதி உலர்ந்து போய் இருந்தால் அது மிகவும் சுவையானதாக இருக்கும். சாப்பிட இனிப்பாக இருக்கும்.
6. சீரான வடிவமுள்ள தர்பூசணியை தேர்ந்தெடுங்கள்
தர்பூசணியை வாங்கும் போது சமச்சீர் அளவில் உள்ள தர்பூசணியை தேர்ந்தெடுங்கள். ஒழுங்கற்ற புடைப்புகள் அல்லது வெட்டுகள் உள்ள தர்பூசணியை தவிர்ப்பது நல்லது. சீரற்ற வடிவில் இருக்கும் தர்பூசணியை தவிருங்கள். ஏனெனில் அந்த வகையான தர்பூசணி உங்களுக்கு இனிப்பை அளிக்காது.
7. தர்பூசணியை தூக்கி பார்த்து வாங்குங்கள்
தர்பூசணி நல்ல கனமாக இருந்தால் அது இனிப்பாகவும், நன்றாக பழுத்தும் இருக்கும். தர்பூசணி நல்ல ஜூஸி தன்மையுடனும் காணப்படும். எனவே நல்ல எடை உள்ள தர்பூசணியாக பார்த்து எடுங்கள்.
8. தர்பூசணியை தட்டிப் பார்த்து வாங்குதல்
தர்பூசணியை தட்டிப் பார்க்கும் போது ஏற்படும் ஒலி அதன் முதிர்ச்சியை குறிக்கிறது. எனவே தர்பூசணியை தட்டும் போது ஆழமான ஒலி கேட்டால் நல்ல பழுத்த தர்பூசணி என்பதை குறிக்கிறது. தட்டையான ஒலி கேட்டால் அது சரியாக பழுக்கவில்லை என்பதை காட்டுகிறது.
9. எந்த மாதிரியான தர்பூசணியை வாங்க கூடாது
தர்பூசணியின் மேல் அடர்ந்த புள்ளிகள் இருந்தால் அது பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதை காட்டுகிறது. புளிப்பு மற்றும் கசப்பான வாசனை தென்பட்டால் அந்த தர்பூசணியை தவிர்ப்பது நல்லது. தர்பூசணியின் தோலின் உட்புறத்தில் பழுப்பு போன்ற உலர்ந்த திசுக்கள் தென்பட்டால் அது பாக்டீரியா நோயை குறிக்கிறது. எனவே இது போன்ற தர்பூசணியை வாங்காமல் இருப்பது நல்லது.



Click it and Unblock the Notifications













