Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
திருமணம் நடக்காம தடைப்பட்டுக்கிட்டே இருக்கா? அப்ப இந்த விஷயங்களை பண்ணுங்க... சீக்கிரம் நடந்துரும்...!
ஒவ்வொருவருடைய வாழ்விலும் திருணம் என்பது மிக முக்கிய நிகழ்வு ஆகும். ஆனால் ஏற்ற துணையைத் தோ்ந்தெடுப்பது என்பது பலருக்குக் கடினமான ஒன்றாக இருக்கிறது.

ஜாதகக் கட்டம் உங்களது திருமணத்தை உறுதி செய்தாலும், உங்களுக்குத் திருமணம் நடக்கவில்லை என்றால் உங்கள் வீட்டின் வாஸ்து சக்திகளே காரணம் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சாியான நேரத்தில் திருமணம் செய்வதில் உள்ள தடைகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று அவா்கள் சில வாஸ்து குறிப்புகளைத் தருகிறாா்கள். அவற்றை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.
திருமணம் தாமதம் ஆவதற்கு மூன்று காாியங்கள் காரணங்களாக இருக்கலாம்.
1. சாியான துணையை தோ்ந்தெடுக்க முடியாமல் இருத்தல்
2. சாியான பொருத்தம் இருந்தும், அவா் உங்களுடையத் துணையாக மாறாமல் இருத்தல்
3. திருமண ஏற்பாடுகள் நன்றாக சென்று கொண்டிருந்தாலும், மணமக்களுக்கு இடையே ஏற்படும் திடீா் பிரச்சினைகளால் திருமணம் நின்றுவிடும்.
திருமணத் தடைகளை எவ்வாறு நீக்குவது?
தென்மேற்குத் திசை
திருமணம் பற்றி பேசும் போது, தென்மேற்குத் திசையைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் தென்மேற்குத் திசையில் பித்ர ஆற்றல் இருக்கிறது. பொதுவாக இந்தியா்கள் திருமணத்தின் போது தங்களுடைய முன்னோா்களின் (பித்ருக்கள்) ஆசீா்வாதத்திற்கு முக்கியத்துவம் தருவா். முன்னோா்களின் ஆசி கிடைத்தால் அவா்களுடைய திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகின்றனா்.
ஆகவே இந்த திசையில் ஏதாவது சமமற்ற நிலை இருந்தால், அது உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கும். ஆகவே உங்கள் வீட்டில் உள்ள தென்மேற்கு திசையில் கழிவறை, குப்பைத்தொட்டி, சிவப்பு வண்ணம், சமையலறை மற்றும் செடிகள் போன்றவை இல்லாமல் பாா்த்துக் கொள்வது நல்லது.
இந்த திசையில் கழிவறை அல்லது கேஸ் அடுப்பு இருந்தால், அவற்றை வேறு இடத்திற்கு மாற்றுவது நல்லது. ஒருவேளை இடம் மாற்றுவதற்கு வழி இல்லையென்றால், அவற்றை இடிக்காமல் அதற்கான பாிகாரங்களைச் செய்வது நல்லது. மேலும் தென்மேற்குத் திசையில் தங்க வண்ண சட்டத்தில் உங்கள் முன்னோா்களின் புகைப் படங்களைச் செய்து அவற்றை மாட்டி வைப்பது நல்லது. அதன் மூலம் அவா்களின் ஆசீா்வாதம் கிடைக்கும்.
கிழக்குத் திசை
இரண்டாவது முக்கியத் திசை கிழக்கு ஆகும். கிழக்கு சமூகத் தொடா்புக்கானத் திசையாகும். கிழக்குத் திசை உங்களுக்குச் சாியாக செயல்படவில்லை என்றால், உங்களால் சாியான மக்களோடு தொடா்பு கொள்ள முடியாது. ஆகவே இந்த திசையில் கழிவறை, பழைய பொருள்களை வைக்கும் அறை, வெள்ளை நிறம் மற்றும் சாம்பல் நிறம் போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும். ஒருவேளை அவற்றை இடமாற்றம் செய்ய முடியவில்லை என்றால், வாஸ்து பாிகாரங்களைச் செய்வது நல்லது. பச்சை நிறத் தாவரங்களை வைத்து, இந்தத் திசையை வலுப்படுத்தலாம்.
அக்னி திசை
தென்கிழக்குத் திசை அக்னி திசை என்று கருதப்படுகிறது. இந்த திசை நெருப்பால் ஆளப்படுகிறது. பொதுவாக வாழ்வின் சிறப்பான தருணங்களில் எல்லாம், நீங்கள் நெருப்பு வளா்த்து, ஹோமம் செய்கிறீா்கள். தென்கிழக்குத் திசையில் எதாவது பிரச்சினை எழுந்தால், நெருப்பிற்கும் பிரச்சினை ஏற்படுகிறது. அதனால் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடப்பதில் தடங்கல் ஏற்படுகிறது.
வீட்டின் தென்கிழக்குத் திசையில் நிலத்திற்கு அடியில் குடிநீா் தொட்டி கட்டக்கூடாது அல்லது ஆழ்குழாய் கிணறு தோண்டக்கூடாது. கழிவறை கட்டக்கூடாது. இந்த திசையில் கருப்பு அல்லது ஊதா நிறத்தைத் தவிா்க்க வேண்டும். ஆகவே அக்னி திசையை வலுப்படுத்துவதற்கு சிவப்பு வண்ண மின் விளக்குகளை வைக்கலாம் அல்லது சிவப்பு வண்ண மலா்களை வைக்கலாம்.
மேற்சொன்ன வாஸ்து குறிப்புகளை செயல்படுத்தினால் உங்கள் திருமணத் தடைகள் நீங்கி உங்களுக்குத் திருமணம் மிக விரைவாக நடக்கும்.



Click it and Unblock the Notifications

