Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம் இதோ..!
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்வதுண்டு. தற்போதுள்ள இயந்திர மயமான காலத்தில், சிலர் ஒருவர் தான் முன்னேற என்ன வழி என்பதை யோசிப்பதை விடுத்து, அடுத்தவர் எப்படி முன்னேறினான் என்பதை பார்ப்பதிலேயே நேரத்தை அதிகம் செலவிடுகிறார். இதனால் அவரின் எதிர்மறையான எண்ணங்கள், அந்த நபர் மீது கண் திருஷ்டியாக விழுகிறது.
வீட்டில் உள்ள கண் திருஷ்டி பிரச்னைகளை நீக்கவும், வீட்டிலிருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியே அனுப்பவும் வீட்டிற்கு எதிர்மறை சக்திகள் நுழையாமல் இருக்க நாம் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

பொதுவாகவே கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்...கிராமங்களில் இதனை எப்படி கழிக்கிறார்கள் தெரியுமா?
1. சிலர் கல் உப்பு கொஞ்சம் எடுத்து தலையை 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடுவார்கள்..பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வேஷ்டி துணி சிறிது கிழித்து திரி செய்து திரியை தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிய விடவும்...குழந்தை அழாமல் தூங்கி விடும்.
2. குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெரு மண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும்..இது கண் திருஷ்டியை போக்கும். இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்..
3. நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் பெளர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம். வளர்பிறை வெள்ளிக்கிழமையில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம்...
4. வாசலுக்கு மேல் ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம். செவ்வாய் கிழமையில் இதை செய்யலாம்..சிலர் படிகாரக்கல், வெள்ளெருக்கு வேர், மருதாணிக்கட்டை சேர்த்தும் தொங்க விடுவர்...
5. மூன்று வயது குழந்தை வரை கன்னத்தில் கறுப்பு பொட்டு வைத்துவிடுவர்..இதுவும் கெட்ட கண் பார்வையை தடுக்கும்...நாமும் வெளியே செல்லும்போது கறுப்பு பொட்டு சிறிது வைக்கலாம்.. அந்த கறுப்பு பொட்டு ஹோம குண்டத்தில் எடுக்கப்பட்ட சாம்பலாக இருக்க வேண்டும். அதனை நெய்யில் கலந்து இட்டுக்கொள்ள வேண்டும்...வீட்டு நிலையில் வெள்ளி தோறும் மஞ்சள் சிறிது பூசி குங்குமம் இடவேண்டும்.. இது நோய்கிருமிகளை அண்டாமல் பாதுகாப்பது மட்டுமில்லாமல் கண் திருஷ்டியையும் போக்கும்....
இந்த விஷயத்தை பரிகாரமாக செய்வதால், நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை விஷயங்கள், கண் திருஷ்டி நீங்கி நேர்மறை ஆற்றலும், தெய்வ சக்திகளும் உடுருவும்..



Click it and Unblock the Notifications
