Latest Updates
-
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா?
ராகு சந்திரன் சேர்க்கையால் உருவாகும் கிரகண தோஷம்: மார்ச் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
ஏற்கனவே ராகு மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 மார்ச் 23 ஆம் தேதி மேஷ ராசியில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழ்கிறது.
Rahu Moon Make Grahan Dosh On March 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும். இப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அது சுப மற்றும் அசுப யோகத்தை உருவாக்கும். அந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
அந்த வகையில் ஏற்கனவே ராகு மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 மார்ச் 23 ஆம் தேதி மேஷ ராசியில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழ்கிறது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையும், கிரகண யோகத்தை உருவாக்கவுள்ளது. ஒரு யோகமானது நற்பலனை வழங்கினால், அதை யோகம் என்றும், அதுவே கெடு பலனை வழங்கினால், அதை தோஷம் என்றும் அழைப்பார்கள். அப்படி தான் ராகு சந்திர சேர்க்கையால் உருவாகவிருப்பது கிரகண தோஷம்.

இந்த கிரகண தோஷத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த கிரகண தோஷ காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் இந்த சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். இதனால் உங்களின் பட்ஜெட் பாதிக்கப்படலாம். மன உளைச்சலுக்கு ஆளாகும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் எந்த ஒரு புதிய ஒப்பந்ததையும், வேலையையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணத்தால் சிலவற்றை இழக்க வாய்ப்புள்ளது. விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக கோபம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் ராகு சந்திர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இக்காலத்தில் சளி, காய்ச்சலால் அவதிப்பட நேரிடும். மனம் அமைதியிழந்து இருக்கும். இக்காலத்தில் உங்களால் எந்த வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாது. எனவே இக்காலத்தில் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்காதீர்கள். இக்காலத்தில் மன அழுத்தம் அதிகரிக்கும். வணிகர்கள் இக்காலத்தில் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் ராகு சந்திர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இக்காலத்தில் ரகசிய எதிரிகளால் நிறைய தொந்தரவுகளை சந்திக்க நேரிடும். உங்களின் முக்கிய வேலைகள் நிறுத்தப்படும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் விவாதத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்காது. வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் ராகு சந்திர சேர்க்கை நிகழ்கிறது. இந்த சேர்க்கை மகர ராசிக்காரர்களுக்கு தீங்கை விளைவிக்கும். மனதில் ஏதோ ஒரு கவலை இருந்தவாறு இருக்கும். அந்த கவலையால் எந்த வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாமல் அவதிப்பட நேரிடும். குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. ஏழரை சனி நடப்பதால், எந்த ஒரு புதிய வேலைகளையும் தொடங்காதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











