Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
ஆந்திராவின் அட்டகாசமான வெஜ் புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ள பெண் மனைவியாக கிடைத்த ஆண்கள் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாம் -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க..
குருபகவான் அருளால் 2022-ல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்... உங்க ராசி என்ன?
வேலை தேடுவதையே முழுநேர வேலையாக எண்ணற்ற இளைஞர்கள் நம் நாட்டில் உள்ளனர். கொரோனா பேரிடர் இந்த வேலையை மேலும் கடினமாக்கியுள்ளது.
வேலை தேடுவதையே முழுநேர வேலையாக எண்ணற்ற இளைஞர்கள் நம் நாட்டில் உள்ளனர். கொரோனா பேரிடர் இந்த வேலையை மேலும் கடினமாக்கியுள்ளது. இந்த நிலையில் வரப்போகிற புது வருடம் பலரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர போகிறது. 2022-ல் சில ராசிக்காரர்களுக்கு அவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் பலனளிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2022-ல் கிரகங்களின் மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு தொழில்முறை வெற்றிக்கு மிகவும் சாதகமாக உள்ளது. வேலையை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றும் முதல் முதலாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் என உங்கள் நிலைமை என்னவாக இருந்தாலும் 2022 ஆம் ஆண்டு கணிப்புகள் இந்த ஆண்டு யாருடைய தொழில்முறை லட்சியங்கள் நிறைவேறும் என்பதை வெளிப்படுத்துகிறது. தொழில்முறை அதிர்ஷ்டம் கொண்ட ராசிகளில் உங்களின் ராசியும் இருக்கிறதா என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மே மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் இறுதிக்குள் குரு பகவான் மேஷத்தில் இருப்பதால், மேஷ ராசிக்காரர்களுக்கு வேலையில் முன்னேற்றம் மற்றும் தொழில் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் ஒரு வேலையைத் தேடிக்கொண்டிருந்தால், அவர்களுக்கான ஒரு வேலையை கண்டுபிடிப்பார்கள். வேலையில் இருப்பவர்கள் தற்போது இருப்பதை விட சிறப்பான வேலையைப் பெறுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நிலைத்தன்மையை வரவேற்க தயாராக இருக்கலாம். மிதுன ராசிக்காரர்களுக்கு ஆண்டு முழுவதும் சனியின் ஆதரவு இருக்கும். கூடுதலாக, குரு மே நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் இறுதி வரை அவர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும். இந்த காலக்கட்டத்திலேயே நீங்கள் புதிய வேலையில் சேர முயலுங்கள், ஏனெனில் இது உங்களுக்கு அதிர்ஷ்டமான காலமாகும். இருப்பினும், அதற்கு பிறகான காலம் உங்களுக்கு சிக்கலானதாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் உச்சத்தை அடைவதற்கான காலமிது. கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு தங்களை எப்படி உலகிற்கு நிரூபிப்பது என்பது தெரியும். இந்த ஆண்டு ஒரு புதிய வேலைக்கான புதிய ஒப்பந்தம் அவர்களின் சமூக நிலையை வலுப்படுத்தும், குறிப்பாக மே நடுப்பகுதி வரை இவர்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும். சமூகத்தில் தங்களின் அடையாளத்தை வலுவாக இவர்கள் பதிக்கப்போகிறார்கள்.

துலாம்
இந்த ஆண்டு துலாம் ராசிக்காரர்களின் கனவு நிறைவேறு காலமாக இருக்கும். இந்த வருடம் சனி மற்றும் குருவால் துலாம் ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள். எனவே பல்வேறு தொழில் வாய்ப்புகள் வருமென்று அவர்கள் நம்பலாம், மேலும் அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பார்கள். தொழில், வேலை என அனைத்திலும் நினைத்த மாற்றத்தை அவர்கள் அடைவார்கள்.

தனுசு
சனி தனுசு ராசிக்கு ஆண்டு முழுவதும் பொறுப்புகளை கொடுக்க காத்திருக்கிறார். மே 11 முதல் அக்டோபர் 28 வரை மேஷத்தில் உள்ள குருபகவானால், ஆண்டின் இறுதியில், அவர்கள் நிச்சயமாக ஒரு புதிய வேலையைப் பெறுவது உட்பட அவர்களின் தொழில்முறை அபிலாஷைகளை பூர்த்தி செய்வார்கள். வேலைத் தேடுபவர்கள் தங்களின் கனவு வேலையை அடைய வாய்ப்புள்ளது.

மீனம்
சுக்கிரன் மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு புதிய தொழில்முறை கதவுகளைத் திறக்கிறது. இந்த ராசிக்காரர்கள் 2022 இல் வேலையை அடைவார்கள் என்று எதிர்பார்க்கலாம், குறிப்பாக கற்பனை மற்றும் படைப்பாற்றல் மிக முக்கியமான துறைகளில் வேலை தேடுபவர்கள் சிறப்பான வேலையை பெறுவார்கள். வேலையை மாற்ற விரும்புபவர்களுக்கும் இந்த ஆண்டு வெற்றி கிடைக்கும்.



Click it and Unblock the Notifications