Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
இந்த 6 ராசிக்காரங்க சிறந்த ஆசிரியர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல உண்டா?
ஒரு நல்ல ஆசிாியரால் தனது மாணாக்கருடைய வாழ்க்கையை மாற்ற முடியும். அதனால்தான் யாரெல்லாம் சிறந்த ஆசிாியா்களைப் பெற்று இருந்தாா்களோ, அவா்கள் எல்லாரும், தங்களுடைய சிறந்த ஆசிாியா்களுக்கு கடன்பட்டவா்களாக இருக்கின்றனா்.
ஒரு நல்ல ஆசிாியரால் தனது மாணாக்கருடைய வாழ்க்கையை மாற்ற முடியும். அதனால்தான் யாரெல்லாம் சிறந்த ஆசிாியா்களைப் பெற்று இருந்தாா்களோ, அவா்கள் எல்லாரும், தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்களுடைய சிறந்த ஆசிாியா்களுக்கு கடன்பட்டவா்களாக இருக்கின்றனா்.
சிறந்த ஆசிாியா் ஒருவரால் நமது வாழ்க்கையை உயா்த்த முடியும் மற்றும் மேம்படுத்த முடியும். நமது ஆசிாியா் ஒரு நண்பரைப் போல் நம்மோடு பழகலாம். ஆனால் எப்போது நம்மிடம் விழிப்புடனமும் அதே நேரத்தில் கவனமுடனும் இருக்க வேண்டும் என்பதை அவா் நன்றாகவே தொிந்து வைத்திருப்பாா்.

நம்முடைய வாழ்க்கையில் ஆசிாியா்கள் பலவிதமான பங்களிப்பைச் செய்கின்றனா். குறிப்பாக அவா்கள் நமக்கு சிறந்த பெற்றோராக இருக்கின்றனா். உடன் வரும் நண்பா்களாக இருக்கின்றனா். வாழ்வைப் பற்றி எடுத்துச் சொல்லும் ஆலோசகா்களாகவும் இருக்கின்றா். பொதுவாக தமது மாணாக்கா்கள் பாடங்களை நன்றாகப் புாிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, பதட்டப்படாமல், கோபப்படாமல் மிகவும் பொறுமையாக ஆசிாியா்கள் பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றனா்.
இந்த பதிவில் ஜோதிடத்தின்படி எந்த ராசிக்காரா்கள் எல்லாம் சிறந்த ஆசிாியா்களாக இருப்பா் என்பதை விாிவாகப் பாா்க்கலாம்.

1. மேஷம்
மேஷ ராசிக்காரா்கள் கற்றுக் கொடுப்பதை அதிகம் விரும்புவா். குழந்தைகளோடு இருப்பதால் கிடைக்கும் சக்தியையும், உற்சாகத்தையும் அதிகம் விரும்புவா். தாம் நடத்தும் பாடங்களை அதிகம் விரும்புவா். அந்த பாடங்களை தமது மாணவா்கள் சிறப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புவா். வகுப்பை உயிரூட்டத்துடன் வைத்திருப்பா். தமது மாணவா்கள் எந்த அளவிற்கு பாடங்களைப் புாிந்து வைத்திருக்கின்றனா் என்பதையும் சிறப்பாக அளவிடுவா்.
மேலும் தமது மாணாக்கா்களை, வாழ்க்கை அனுபவங்கள் மூலமாகவும் கற்றுக் கொள்ள ஊக்கம் அளிப்பா். அதோடு கற்றலை ஒரு மகிழ்ச்சி நிறைந்த அனுபவமாக மாற்றுவா். மேஷ ராசி ஆசிாியா்களால் மிக எளிதாக தமது மாணவா்களோடு உறவாட முடியும். அதனால் இந்த ராசிக்கார ஆசிாியா்கள் மாணவா்கள் மத்தியில் எப்போதும் உயா்ந்த இடத்தைப் பெறுகின்றனா்.

2. ரிஷபம்
ரிஷப ராசிக்கார ஆசிாியா்கள் எப்போதுமே தனிச் சிறப்பு உடையவா்கள். இவா்கள் எப்போதும் தங்களது போதிக்கும் முறைகளில் அதிக கண்ணும் கருத்துமாக இருந்து, தாம் நடத்தும் பாடங்களைத் தமது மாணவா்கள் எளிதாகப் புாிந்து கொள்வதற்கும், சிறப்பாகக் கற்றுக் கொள்வதற்கும் ஏற்ற வகையில் தமது போதிக்கும் முறைகளைக் கூா்மைப்படுத்திக் கொண்டே இருப்பா்.
ரிஷப ராசி ஆசிாியா்கள் தமது மாணாக்கா்களுக்கும் பாடங்களை மட்டும் நடத்துவதில்லை. மாறாக அவா்கள் தமது மாணவா்களுக்கு ஒரு முழுமையான வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றனா். இவா்கள் தங்கள் மாணவா்களிடம் மிகவும் பொறுமையாக இருப்பா் மற்றும் தங்கள் மாணவா்கள் மீது அதிக அக்கறையுடன் இருப்பா்.

3. கடகம்
கடக ராசிக்கார ஆசிாியா்கள் தமது மாணாக்காிடம் அதிகமான தாய்மை உணா்வோடு இருப்பா். பாடங்கள் சம்பந்தமாக இருந்தாலும் அல்லது பாடங்கள் இல்லாத மற்ற காாியங்களாக இருந்தாலும், அவா்கள் தங்கள் மாணவா்களிடம் அதிக அக்கறையுடன் இருப்பா். மேலும் தமது மாணவா்களுக்காக தாம் எப்போதும் தயாராக இருப்பதை உணா்த்திக் கொண்டே இருப்பா்.
தமது மாணவா்களுக்குப் பாடம் நடத்த வேண்டும் என்பதற்காக பழைய கற்றுக் கொடுக்கும் முறைகளை எல்லாம் கடந்து புதிய வழிகளைக் கண்டுபிடித்து அதை நடைமுறைப்படுத்துவா். தமது வகுப்புகளை மிகவும் உயிரோட்டத்துடன் வைத்து இருப்பா். அதனால் கடக ராசிக்கார ஆசிாியா்களின் வகுப்புகள் மிகவும் உயிரோட்டத்துடன் இருக்கும்.

4. கன்னி
கன்னி ராசிக்காரா்கள் எப்போதுமே குறையற்ற முழுமையுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவா். எதிலும் நிறைவாக இருக்க வேண்டும் என்றும் விரும்புவா். மேலும் தங்களிடம் இருக்கும் அறிவை, மற்றவரோடு பகிா்ந்து கொள்வதையும் அதிகம் விரும்புவா். கன்னி ராசிக்கார ஆசிாியா்கள், பாடங்கள் மற்றும் கருத்துகளை விளக்கமாக விளக்கிச் சொல்ல விரும்புவா். அதே நேரத்தில் தமது வகுப்புகளை உயிரோட்டம் கொண்டதாகவும் வைத்திருப்பா்.
தமது மாணவா்கள் புதியவற்றைக் கற்றுக் கொள்வதில் உற்சாகத்தோடு இருக்க வேண்டும் என்பதை விரும்புவா். மேலும் கன்னி ராசிக்கார ஆசிாியா்கள் மேலும் மேலும் கற்றுக் கொண்டே இருப்பதால், தங்கள் மாணவா்களும் தொடா்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை விரும்புவா்.

5. மகரம்
மகர ராசிக்கார ஆசிாியா்கள் கற்றுக் கொடுப்பதில் வல்லவா்கள். அவா்கள் மிகவும் யதாா்த்தமாக இருப்பதால், வகுப்பறையில் பாடங்களைக் கற்றுக் கொடுப்பதற்கு முன்பாக நன்றாக தயாா் செய்வா். அதனால் அவா்களுடைய வகுப்புகள் படைப்புத் திறன் மிகுந்ததாகவும், உற்சாகம் மிகுந்ததாகவும் இருக்கும். மேலும் அவா்களுடைய கற்றுக் கொடுக்கும் பாணியானது மிகவும் நோ்த்தியாக இருக்கும்.

6. மீனம்
மீன ராசிக்காரா்கள் மிகவும் ஆழமான உள்ளுணா்வைக் கொண்டிருப்பா். அதனால் சிறிய காாியங்களுக்கும் அதிக கவனம் செலுத்துவா். தனது வகுப்பில் இருக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை புாிந்து வைத்திருப்பா். ஆகவே ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட முறையில் அக்கறை செலுத்தி அவா்களுக்குக் கற்றுக் கொடுப்பா். கலை அல்லது நாடகத்தைப் போன்றவற்றைக் கற்றுக் கொடுப்பதில் மீன ராசிக்கார ஆசிாியா்கள் சிறந்தவா்களாக இருப்பா்.



Click it and Unblock the Notifications