For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரங்க வாழ்க்கை முழுவதும் சிறந்த நண்பராக இருப்பார்களாம்... உங்க நண்பர் எந்த ராசி?

|

இன்றைய வாழ்க்கை முறையில் உறுதியான நட்பை பராமரிப்பது என்பது பலருக்கும் கடினமான ஒன்றாக இருக்கிறது. நம்முடைய பெற்றோர், சகோதரர்கள் என யாரையும் நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது. நம்மால் தேர்ந்தெடுக்க கூடிய ஒரே வலிமையான உறவு நண்பர்கள்தான். நல்ல நண்பர்களை எப்படி தேர்ந்தெடுப்பது, அவர்களுடன் எப்படி உறவை உருவாக்குவது மற்றும் பராமரிப்பது என்பது அனைவராலும் முடியாத ஒன்றாகும்.

நல்ல நண்பர்கள் அமைந்துவிட்டால் வாழ்க்கையில் மிகப்பெரிய சுமையே குறைந்தது போலத்தான். நண்பர்களின் முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் அறிவார்கள், ஆனால் அனைவராலும் நல்ல நண்பராக இருக்கவோ அல்லது நல்ல நண்பர்களை வைத்துக்கொள்ளவோ முடிவதில்லை. சில ராசிக்காரர்களுக்கு நண்பர்களை தேர்ந்தெடுப்பதும், அந்த உறவை வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பதும் எளிதானதாக இருக்கும். இந்த பதிவில் அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் யார் யாரென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் தங்களின் நண்பர்களை தேர்வு செய்வதில் புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் பல நண்பர்களாக இருந்தாலும் சரி, வெகுசில நண்பர்களாக இருந்தாலும் சரி எல்லாரையும் தக்கவைத்துக் கொள்ள எப்போதும் முயற்சி செய்வார்கள். இவர்கள் நம்பகமானவர்களாகவும் எப்போதும் ஆதரவாளர்களாகவும் இருப்பார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றவும், எப்போதும் உங்களுக்கு பின்னாடி ஆதரவாகவும், உங்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் ஆதரவாகவும் அவர்கள் இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் நட்பில் இருந்து வெளியேறமாட்டார்கள், ஒருவேளை அவர்கள் வெளியேறினால் அதற்கு பின்னால் வலிமையான காரணம் இருக்கும்.

 மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் நட்பில் அதிக கவனமும், ஆற்றலும் செலவழிப்பார்கள். அவர்கள் பிஸியாக இருப்பவர்கள், ஆனால் அவர்கள் எப்போதும் தங்கள் நண்பர்களுக்காக நேரத்தை செலவிடுகிறார்கள். அவர்கள் ஒரு பெரிய சமூக வட்டத்தைக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு மிக நீண்ட காலமாக இருந்த ஒரு சில நண்பர்களும் எப்போதும் இருப்பார்கள். மேஷம் நெகிழ்வானவர்கள் மற்றும் சாகசங்களை மேற்கொள்பவர்கள், புதிய விஷயங்களை முயற்சிப்பது அல்லது போட்டிகளில் பங்கேற்பது என எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள். தங்கள் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இவர்கள் நினைப்பது நட்பைத்தான். கடினமான சூழ்நிலைகளில் எப்போதும் இவர்கள் நண்பர்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

MOST READ: பண்டைய கால இந்திய பெண்களின் மின்னும் அழகிற்கு காரணமாக இருந்தது இந்த பொருட்கள்தான்...!

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் அருமையான நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்குவார்கள், இவர்களுடன் நண்பர்களாக இருக்க அனைவரும் விரும்புவார்கள். இவர்கள் எப்பொழுதும் நண்பர்கள் சூழ இருந்தாலும் இவர்களுக்கு ஒரு சிலர் மட்டுமே இவர்களுக்கு நெருக்கமான நண்பர்களாக இருப்பார்கள். நெருங்கிய நண்பர்களுக்கு இவர்கள் எப்பொழுதும் தங்களின் முழு அன்பை வழங்குவார்கள். இவர்களின் நட்பானது எல்லைகளை கடந்ததாக இருக்கும். இவர்கள் ஒருபோதும் நண்பர்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள், மனதளவில் காயப்படாதவரை இவர்கள் ஒருபோதும் நட்பை விட்டு வெளியேறமாட்டார்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எப்பொழுதும் அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர்கள். இவர்கள் அனைவருக்குமே வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்க விரும்புவார்கள். தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு நண்பர்கள் கிடைத்தாலும் இவர்கள் பழைய நண்பர்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எவ்வளவு நண்பர்கள் வந்தாலும் உடனழைத்து செல்லத்தான் விரும்புவார்களே தவிர யாரையும் விட்டுவிட மாட்டார்கள். புதிய நண்பர்களை உருவாக்க விரும்பினாலும் பழைய நண்பர்களை பொக்கிஷமாக இவர்கள் பாதுகாப்பார்கள். இவர்கள் தங்கள் நண்பர்களின் வாழ்க்கையில் ஆச்சரியங்களை உருவாக்குவார்கள்.

ரிஷபம்

ரிஷபம்

தங்கள் வாழ்க்கையில் யாருடைய நட்பை வாழ்நாள் முழுவதும் வைத்திருக்க வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். அளவற்ற அன்பை கொடுக்க இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள், இவர்கள் நம்பகமானவர்களாகவும், பொறுமையானவர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இவர்கள் தயங்காமல் செய்வார்கள். இந்த ராசிக்காரர்கள் சிறந்த நண்பர்கள் என்ற நற்பெயரைக் கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை தீவிரமடையும் போது இவர்கள் நண்பர்களை கைவிடமாட்டார்கள், இதைத்தான் அவர்களின் நண்பர்களும் எதிர்பார்ப்பார்கள்.

MOST READ: உங்க ராசிப்படி இந்த காதலர் தினத்துல உங்க வாழ்க்கையில் என்ன மாற்றம் வரப்போகுது தெரியுமா?

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் வாழ்நாள் முழுவதும் நட்பை பராமரிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை, ஏனெனில் இவர்கள் நண்பர்களாக கிடைத்தவர்கள் ஒருபோதும் இவர்களை விட்டு விலகமாட்டார்கள். அவர்கள் உங்கள் பிரச்சினைகளை கையாளுவதில் சிறந்தவர்கள், சிறந்த தீர்வுகளை வழங்குவார்கள். இவர்களுடன் இருக்கும்போது பிரச்சினைகளால் ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும். தங்கள் நண்பர்களின் முகத்தில் எப்பொழுதும் புன்னகை இருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புவார்கள். அவர்கள் தங்கள் நட்பில் அரவணைத்துக் கொள்ளக்கூடியவர்களாகவும், தங்கள் நண்பருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு முன்பு தங்கள் நண்பருக்கு என்ன தேவை என்பதை பெரும்பாலும் அறிவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Zodiac Signs Who Know How To Form Lifelong Friendships

Here is the list of zodiac signs who know how to form lifelong friendships.
Story first published: Saturday, February 8, 2020, 18:14 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more