Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த 6 ராசிக்காரங்களுக்கு 2022-ல் சொந்த வீடு வாங்குற அதிர்ஷ்டம் இருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா?
2022ம் ஆண்டு புத்தாண்டின் மீது எல்லோருக்கும் பல எதிர்பார்ப்புகள் உள்ளன. 2021 முடிய இன்னும் ஒரு மாதமே உள்ளதால், இனி வரும் ஆண்டில் புதிதாக என்ன செய்வது என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
2022ம் ஆண்டு புத்தாண்டின் மீது எல்லோருக்கும் பல எதிர்பார்ப்புகள் உள்ளன. 2021 முடிய இன்னும் ஒரு மாதமே உள்ளதால், இனி வரும் ஆண்டில் புதிதாக என்ன செய்வது என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டில் பலவிதமான நன்மைகள் மற்றும் தீமைகள் இருந்தாலும், பலருக்கு இந்த ஆண்டு கசப்பு மற்றும் இனிமையான நினைவுகள் நிறைந்ததாக உள்ளது.

சில ஆண்டுகள் உங்களின் கனவுகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் பிறக்கலாம். அனைவருக்கும் சொந்த வீடு என்பது நெடுநாள் கனவாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஒவ்வொரு ஆண்டு பிறக்கும்போதும் இந்த ஆண்டாவது சொந்த வீடு வாங்க மாட்டோமா என்று ஏங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். பிறக்கப்போகிற புது வருடம் சில ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு வாங்கும் அதிர்ஷ்டத்தை அளிக்கவிருக்கிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சொந்த நிலம் அல்லது வீடு வாங்க அதிர்ஷ்டமான வருடமாக இருக்கப்போகிறது. உங்களின் முயற்சிகள் உங்களுடைய நீண்ட நாள் கனவான சொந்த வீடு நோக்கி உங்களை அழைத்துச் செல்லப்போகிறது. இது தவிர, குடும்பம் அல்லது உறவினர்களின் கொண்டாட்டங்களில் அதிகம் செலவிடப் போகிறீர்கள். இருப்பினும், எந்த பெரிய முதலீட்டையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். சொத்து சம்பந்தமாக ஏதேனும் பெரிய முடிவை எடுத்தால் அதனை குடும்பத்தினர் அனைவரிடமும் ஆலோசியுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 11ம் வீட்டில் சனியின் பார்வை இருப்பதால், இந்த வருடம்இவர்களுக்கு சகல சுகபோகங்களும் உண்டாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் வியாழன் திசையை மாற்றுவது உங்கள் அதிர்ஷ்டத்தையும் மாற்றும். இதனால் சொந்த வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2022 மிகவும் சாதகமாக இருக்கும். இரண்டாம் வீட்டில் குருவும், சனியும் இணைவதால் அதிர்ஷ்ட காத்து உங்கள் பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது. இதனால் நிதி நிலை வலுவாக இருக்கும். ஆண்டின் இறுதியில், நீங்கள் சொந்த வீடு அல்லது நிலம் வாங்க பிரகாசமான வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2022-ம் ஆண்டு சொத்துக்களைப் பொறுத்தவரை சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வாகனம், வீடு இரண்டையும் சரியான நேரத்தில் வாங்க வாய்ப்புள்ளது. வீடு, கட்டிடம் வாங்க உங்களுக்கு ஏற்ற வருடம் இது. முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஆண்டின் இரண்டாம் பாதியில் வெற்றி கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நான்காம் வீட்டில் குரு வருவதால் இந்த ஆண்டு செல்வம் சம்பாதிக்கும் வாய்ப்பு அதிகம். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெற வலுவான வாய்ப்புள்ளது. ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் புதிய வீடு வாங்கலாம். பிறக்கப்போகிற புது வருடம் உங்களுக்கான ஆண்டாகும்.

துலாம்
2021-ல் பல இன்னல்களை சந்தித்த துலாம் ராசிக்காரர்களுக்கு வரப்போகிற வருடம் அதிர்ஷ்டமானதாக இருக்கப்போகிறது. துலாம் ராசிக்காரர்களுக்கு வீடு வாங்குவது, விற்பது போன்றவற்றில் இந்த வருடம் பலன் தரும். இருப்பினும், இந்த ஆண்டு நீங்கள் பரம்பரை சொத்துக்களை விற்கக்கூடாது. இது உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். சொத்துக்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.



Click it and Unblock the Notifications