Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் கண்டதும் காதலில் விழுந்து விடுவார்களாம் தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே காதல் உணர்வு அதிகம் இருக்கும். அவர்கள் மனதிற்கு பிடித்தது போல யாரையாவது பார்த்தால் உடனடியாக அவர்கள் மேல் காதலில் விழுந்து விடுவார்கள்
காதலில் விழுவதற்கு ஒருவருக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்? வாரங்கள், மாதங்கள் ஏன் சிலருக்கு வருடங்கள் கூட தேவைப்படும். ஆனால் சிலருக்கோ ஒரு நொடி போதும் காதலில் விழா. காலம் காலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவிற்கு ஹீரோயினை பார்த்த முதல் நொடியிலேயே காதல் வந்துவிடும். ஆனால் இதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும் என்று நினைத்தால் அது தவறு, நிஜத்திலும் அப்படி நடக்க வாய்ப்புள்ளது.
உண்மைதான், ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே காதல் உணர்வு அதிகம் இருக்கும். அவர்கள் மனதிற்கு பிடித்தது போல யாரையாவது பார்த்தால் உடனடியாக அவர்கள் மேல் காதலில் விழுந்து விடுவார்கள். மிகவும் சீரியசாக செல்லவில்லை என்றாலும் அவர்கள் மனதில் கற்பனை கொட்டைகளை கட்டத் தொடங்கி விடுவார்கள். சிலருக்கு இதுபோன்ற காதல் கைகூடும் அதிசயங்களும் நடக்க வாய்ப்புள்ளது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் கண்டதும் காதல் விழுவார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக நீண்ட காலம் காதலில் இருக்க மாட்டார்கள், ஆனால் வேகமாக காதலில் விழுந்து விடுவார்கள். அவர்கள் வெளியுலகத்தின் மீது அதிக அன்பை செலுத்துவார்கள். காதலில் இருக்கும்போது இவர்களின் உணர்வுகள் போலியாக இருக்காது. இவர்களின் பெரிய மனதும், சுட்டித்தனமான நடவடிக்கைகளும் இவர்களை விரைவில் காதலில் விழ வைக்கும். இவர்கள் அதிகமாக காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் விரும்புவார்கள். இவர்கள் எதிர்காலத்தை பற்றி கவலைப்பட மாட்டார்கள் நிகழ்காலம் மகிழ்ச்சியை இருப்பதை மட்டுமே இவர்கள் விரும்புவார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் ஒருவரின் மீது காதலில் விழ குறுகிய காலமே போதும், ஒருவரை பற்றி சிறிது தெரிந்து கொள்வதே இவர்களுக்கு காதலில் விழபோதும். பொதுவாக இவர்கள் தங்களின் வாழ்வில் ஆதரவாக இருக்கும் ஒரு நபரால் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள். ஒருவேளை உங்களுக்கும் அவர்கள் மீது காதல் இருந்தால் நீங்கள் அதனை அவர்களிடம் சொல்லும்போது " நானே இதனை உங்களிடம் சொல்ல நினைத்தேன் " என்று கூறிவிடுவார்கள். தங்களின் முடிவு எப்போதும் தவறாக போகாது என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் எதிர்பார்க்கும் மரியாதையை மட்டும் கொடுத்துவிட்டால் போதும் அவர்கள் எளிதில் காதலில் விழுந்து விடுவார்கள். மரியாதையாக பழகும்போதும், ஒழுக்கமாக நடந்து கொள்ளும்போதும் இவர்கள் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு தங்களின் தகுதி என்னவென்று நன்கு தெரியும், எனவே அதனை மதிப்பவர்கள் மீது உடனே காதல் வந்துவிடும். உற்சாகமாகவும், ஆர்வமாகவும் காதலிப்பது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். தன்னை போலவே குணம் கொண்டவர்களை பார்க்க நேர்ந்தால் அவர்கள் மீது காதலில் விழ இவர்களுக்கு ஒரு நிமிடம் போதும்.

துலாம்
இவர்கள் அடிக்கடி காதலில் விழுந்து எழுவார்கள். இவர்கள் ஏன் காதலில் விழுகிறார்கள் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. தன்னை சுற்றிய கவன ஈர்ப்பையும், பொழுதுபோக்கான நேரத்தையும் இவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் அதிலிருந்து வெளிய வந்துவிட்டால் இவர்கள் அந்த உறவிலிருந்து வெளியேறிவிடுவார்கள். தன்னிடம் அன்பு காட்டும் எவரின் மீதும் இவர்கள் எளிதில் காதலில் விழுந்து விடுவார்கள். ஆனால் தனது துணையின் உண்மை முகம் தெரிய வந்தால் உடனடியாக அந்த உறவில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள். நேர்மையின் சின்னமாக இருக்கும் துலாம் ராசியிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

மீனம்
ஒருவருடன் பழகிய பிறகு அவர் தனக்கு ஒத்துவருவரா என்பதை முடிவு செய்த பிறகே மீன ராசிக்காரர்கள் காதலில் விழுவார்கள். ஆனால் இந்த முடிவெடுக்க அவர்கள் எடுத்துக்கொள்ளும் காலம் மிகவும் குறைவானதாக இருக்கும். தனக்கு தேவையான அன்பும், முக்கியத்துவமும் கிடைக்கும் பட்சத்தில் இவர்கள் அந்த உறவில் நிலைத்திருப்பார்கள். அனைவருக்குள்ளும் இருக்கும் அழகையும், நல்ல குணத்தையும் பார்க்கும் பழக்கம் கொண்டவர்கள் இவர்கள். ஆனால் தனது உணர்ச்சிகளுக்கு மதிப்பு இல்லாத உறவில் இவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications