Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த 4 ராசிக்காரங்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம்தானாம்... காதல் திருமணம் நடக்க வாய்ப்பே இல்லையாம்...
திருமண உறவு மிகவும் புனிதமானது, அது மகிழ்ச்சியானதாகவும்,வெற்றிகரமானதாவும் இருக்க நிறைய கடின உழைப்பு தேவைப்படுகிறது.
திருமண உறவு மிகவும் புனிதமானது, அது மகிழ்ச்சியானதாகவும்,வெற்றிகரமானதாவும் இருக்க நிறைய கடின உழைப்பு தேவைப்படுகிறது. ஒரு திருமணமானது வாழ்க்கைத்துணையின் குணாதிசயங்கள் மற்றும் திருமண உறவில் இணைவதற்கான அவர்களின் விருப்பத்தைப் பொறுத்து சிறந்த அல்லது மோசமான திருமண உறவை வெளிப்படுத்த முடியும்.

சிலருக்கு காதல் திருமணம் தேவைப்படுவதோடு, நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள நீண்ட காலம் தேவைப்படும். இருப்பினும், நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலும் சிறப்பாக வாழும் ராசிக்காரர்கள் சிலர் உள்ளனர். எனவே ராசிகளின் குணாதிசயங்களின் அடிப்படையில், நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற வாய்ப்புள்ள ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

துலாம்
இந்த இராசிக்காரர்கள் உணர்ச்சிகள் விஷயத்தில் மிகவும் சமநிலையாக இருப்பார்கள். அவர்கள் விசுவாசமாகவும் ஆதரவாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அர்ப்பணிப்புக்கு பயப்பட மாட்டார்கள், அவர்கள் உறவில் முழுமையாக நுழைந்தவுடன் அதில் முழு ஈடுபாட்டுடன் இருப்பார்கள். இந்த ராசி அடையாளம் பெரும்பாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை செய்து கொள்வார்கள். ஆனால் திருமண உறவில் அவர்கள் அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும், மிகவும் பேணுதலுடனும் இருப்பார்கள்.

மீனம்
பெரும்பாலான மீன ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மோசமான முடிவுகளை எடுப்பதால், காதல் வாழ்க்கை அவர்களுக்கு கசப்பானதாகவே இருக்கும். காதல் திருமணமாக இருந்தால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியானதாக இல்லாமலும் போகலாம். அதனால்தான், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த ராசிக்காரர்கள் தங்கள் சொந்த விருப்பத்தை நம்பாததால், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தைத் தேர்வு செய்கிறார்கள். இருப்பினும், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில், அவர்கள் முழு ஈடுபாட்டுடன் இருப்பார்கள், மேலும் நீங்கள் அவர்களில் ஒரு ஆத்ம துணையை கூட காணலாம். அவர்கள் நிபந்தனையின்றி தங்கள் துணையை நேசிக்கிறார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் அக்கறையுடனும், உணர்ச்சியுடனும் இருப்பார்கள், அவர்கள் அர்ப்பணிப்பு மற்றும் அன்பை மதிக்கிறார்கள். அவர்கள் நிலையான கவனம் மற்றும் பாசத்திற்காக ஏக்கத்துடன் இருக்கிறார்கள், அதனை புரிந்து கொள்ளும்போது, அவர்கள் சிறந்த துணையாக இருக்க முடியும். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இது அவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது, அவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள் மேலும் இது திருமண உறவை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

விருச்சிகம்
அவர்கள் மர்மத்தை விரும்புகிறார்கள் மற்றும் விசுவாசம் அவர்களுக்கு முதன்மையானது. அவர்கள் மற்றவருடன் வாழக்கூடிய நேர்மறையான அதிர்வுகளைப் பெறும் வரை, அவர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை செய்து கொள்ள தயாராக உள்ளனர். மர்மமான மற்றும் விசுவாசமாக இருப்பது ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை வெற்றிகரமாக மாற்றுவதற்கான அவசியமான குணங்களாகும்.

காதல் திருமணம் செய்ய வாய்ப்புள்ள ராசிகள்
மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் தங்கள் துணையை சிறிது காலம் அறிந்த பிறகு காதல் திருமணத்தில் ஆர்வம் காட்டுவார்கள். ஒருவரை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல என்பதை அவர்கள் அறிவார்கள், எனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் அவர்களுக்கு அரிதாகவே மகிழ்ச்சியாக அமைகிறது.



Click it and Unblock the Notifications