Latest Updates
-
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்?
இந்த 5 ராசிக்காரங்களுக்கு அவங்க நினைச்ச மாதிரியே காதல் கிடைக்கிற அதிர்ஷ்டம் இருக்காம்... வாழ்வுதான்!
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கான ஒருவரை நீங்கள் சந்தித்தால், நீங்கள் உடனடியாக அறிந்து கொள்வீர்கள். அந்த உணர்வு நீங்கள் முன்பு அனுபவித்த வேறு எந்த உறவும் அல்லது காதலின் உணர்வுகளோடு ஒப்பிடமுடியாததாக இருக்கும்.
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கான ஒருவரை நீங்கள் சந்தித்தால், நீங்கள் உடனடியாக அறிந்து கொள்வீர்கள். அந்த உணர்வு நீங்கள் முன்பு அனுபவித்த வேறு எந்த உறவும் அல்லது மற்ற காதலின் உணர்வுகளோடு ஒப்பிடமுடியாததாக இருக்கும். உங்களுக்கான ஒருவரை சந்திப்பது அல்லது உண்மையான காதலை உணர்வது எப்போது வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் நடக்கலாம்.

எதிர்பாராத நிகழ்வுகள் நீங்கள் தேடிக்கொண்டிருப்பவரை சந்திக்க வைக்கும். உங்களுக்கும் உங்களுக்கான கூட்டாளருக்கும் இடையே அறிமுகம் மற்றும் பிணைப்பைத் தொடங்கும் சில வினோதமான தற்செயலான சம்பவங்கள் கூட ஏற்படலாம். இந்த பதிவில் தற்செயலாக அவர்களின் உண்மையான காதலை சந்திக்கும் அதிர்ஷ்டம் கொண்ட ராசிக்காரர்கள் யாரென்று பார்க்கலாம்.

மேஷம்
இவர்கள் பொறுப்பற்றவர்கள், மனக்கிளர்ச்சி மற்றும் தன்னிச்சையான இயல்புடையவர்கள். எனவே அவர்கள் தங்கள் உண்மையான காதலை தற்செயலாக சந்திப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அவர்கள் தங்கள் எதிர்கால கூட்டாளியை பல்பொருள் அங்காடியில் அல்லது கிரிக்கெட் மைதானத்தில் கூட பார்க்கக்கூடும், அதே நேரத்தில் அவர்கள் மக்களை ஈர்க்க தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். ஒருபோதும் அவர்களை மிஸ் செய்யமாட்டார்கள்.

கடகம்
இவர்கள் காதல், உணர்திறன் மற்றும் விசித்திரக் கதைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் தங்கள் சிறப்பு வாய்ந்த ஒருவரை மிகவும் காதல் மற்றும் எதிர்பாராத விதத்தில் சந்திக்க விரும்புகிறார்கள். எனவே இவர்கள் தங்கள் துணையை தற்செயலாக சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் யாரையாவது அடிக்கடி சந்திக்கலாம், ஆனால் அந்த நபர்தான் தங்களின் உண்மையான காதல் என்று அவர்கள் உடனடியாக புரிந்து கொள்ள மாட்டார்கள்.

சிம்மம்
எல்லா வகையிலும் மிக அழகான மற்றும் எதிர்பாராத ஒரு காதல் கதையைப் பெற அவர்கள் எதையும் செய்வார்கள். ஆனால் தற்செயலாக, அவர்கள் நண்பர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒருவரைச் சந்திக்கலாம், அது பின்னர் காதலாக மாறும். ஆனால் சிம்ம ராசிக்காரர்கள் எப்பொழுதும் வாய்ப்புகளை எடுக்க தயாராக இருக்கிறார்கள். இவர்கள் கையிலிருந்து வாய்ப்புகள் ஒருபோதும் நழுவாது.

துலாம்
இவர்கள் வாழ்க்கையில் அனைத்திலும் சமநிலையைக் கடைபிடிப்பவர்கள். வாழ்க்கையில் எதை மதிக்க வேண்டும், எதைக் கூடாது என்பதில் அதீத உணர்வைக் கொண்ட இவர்கள் மகிழ்ச்சியான-அதிர்ஷ்டசாலிகள். எல்லாம் ஒரு காரணத்திற்காக நடக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். எனவே துலாம் ராசிக்காரர்கள் தங்கள் கூட்டாளியை தற்செயலாக பூங்காவில் அல்லது மழை பெய்த மாலை நேரத்தில் சாலையில் போன்ற தங்களுக்குப் பிடித்த இடத்தில் சந்திக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அவர்களின் கனவு பலிக்கவும் வாய்ப்புள்ளது.

மீனம்
இவர்கள் தங்களின் சாதாரண துணையை அதிகம் தேட மாட்டார்கள். அவர்கள் தங்கள் ஆத்ம துணையைத் தேடுவதில் நேரத்தை செலவிடுவதைப் போலல்லாமல் வாழ்க்கையை அதன் ஓட்டத்துடன் வாழ்கிறார்கள். எனவே மீன ராசிக்காரர்கள் தங்கள் உண்மையான காதலை தற்செயலாக சந்திக்கும் வாய்ப்பு மற்ற ராசி அறிகுறிகளை விட அதிகமாக உள்ளது. இவர்கள் ரொமாண்டிக்கில் அதிக நம்பிக்கை உடையவர்கள், அவர்கள் தங்கள் துணையை மிகவும் அன்பான வழியில் சந்திக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.



Click it and Unblock the Notifications