Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த 4 ராசிக்காரர்களுக்கு தீபாவளி அதிர்ஷ்டத்தை அள்ளித்தர போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
தீபாவளி ஆண்டின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளம், இந்தோனேசியா, பிஜி, மொரிஷியஸ், மலேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரிலும் கூட கொண்டாடப்படுகிறது.
தீபாவளி ஆண்டின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளம், இந்தோனேசியா, பிஜி, மொரிஷியஸ், மலேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரிலும் கூட கொண்டாடப்படுகிறது. இது இந்து என்று அடையாளப்படுத்துபவர்களால் மட்டுமல்ல, சீக்கியம், ஜைனம் மற்றும் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களாலும் அன்புடன் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த அமாவாசை இரவையும் குறிக்கிறது. லக்ஷ்மி தேவி நம் இல்லங்களுக்குச் சென்று செழிப்பு, ஆரோக்கியம், செல்வம் மற்றும் அன்புடன் நம்மை ஆசீர்வதிக்கும் இரவு இது. சில ராசிகள் லக்ஷ்மி தேவியின் அருளால் இந்த தீபாவளியில் அளவில்லா நன்மைகளை பெறப்போகிறார்கள். உங்கள் ராசி அந்த பட்டியலில் இருக்கிறதா என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளிக்கு பின் பிரகாசமான எதிர்காலம் இருக்கும். வாரத்தின் நடுப்பகுதிக்குப் பிறகு, அதாவது புதன்கிழமை, துலாம் ராசிக்காரர்கள் சில பெரிய சாதனைகளைச் செய்யலாம். தீபாவளி வாரத்தில் அவர்கள் நிதி ஆதாயங்களைப் பெறலாம். அவர்கள் சில காலமாக எதிர்கொண்டிருந்த பதற்றத்திலிருந்து இனி விடுபடலாம்.

கன்னி
தீபாவளி வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. எனவே, கன்னி ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் பெரிய லாபம் பெறலாம். அவர்கள் மனரீதியாக வலுவாக இருப்பார்கள் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்காக உண்மையிலேயே அவர்கள் முயற்சி செய்யத் தொடங்குவார்கள். அவர்கள் முயற்சி உண்மையில் அவர்கள் அளவற்ற பலன்களை அளிக்கப்போகிறது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, தீபாவளி வாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். அவர்கள் புதிதாக ஏதாவது செய்ய திட்டமிட்டிருந்தால் அவர்களின் திட்டங்கள் வெற்றியடையும் காலமிது. நிதிரீதியாக கடக ராசிக்காரர்கள் இந்த தீபாவளியில் மிகப்பெரிய பலன்களை பெறப்போகிறார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தீபாவளிக்கு பின்பெரிய நிதி ஆதாயம் பெறலாம். அவர்கள் புதிய நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தலாம், இது எதிர்காலத்தில் அவர்களுக்கு உதவக்கூடும். இந்த தீபாவளிக்கு பின் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கை மாற வாய்ப்புள்ளது.

சுமாராக இருக்கப்போகும் ராசிகள் எது?
மேலே சொன்ன நான்கு ராசிகளைத் தவிர்த்து மிதுனம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு தீபாவளி சராசரியாக பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருக்கும். இது தவிர்த்து மீதமுள்ள ராசிக்காரர்கள் இந்த தீபாவளியில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் பெரிய பொருள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications