Just In
Don't Miss
- News
நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தமிழை மறந்த மாணவர்கள்! ஃபெயில்கள் அதிகரிப்பு- டிஜிபி சைலேந்திர பாபு
- Movies
டயலாக்கை உளறி தள்ளும் ஆண்ட்ரியா.. என்ன செஞ்சாலும் ரொம்ப கியூட் நீங்க கொஞ்சும் ரசிகர்கள்!
- Sports
என்னுடைய பணிக்காலம் பிசிசிஐயின் பொற்காலம்.. எந்த சர்ச்சைகளுக்கும் இடமில்லை.. கங்குலி கருத்து
- Automobiles
இனி அதிவேகமாக வாகனம் ஓட்டினால் இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும்... வருகிறது புது ரூல்ஸ்...
- Technology
இன்று பூமியை நெருங்கும் ஆபத்தான சிறுகோள்: இறுதி நொடியில் கண்டுபிடித்த NASA- பூமிக்கு ஆபத்தா?
- Finance
தங்கம் தான் விமோசனம்.. 192% பணவீக்கத்தை குறைக்க இதுதான் ஓரே வழி..!
- Travel
ஆசியாவிலேயே மிக உயரமான பாராகிளைடிங் ஸ்பாட் – பிர் பில்லிங்கில் ஒரு சகாசச் சுற்றுலா!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இந்த 5 ராசிக்காரங்கள யாராலையும் ஏமாத்த முடியாதாம்... அவ்ளோ புத்திசாலியாம் இவங்க... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. மேலும் அனைத்து ராசிகளுக்கும் அவற்றுக்கென சொந்த கிரகங்கள் உள்ளன. இந்த கிரகங்கள் ராசிக்காரர்களுக்கு முழு பலனைத் தரும். ஒவ்வொரு ராசிக்குமென ஆளுமை, இயல்பு, நடத்தை, தகுதிகள் மற்றும் தீமைகள் என்ன, அது கிரகங்களால் குறிக்கப்படுகிறது.
கிரகங்களின் பலன்களின் படி, மிகவும் புத்திசாலிகள் மற்றும் மேதாவிகள் என்று கருதப்படும் சில ராசிக்காரர்கள் உள்ளன. இவர்களை ஏமாற்றுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களை யாராலும் முட்டாளாக்க முடியாது என்று பார்க்கலாம்.

விருச்சிகம்
ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்கள் புத்திசாலிகள். மேலும் இவர்கள் மிகவும் புத்திக்கூர்மை வாய்ந்தவர்கள். யாராவது அவர்களை முட்டாளாக்க முயன்றால், அவர்கள் அதைப் பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்கிறார்கள். இதனால் இவர்கள் ஏமாறுவதற்கு முன்னரே எச்சரிக்கையாகி விடுகின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த வேலையையும் மிகுந்த சிந்தனையுடன் செய்கிறார்கள். விஷயங்களை முன் கூட்டியே உணரும் ஒரு தனி குணம் அவர்களிடம் உள்ளது.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் விருச்சிக ராசிக்குப் பிறகு புத்திசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். அவர்களின் கண்களும் காதுகளும் எப்போதும் திறந்திருக்கும். இந்த ராசிக்காரர்களின் மனம் எப்பொழுதும் புதிதாக ஒன்றைச் செய்வதில் ஈடுபாட்டுடன் இருக்கும். இந்த நபர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான விஷயங்களுடன் முன்னேறுகிறார்கள்.

சிம்மம்
இந்த ராசிக்காரர்கள் மனதளவில் கூடுதல் முயற்சி தேவைப்படும் பணிகளைச் செய்வதில் வல்லவர்கள். இவர்கள் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க அஞ்சமாட்டார்கள் மற்றும் அவர்களின் கூர்மையான அறிவுத்திறன் காரணமாக, அவர்கள் தங்கள் வேலையில் வெற்றி பெறுகிறார்கள். இவர்களை ஏமாற்ற நினைப்பவர்கள் எப்பொழுதும் தங்கள் முயற்சியில் தோல்வியை மட்டுமே தழுவுவார்கள்.

தனுசு
இந்த ராசிக்காரர்களின் மனமும், மூளையும் மிகவும் கூர்மையானது. இவர்களின் சிந்தனையும் மிகவும் நேர்மறையாக இருக்கும். அவர்கள் விரைவில் சோர்வடைய மாட்டார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு காட்ட வேண்டுமென்று நினைக்கும் திறன்களை மட்டுமே வெளிப்படுத்துவார்கள். உலகின் மீதான விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான பார்வை இவர்களுக்கு மற்றவர்களை சரியாக கணிக்க அனுமதிக்கிறது.

ரிஷபம்
இந்த ராசிக்காரர்கள் அமைதியான மற்றும் மென்மையான இயல்புடையவர்கள். இவர்களுக்கு யாருடைய மனதில் இருக்கும் எண்ணமும் இவர்களுக்கு உடனே தெரியும். எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் அவர்கள் எப்போதும் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் அறிவுக்கூர்மை வாய்ந்தவர்கள். எனவே இவர்களை எப்போதும் முட்டாளாக்க முயற்சிக்காதீர்கள்.