Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சனிபகவான் அருளால் 2023-ல் இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றிக்கான கதவு திறக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
2022 கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இந்த வருடம் சிலருக்கு நன்றாகவும் சிலருக்கு கெட்டதாகவும் அமைந்தது. இப்போது அனைவரின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் 2023 மீதுதான் உள்ளது.
2022 கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இந்த வருடம் சிலருக்கு நன்றாகவும் சிலருக்கு கெட்டதாகவும் அமைந்தது. இப்போது அனைவரின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் 2023 மீதுதான் உள்ளது. அனைவருமே 2023 ஆம் ஆண்டில் தங்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு வரப்போகிற ஆண்டு சாதகமானதாகவும், வெற்றிக்கான கதவுகள் திறப்பதாகவும் இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு பல நல்ல செய்திகளைக் கொண்டுவரும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் 2023-ல் வெற்றிக்கதவை திறக்கப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

தனுசு
இந்த ராசிக்காரர்கள் புத்தாண்டில் சனியின் ஏழரை ஆண்டுகளில் இருந்து விடுதலை பெறுவார்கள், அதேசமயம் சில அசுப காரியங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மரியாதை அதிகரிப்பதோடு, புதிய வருமான ஆதாரங்களுக்கான கதவுகள் திறக்கப்படும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனியின் தீய பார்வை விலகும். கும்ப ராசியில் சனி சஞ்சரிப்பதால் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிப்பதால் இல்லங்களில் மகிழ்ச்சி நிறைந்த சூழல் நிலவும். ஒன்றுக்கு மேற்பட்ட வருமானங்களால் உங்கள் காட்டில் இந்த ஆண்டு பணமலை பொழிய வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சனியின் ஏழரை வருடங்களில் இருந்து ஓரளவு நிவாரணம் பெறுவார்கள். நினைத்த காரியத்தை முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டம் கலவையான பலனைத் தரும். ஆனாலும் உங்களின் அனைத்து முயற்சிகளும் இந்த வருடம் வெற்றியில் முடிவடையும்.

மிதுனம்
சனிபகவானின் தீவிரமான தாக்கம் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு முடிவடையும். சனிபகவானின் அருளால் விரும்பிய பலன்கள் கிடைக்கும். பொருளாதாரரீதியாக வலுவாக இருப்பதால், நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

துலாம்
சனிபகவான் நேரடியாக வரும்போது, துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் தாக்கம் முடிவுக்கு வரும். சனிபகவானின் அருளால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நீங்கள் நிலம், கட்டிடம் மற்றும் பிற உடல் இன்பங்களைப் பெறுவீர்கள். பணப்புழக்கம் உங்கள் கையில் சீராக இருக்கும்.



Click it and Unblock the Notifications