இந்த 3 ராசி பெண்கள் 2022-ல் மிகவும் மோசமானவர்களாக மாறப்போகிறார்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க!

அனைவரின் மனதிலும் நல்ல மற்றும் தீய குணங்கள் இருக்கும். இதில் எது அதிகமாக இருக்கிறதோ அதைப்பொறுத்தே அவர்கள் நல்லவர்களா இல்லை தீயவர்களா என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கிறார்கள்.

அனைவரின் மனதிலும் நல்ல மற்றும் தீய குணங்கள் இருக்கும். இதில் எது அதிகமாக இருக்கிறதோ அதைப்பொறுத்தே அவர்கள் நல்லவர்களா இல்லை தீயவர்களா என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கிறார்கள். சில ராசிக்காரர்கள் தங்களுக்குள் இருக்கும் தீய குணங்களை மறைத்து நல்லவர்கள் போல காட்டிக்கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள்.

Worst Zodiac Signs of 2022 in Tamil

2022-ல் பலரின் முகமூடிகள் விழப்போகிறது, அவர்களின் உண்மையான முகத்தை அவர்கள் காட்டுவதற்கான சூழ்நிலைகள் உருவாகப்போகிறது. இத்தனை நாள் அவர்கள் காப்பாற்றி வந்த அவர்களின் பொறாமை, துரோகம், வஞ்சம் போன்ற அவர்களின் தீய குணங்களை அனைவரும் அறியப்போகிறார்கள். 2022-ல் மோசமான ராசிகளாக இருக்கப் போகிறவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷ ராசி பெண்கள்

மேஷ ராசி பெண்கள்

மேஷ ராசி பெண்கள் 2022-ல் மிகவும் பொறாமை கொண்டவர்களாக இருக்கப்போகிறார்கள். மேலும் தங்களை ஏமாற்றியவர்களை பழிவாங்க போகிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு அவர்களே தீர்ப்பளிப்பார்கள். அவர்களின் பிடிவாதத்தால் எந்த காரணத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மேலும் தங்களை பாதிக்கப்பட்டவர்களாக காட்டிக்கொள்வார்கள். தங்களின் தவறை ஒப்புக்கொள்ளமால் மற்றவர்கள் தங்கள் முன் அடிபணிய வேண்டுமென்று இவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

விருச்சிக ராசி பெண்கள்

விருச்சிக ராசி பெண்கள்

பழிவாங்கும் எண்ணம் அதிகம் கொண்ட இவர்கள் 2022-ல் ரகசியங்களில் கவனம் செலுத்தப் போகிறார்கள். இவர்களிடம் மன்னிப்பது, மறப்பது போன்ற நல்ல குணங்கள் துளியும் இருக்கப்போவதில்லை. இவர்களின் சந்தேக குணம் இந்த ஆண்டு மிகப்பெரிய வளர்ச்சி அடையப்போகிறது. மற்றவர்களை தங்களின் வார்த்தைகளால் காயப்படுத்தி தங்களின் ஈகோவை திருப்திபடுத்திக் கொள்வார்கள். இவர்களின் காயப்படுத்தும் விமர்சனங்கள் மற்றவர்களின் நம்பிக்கையை உடைப்பதாக இருக்கும்.

துலாம் ராசி பெண்கள்

துலாம் ராசி பெண்கள்

2022-ல் மிகவும் தந்திரக்காரர்களாகவும், கொடூரமானவர்களாகவும் இருக்கப்போகிறவர் இவர்கள்தான். இயற்கையாகவே தப்பிக்கும் குணம் கொண்ட இவர்கள் அனைத்து தவறுகளிலிருந்தும் எளிதில் தப்பித்து. விடுவார்கள். இந்த ஆண்டு தனிப்பட்ட வாழ்க்கையில் இவர்கள் மோசமாக நடந்து கொள்வார்கள். இந்த ஆண்டு இவர்களின் உண்மையான முகத்தை அனைவரும் அறிந்து கொள்வார்கள். பல உறவுகளை இந்த வருடம் இவர்கள் இழக்கப்போகிறார்கள்.

மிதுன ராசி ஆண்கள்

மிதுன ராசி ஆண்கள்

இந்த வருடத்தின் மிகவும் மோசமான நபராக இருக்கப்போகிறவர் இவர்தான். இவர்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் சுயநலம் நிறைந்திருக்கும். மற்றவர்களை எப்படி காயப்படுத்த வேண்டுமென்று ஒவ்வொரு அடியையும் முன்கூட்டியே கணக்கிட்டு திட்டமிடுவார்கள். பலவீனமானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தங்களுடன் வைத்துக்கொண்டு தங்களை பலமானவர்களாக காட்டிக்கொள்வார்கள். கடந்த கால காயங்களுக்கு பழிவாங்க இந்த ஆண்டு தொடங்குவார்கள்.

கடக ராசி ஆண்கள்

கடக ராசி ஆண்கள்

கடக ராசி ஆண்கள் இந்த ஆண்டு தங்கள் மூர்க்கத்தனமான முகத்தைக் காட்ட அதிக காலம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சிறிய ஏமாற்றத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத இவர்கள் அதனால் மற்றவர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துவார்கள். தங்களின் நன்மைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் முழுநேர வில்லனாக மாறுவார்கள். இவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று யாராலும் கணிக்க முடியாது.

கன்னி ராசி ஆண்கள்

கன்னி ராசி ஆண்கள்

இந்த ஆண்டு இவர்களுடன் இருப்பது மற்றவர்களுக்கு தண்டனை போல இருக்கும். மற்றவர்களை விட தான்தான் உயர்ந்தவர் என்ற எண்ணம் இவர்களுக்குள் எப்போதும் இருக்கும், இந்த ஆண்டு அதனை மற்றவர்களையும் ஒப்புக்கொள்ள வைக்க முயற்சிப்பார்கள். மற்றவர்களின் தவறை கண்டறிவதற்காகவே இவர்களிடம் ஸ்பெஷல் உள்ளுணர்வு இருக்கும். எதிலுமே திருப்தியடையாத இவர்கள் சுயநலத்தை முன்னிலையாகக் கொண்டு தங்களின் இந்த ஆண்டை வழிநடத்தப்போகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, December 31, 2021, 11:20 [IST]
Desktop Bottom Promotion