For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முத்தத்திலேயே மயக்கும் ராசிக்காரர்களின் பட்டியல்... உங்க ராசி எத்தனாவது இடத்தில் இருக்குனு பாருங்க...!

அன்பை வெளிப்படுத்த மிகச்சிறந்த வழி என்னவென்றால் அது முத்தம்தான். குறிப்பாக காதலில் முத்தம் மிகமுக்கியபங்கு வகிக்கிறது.

|

அன்பை வெளிப்படுத்த மிகச்சிறந்த வழி என்னவென்றால் அது முத்தம்தான். குறிப்பாக காதலில் முத்தம் மிகமுக்கியபங்கு வகிக்கிறது. வார்தைகளால் விவரிக்க முடியாத அன்பைக் கூட உங்களின் முத்தம் உங்களின் துணைக்கு புரிய வைக்கக்கூடும். ஒரு நல்ல முத்தம் எப்பொழுதும் காதலர்களின் மனதில் நீங்காத நினைவாக நிலைத்திருக்கும்.

Which Zodiac Sign Is The Best Kisser

ஒரு நல்ல முத்தம் கொடுக்க ஆழமான உணர்ச்சிகள் மட்டும் போதாது சில திறன்களும் தேவை. ஒருவரின் ஆளுமையை அவர்களின் பிறந்த ராசி நிர்ணயிக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ஆளுமையின் கட்டுமான தொகுதிகளாக இருக்கும் சில பண்புகளை கணிக்க முடியும். அதன்படி உங்களின் முத்த திறனை உங்களின் ராசியைக் கொண்டு தீர்மானிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மீனம்

மீனம்

அனைத்து ராசிகளிலும் மீனம் சிறந்த முத்தம் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். உணர்ச்சிமிகுந்த மற்றும் தீவிரமான மீன ராசிக்காரர்கள் முத்தம் கொடுக்கும்போது துணையை ஆச்சரியப்படுத்துவார்கள். இவர்கள் முத்தத்தை விரும்புகிறார்கள், உண்மையில் ஒவ்வொரு சிறிய முத்தத்திலும் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் வைக்கிறார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

இவர்கள் முத்த நிபுணர்களாக விளங்குகிறார்கள். இவர்கள் ஒரு முத்தத்தை மறக்கமுடியாத மற்றும் மேஜிக்காக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிவார். இவர்களின் தன்னிச்சையான தன்மை முத்தத்தில் உற்சாகத்தை சேர்க்கிறது. முத்தங்கள் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஒருபோதும் இவர்கள் வெட்கப்படுவதில்லை.

ரிஷபம்

ரிஷபம்

இவர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவராக இல்லாவிட்டாலும், ஒருவரை விரும்பும்போது அவர்களிடம் உணர்வுகளை வெளிப்படுத்த தயங்குவதில்லை. உணர்வுகளை வெளிப்படுத்த இவர்கள் கையிலெடுப்பது முத்தத்தைதான். இவர்களுடனான முத்தம் முடிவடையக் கூடாது என்று எண்ணுமளவிற்கு இவர்கள் முத்தம் கொடுப்பார்கள்.

MOST READ: காமசாஸ்திரத்தின் படி உடலுறவின் போது உச்சக்கட்ட இன்பத்திற்கு ஆண்கள் பெண்களை எங்கு தீண்டணும் தெரியுமா?

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் இயற்கையாகவே பாசக்காரர்கள் மற்றும் அவர்களின் முத்த நுட்பம் வேறுபட்டதல்ல. நம்பிக்கையுடன் முத்தம் கொடுப்பதோடு தன்மீது நம்பிக்கை வரும்படியும் முத்தம் கொடுப்பதில் இவர்கள் வல்லவர்கள். இவர்கள் முத்தத்தின் சிறப்பு என்னவென்றால், அவர்களின் கைகளைப் பயன்படுத்துவதும், சில சிற்றின்ப செயல்களில் ஈடுபடுவதுமாகும்.

மேஷம்

மேஷம்

இவர்கள் சுவாரஸ்யமான முத்த நிபுணர்கள். அவர்களின் ராசியின் ஆளுமைக்கு ஏற்றாற்போல், மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலுடன் சாகசமாகவும் தைரியமாகவும் இருக்கிறார்கள். இவர்கள் யாரையாவது விரும்பினால் அவர்கள் ஒரு மந்திர மற்றும் மறக்கமுடியாத முத்தத்திற்குச் செல்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவர்களிடம் இருந்து கிடைக்கும் முத்தம் சாகசமானதாக இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் உங்களை முத்தமிடும்போது விஷயங்கள் 0 முதல் 100 வரை விரைவாகச் சென்று வெப்பநிலை கொதிநிலைக்கு உயரும். இவர்களின் முத்தம் உங்களின் காம உணர்வுகளை தூண்டுவதாக இருக்கும். இவர்களைப் பொறுத்தவரை, முத்தம் என்பது ஒருவருடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்களின் உணர்வுகளைத் தெரியப்படுத்துவதாகும்.

கன்னி

கன்னி

இவர்கள் நல்ல முத்தமிடுபவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் பெரும்பாலும் கவர்ச்சியான மற்றும் சிற்றின்ப சூழ்நிலைகளை மோசமானவர்களாக மாற்றக்கூடிய விஷயங்களை மறுபரிசீலனை செய்ய முனைகிறார்கள். இவர்கள் அனைத்தையும் பகுப்பாய் செய்து பார்ப்பவர்கள் மற்றும் அந்த கணத்தில் வாழ்வதற்கும் விஷயங்களை அனுபவிப்பதற்கும் இவர்கள் யோசிப்பார்கள். ஒரு மறக்கமுடியாத முத்த அனுபவத்திற்கு இவர்கள் நிதானமாக விஷயங்களை இயற்கையாக நடக்க அனுமதிக்க வேண்டும்.

MOST READ: இந்த பழக்கம் கொண்டவர்களின் எலும்புகள் சீக்கிரம் பலவீனமாகிருமாம்... இனிமேலும் இத பண்ணாதீங்க...!

துலாம்

துலாம்

இவர்கள் மிகவும் சோம்பேறித்தனமான முத்த நிபுணர்கள். மயக்கும் கலை என்று வரும்போது இவர்கள் அதில் மாஸ்டராக இருப்பார்கள், ஒருவரை எப்படி தங்கள் வலையில் வீழ்த்துவது என்று இவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்கள் சோம்பேறித்தனமான செயல்படுவார்கள், உட்கார்ந்து வேலை வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் முத்த நுட்பத்தில் கனிவான மற்றும் அக்கறையுள்ளவர் என்ற நற்பெயரைக் கொண்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் தங்கள் தடைகளை விட்டுவிட்டு, தங்கள் மேக் அவுட் அமர்வுகளை அனுபவிப்பதில் சிக்கல்களை சந்திக்கின்றனர் . தங்களின் தடைகளைக் கீழே இறக்கி, வசதியாக உணரத் தொடங்கும் போது அவர்கள் முத்த வல்லுநர்களாக மாறுகிறார்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் விஷயங்களை விளையாட்டுத்தனமாகவும் வேடிக்கையாகவும் வைத்திருக்க விரும்புகிறார்கள், அதனால்தான் அவர்கள் இதயங்களையும் ஆன்மாவையும் தங்கள் முத்தங்களில் கலப்பதைத் தடுக்கிறார்கள். இவர்களின் முத்தங்களில் தீவிரம் மற்றும் உணர்ச்சிகள் இல்லாவிட்டாலும், நல்ல முத்தத்தை எப்படிக் கொடுப்பது என்பது இவர்களுக்கு நன்கு தெரியும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் மிகவும் நேசமானவர்கள் மற்றும் சிறந்த தொடர்பாளர்கள் முத்தமிடுவதும் அவர்களின் உணர்வுகளைப் பற்றி பேசுவதும் உண்மையில் அவர்களுக்கான விஷயமல்ல. இவர்கள் ஒரு நல்ல நேரத்தை விரும்புகிறார்கள், உறவுகள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும்போது கொஞ்சம் கவலைப்படலாம், அதனால்தான் அவர்களின் முத்தங்கள் சில நேரங்களில் தைரியம் இல்லாமல் இருக்கும்.

மகரம்

மகரம்

மகர மக்கள் மிகவும் எதார்த்தமானவர்கள், எனவே எதையும் அவர்களால் உடனுக்குடன் செய்ய முடியாது. அவர்களின் முத்தம் மோசமானது என்று கூற இயலாவிட்டாலும், அவ்வளவு சுவாரஸ்யமானதாக இருக்காது. தங்களின் முத்தத்தை மறக்க முடியாததாக மாற்றுவதற்கு அவர்களுக்கு மேலும் பயிற்சி தேவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Which Zodiac Sign Is The Best Kisser

Read to know which zodiac sign is the best kisser.
Story first published: Saturday, July 24, 2021, 14:28 [IST]
Desktop Bottom Promotion