Virgo Horoscope 2023: கன்னி ராசிக்காரங்களுக்கு 2023 எப்படி இருக்கப் போகுது? எதுல கவனமா இருக்கணும் தெரியுமா?

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சொத்துக் கண்ணோட்டத்தில் நன்றாக இருக்கும். அதனால், ஜனவரி முதல் ஏப்ரல் வரை நீங்கள் பெரிய சொத்துக்களை வாங்கலாம். இந்த ஆண்டில் நீங்கள் உங்கள் சொந்த வீட்டையும் கட்டலாம்,

புத்தாண்டு தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ளன. மக்கள் அனைவரும் வரும் 2023ஆம் ஆண்டு தங்களுக்கு எப்படி இருக்க போகிறது? என்ற ஆர்வத்தில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு உங்களுக்கு ஜோதிடம் உதவும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் அவர்களின் ஜாதகப்படி, வரும் புத்தாண்டு எவ்வாறு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு வரும் ஆண்டு எப்படி இருக்க போகிறது என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம். 2023 ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகப் பெயர்ச்சிகளை மனதில் வைத்து கன்னி ராசி 2023 தயாரிக்கப்பட்டுள்ளது.

 Virgo Horoscope 2023 kanni Rasi Palan, kanni Yearly Horoscope Predictions In Tamil

இந்த 2023 ஆண்டு உங்களை எவ்வாறு பாதிக்கும்? உங்களுக்கு ஏதாவது நல்ல செய்தி வருமா அல்லது ஏதேனும் பெரிய பிரச்சனை வருமா? உங்க உடல் நலம் எவ்வாறு இருக்கும்? நிதி வருவாய் இருக்குமா? தொழிலில் முன்னேற்றம் இருக்குமா? என உங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு கிரகங்களின் தாக்கம் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள இக்கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2023-இல் காதல் வாழ்க்கை

2023-இல் காதல் வாழ்க்கை

2023 ஆம் ஆண்டில் கன்னி ராசிக்காரர்கள் காதல் உறவுகளில் சோதனைகளை சந்திக்கலாம். உங்கள் அன்புக்குரியவர்கள் சில காரணங்களால் சில காலம் உங்களைவிட்டு விலகிச் செல்லலாம். ஆனால் உங்கள் உறவைப் பாதுகாக்க விரும்பினால், சில மாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டும். இந்த ஆண்டு குறிப்பாக ஜனவரி, ஏப்ரல் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மற்றும் டிசம்பர் வரை உங்கள் காதல் அதிகரிக்கும். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவருக்கும் உள்ள உறவில் ஒருவரையொருவர் நெருங்கி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்திற்குள் நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், உங்கள் திருமணம் நடக்க வாய்ப்புகள் உள்ளன.

2023-இல் தொழில் ஜாதகம்

2023-இல் தொழில் ஜாதகம்

கன்னி ராசிக்காரர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் தொழில் குறித்து சரியான முடிவை எடுக்க வேண்டும். ஜனவரி மாதத்தில் உங்கள் தொழிலில் இடமாற்றம் கிடைக்கலாம். இந்த ஆண்டு தொழிலில் முன்னேற நிறைய வாய்ப்புகளை உங்களுக்குத் தரும். உங்கள் பணித் துறையில் திடீர் மாற்றம் ஏற்படலாம் அல்லது நீங்கள் வியாபாரம் செய்தால் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வியாபாரத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகளும் இருக்கும். குறிப்பாக மே மாதத்தில் இதுபோன்ற யோகங்கள் உருவாகும். இருப்பினும், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை நிலைமைகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

2023-இல் கல்வி

2023-இல் கல்வி

இந்த ஆண்டு கன்னி ராசி மாணவர்கள் தங்கள் நல்ல நேரத்தை உணருவார்கள். நீங்கள் செய்த கடின உழைப்பு வீண் போகாது, அதன் பலன் நிச்சயம் கிடைக்கும். வருடத்தின் ஆரம்பம் சற்று கடினமாக இருக்கும் மற்றும் படிப்பில் கவனம் குறைவாக இருக்கும். இதன் காரணமாக, நீங்கள் ஏதேனும் போட்டித் தேர்வுக்கு தயாரானால், அதில் வெற்றி பெற மாட்டீர்கள். எனவே கடின உழைப்பைத் தொடர்ந்து செய்து, வெற்றியைப் பெறக்கூடிய சரியான பாதையில் முன்னேறுங்கள். உயர்கல்விக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஏற்ற தாழ்வுகள் நிறைந்திருக்கும். அக்டோபர்-நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நீங்கள் வெற்றியைப் பெறலாம் மற்றும் படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

2023-இல் நிதி

2023-இல் நிதி

கன்னி ராசிக்காரர்கள் இந்த ஆண்டு நிதி விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கிரகங்களின் சேர்க்கை ஆண்டின் முதல் பாதி சாதகமாக இருக்கும். குறிப்பாக ஜனவரி முதல் ஏப்ரல் இறுதி வரை நிலைமைகள் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் நிதி விஷயங்களில் நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்களைச் செய்யலாம். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்ய விரும்பினால், இந்த நேரம் சரியாக இருக்கும். இருப்பினும் நிதி விஷயங்களில் சில சிக்கலைச் சந்திப்பீர்கள். நீங்கள் பங்குச்சந்தை, சூதாட்டம், லாட்டரி போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால், இந்த முறை நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். இதனால், நீங்கள் பொருளாதார ரீதியாக பலவீனமாக உணரலாம். ஆனால் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நல்ல நிதி வருவாயை பெறுவீர்கள்.

2023-இல் குடும்ப வாழ்க்கை

2023-இல் குடும்ப வாழ்க்கை

கன்னி ராசிக்காரர்கள் இந்த ஆண்டு குடும்ப வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்வார்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் மற்றும் இந்த நேரத்தில் குடும்பத்தின் வயதான உறுப்பினருக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ராகுவின் பார்வையால் குடும்ப வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கும். அந்த நேரம் உங்கள் உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படும். ஆனால் சவால்களை எதிர்கொண்டு உங்கள் குடும்பத்தை ஒற்றுமையாக வைத்திருக்கும் திறனை கடவுள் உங்களுக்கு வழங்கியுள்ளார். பின்னர், படிப்படியாக குடும்ப வாழ்க்கை சிறப்பாக தொடங்கும். மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.

2023-இல் குழந்தைகளின் வாழ்க்கை

2023-இல் குழந்தைகளின் வாழ்க்கை

உங்கள் குழந்தைகளுக்கு இந்த வருடம் சிறப்பாக இருக்கும். உங்கள் குழந்தைகள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் படித்தாலும் வேலை செய்தாலும் இரண்டிலும் வெற்றி பெறுவார்கள். இந்த ஆண்டு உங்கள் குழந்தையின் வாழ்க்கை வெற்றிகரமானதாக இருக்கும். அதேநேரம், குழந்தைகளைப் பற்றி சில கவலைகள் இருக்கலாம். ஆனால் அதன் பிறகு நல்ல நேரம் இருக்கும். உங்கள் பிள்ளைகளின் கடின உழைப்பால் அவர்களுக்கென ஒரு இடத்தை உருவாக்குவார்கள். அவர்களின் வெற்றியைப் பற்றி நீங்கள் பெருமைப்படுவீர்கள்.

2023-திருமண வாழ்க்கை

2023-திருமண வாழ்க்கை

புதிய ஆண்டில் கன்னி ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையைப் பற்றி கொஞ்சம் கவலைப்பட வேண்டும். திருமணத்திற்கு நீங்கள் தயாராக இருந்தால், ஜனவரி முதல் ஏப்ரல் இறுதி வரையிலான காலகட்டத்தில் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். நீங்கள் யாரையாவது காதலித்தால், இந்த நேரத்தில் உங்கள் காதல் திருமணத்திற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், இந்த நேரம் திருமண வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாக செய்யலாம். இது உங்கள் திருமண வாழ்க்கையை அழகாக வழிநடத்தும்.

2023-இல் வியாபாரம்

2023-இல் வியாபாரம்

கன்னி ராசியின் படி இந்த ஆண்டு வியாபாரம் செய்பவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவதன் மூலம் பயனுள்ளதாக மாற்றலாம். ஏனெனில் ஆண்டின் தொடக்கத்தில் வியாபாரம் நல்ல பலனைப் பெறும், ஆனால் ஆண்டின் பிற்பகுதியில் பலவீனமாக இருக்கும். குறிப்பாக மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடலாம். ஆனால் ஆண்டின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய முன்னேற்றம் காண்பீர்கள். சில புதிய தொடர்புகளின் அனுகூலத்தைப் பெறுவீர்கள், வியாபார வளர்ச்சியும் இருக்கும். மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், நீங்கள் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவதையோ அல்லது புதிய வேலையை கையில் எடுப்பதையோ தவிர்க்க வேண்டும். ஆனால் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு வியாபாரம் உயரும் வாய்ப்புகள் உண்டு. இதனால், ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் மற்றும் கடைசி இரண்டு மாதங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த மாதங்களின் இடைப்பட்ட காலத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

2023-இல் சொத்து மற்றும் வாகனம்

2023-இல் சொத்து மற்றும் வாகனம்

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சொத்துக் கண்ணோட்டத்தில் நன்றாக இருக்கும். அதனால், ஜனவரி முதல் ஏப்ரல் வரை நீங்கள் பெரிய சொத்துக்களை வாங்கலாம். இந்த ஆண்டில் நீங்கள் உங்கள் சொந்த வீட்டையும் கட்டலாம், ஆனால் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் நீங்கள் எந்த சொத்தும் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நீங்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சொத்து வாங்குவது உங்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் இந்த நேரத்தில் சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கும். நீங்கள் ஒரு வாகனம் வாங்க விரும்பினால், அதற்கு சிறந்த நேரம் பிப்ரவரி முதல் மார்ச் வரை இருக்கும். இக்காலத்தில் நல்ல வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

2023-இல் ஆரோக்கியம்

2023-இல் ஆரோக்கியம்

இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். கன்னி ராசிக்காரர்களுக்கு ஆண்டின் ஆரம்பம் நன்றாக இருக்கும். ஆனால், ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்தில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ளாவிட்டால், நீங்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மே மாதத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும். அப்போதுதான் இந்த ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இல்லையெனில் இந்த ஆண்டு, நீங்கள் ஆரோக்கியத்தின் பார்வையில் பலவீனமாக இருப்பீர்கள்.

2023-இல் அதிர்ஷ்ட எண்

2023-இல் அதிர்ஷ்ட எண்

கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட எண் 5 மற்றும் 6 ஆக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி 2023 ஆம் ஆண்டு மொத்த யோகங்களின் எண்ணிக்கை 7 ஆக இருக்கும் என்று கூறுகிறது. ஆதலால், இந்த ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிதமான ஆண்டாக இருக்கும் மற்றும் சில சவால்களை சந்திக்க நேரிடலாம், ஆனால் அதிலிருந்து அதிக பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். இந்த ஆண்டு உங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். இது தவிர, நிதி திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன், நீங்கள் மிகவும் கவனமாக தொடர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion