Latest Updates
-
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க..
காதலில் இருப்பவர்களுக்கு அவங்க ராசிப்படி இந்த காதலர் தினத்தில் என்ன நடக்கப்போகுது தெரியுமா?
காதல் நிரம்பி வழியும் மாதமாக பிப்ரவரி மாதம் இருக்க காரணம் உலக காதலர்களின் தினமான காதலர் தினம் இந்த மாதத்தில் வருவதுதான்.
காதல் நிரம்பி வழியும் மாதமாக பிப்ரவரி மாதம் இருக்க காரணம் உலக காதலர்களின் தினமான காதலர் தினம் இந்த மாதத்தில் வருவதுதான். காதலின் மாதமான பிப்ரவரி மாதத்தில் 14 ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த காதல் நாள் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளால் அவர்களின் நேர்த்தியான நம்பிக்கைகள் மற்றும் அழகான பழக்கவழக்கங்களின்படி அனுசரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் பொதுவாக ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

ஜோதிடம் மனித வாழ்வில் ஒரு சிறப்பு மற்றும் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கிறது. ஜோதிடக் கணிப்புகளின் படி, இந்த மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும், ஏனெனில் பலர் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தங்கள் காதல் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இந்த ஆண்டு காதலர் தினத்தில் சில ராசிக்காரர்கள் தங்கள் ஆத்ம துணைகளைக் கண்டறிவார்கள் மற்றும் ஏற்கனவே காதலில் இருப்பவர்கள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரலாம்.

மேஷம்
என்ர்ஜி மற்றும் நெருக்கமான ஆற்றலின் ஒரு கிரகமான செவ்வாய், ரிஷப ராசியில் உள்ளது, இது காதல் மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படுகிறது. உங்கள் துணையுடன் தரமான நேரத்தைச் செலவழிப்பதன் மூலம் உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முக்கிய நினைவுகளை உருவாக்கவும், ஆழமான உரையாடல்களை மேற்கொள்ளவும், முன் எப்போதும் இல்லாத வகையில் பாலியல் நெருக்கத்தை அனுபவிக்கவும் இந்த காதலர் தினம் உங்களுக்கு வாய்ப்பை அளிக்கும்.

ரிஷபம்
நீண்ட நாட்களாக உங்கள் காதலை அதிகாரபூர்வமாக அறிவிக்க சரியான தருணத்திற்காக காத்திருக்கிறீர்களா? ஆம் எனில், இந்த மாதம் நட்சத்திரங்களின் சீரமைப்பு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த காதலர் தினத்தில் நீங்கள் அதனை செய்யலாம். இந்த காதல் மாதத்தில், உங்கள் உறவு அரவணைப்பு மற்றும் ஆறுதல் நிறைந்ததாக இருக்கும்.

மிதுனம்
பிப்ரவரி மாதத்தில் சின்ன சின்ன ஆச்சரியங்கள், மகிழ்ச்சியான டேட்டிங் மற்றும் அர்த்தமுள்ள முயற்சிகள் போன்றவை உங்கள் வாழ்க்கையில் நிறைந்திருக்கும். காதலில் இருப்பவர்கள் உங்கள் துணைக்கு ஏதாவது விசேஷமாகச் செய்வது,சலிப்பாக இருக்கும் உங்கள் உறவில் ஆர்வத்தையும், புத்துணர்ச்சியையும் தூண்டும்.

கடகம்
இந்த மாதம் உங்கள் காதலர் தினத்திற்கான பெரிய திட்டங்களை உருவாக்குவதில் நீங்கள் மும்முரமாக இருக்கும்போது, உங்கள் துணையின் நோக்கங்களையும் கவனிக்க வேண்டியது அவசியம். நீங்கள் அவர்கள் மீது பொழியும் அன்பை அவர்கள் திருப்பிச் செலுத்துகிறார்களா என்பதை கவனியுங்கள்.

சிம்மம்
இந்த காதல் மாதத்தில், உங்கள் துணையிடம் நீங்கள் அதிகம் ஈர்க்கப்படுவீர்கள். உங்கள் ஆழ்ந்த இரகசியங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன், உங்களின் ரகசியங்களை அவர்கள் தாங்கிக் கொள்வார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அதுவே உங்களின் பிரிவு உங்களுக்கு காரணமாக இருக்கலாம்.

கன்னி
காதல் காற்று நிறைந்த இந்த மாதத்தில், காதலில் இருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு உங்கள் துணையுடனான உங்கள் தொடர்பு வலுவடைந்து, வாழ்க்கையில் ஒரு புதிய மறுதொடக்கத்தைக் காண்பீர்கள். உங்களின் காதல் வாழ்க்கை இந்த காதலர் தினத்தில் சிறப்பாக முன்னேறும்.

துலாம்
காதலில் இருக்கும் துலாம் ராசிக்காரர்கள் தங்கள் சமநிலைப்படுத்தும் ஆற்றலை வெளிப்படுத்துவார்கள். ஒரு அற்புதமான காதல் வாழ்க்கையைப் பராமரிக்கும் அதே வேளையில்,உங்கள் துணையுடன் நெருக்கமான மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை பெறப்போகிறார்கள்.

விருச்சிகம்
ஆழமான உரையாடல்கள், காதல் நிறைந்த தருணங்கள் மற்றும் மனதைக் கவரும் உடலுறவுக்கானத் தருணங்களை கிரக நிலைகளை உங்களுக்கு அமைத்துக் கொடுத்துள்ளன. காதலில் இருக்கும் இருவரில் ஒருவர் எடுக்கப்போகும் முயற்சியால், இந்த காதலர் தினம் உங்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

தனுசு
காதலில் இருக்கும் தனுசு ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் உறவில் அடுத்த மைல்கல்லை எட்ட திட்டமிடுவார்கள். அவர்களது உறவை அதிகாரப்பூர்வமாக்குவது, தங்கள் அன்புக்குரியவரிடம் காதலை முன்மொழிவது, திருமணம் அல்லது கருத்தரிப்பது போன்ற திட்டங்கள் அவர்களின் தரவரிசையில் முதலிடம் வகிக்கும்.

மகரம்
உணர்ச்சி மற்றும் பாலியல் நெருக்கத்தின் ஆற்றல்களுடன் செழித்து, பிப்ரவரி மாதம் அநேகமாக காதலில் உள்ள மகர ராசிக்காரர்களுக்கு ஒரு சிறப்பான மாதமாக இருக்கும். மேலும் சிறந்த அம்சம் என்னவென்றால், உங்கள் துணை உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் பங்களிப்பார்கள்.

கும்பம்
இந்த மாதம் கும்ப ராசிக்காரர்கள் அளவிற்கு அதிகமாக செலவு செய்ய தயாராக இருப்பார்கள். காதலர் தினம் நெருங்கி வருவதால், உங்கள் துணையை இந்த மாதத்தில் சிறப்பாக உணர வைக்க ஆடம்பர செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களைப் பொறுத்தவரை முன் எப்போதும் இல்லாத வகையில் உங்கள் துணை உங்கள் மீது அன்பைப் பொழிவார்கள். உங்களுக்கு கிடைக்கும் அதீத கவனத்தை அனுபவியுங்கள் முடிந்தால், அதேயளவு கவனத்தை உங்கள் துணைக்கும் கொடுங்கள். அதிக நேரம் காத்திருக்காமல் சரியான நபரிடம் அன்பு செலுத்துவது உங்களுக்கு நல்ல மாற்றத்தைத் தரும்.



Click it and Unblock the Notifications











