Latest Updates
-
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம்
வாஸ்துப்படி காதலர் தினத்தன்று இந்த பொருட்களை பரிசா கொடுங்க.. காதல் இன்னும் வலுவாகும்..
இந்த ஆண்டு என்ன பரிசளிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த ஆண்டு வாஸ்துப்படி உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பரிசுகளை வாங்கி கொடுங்கள்.
Valentine's Day Gift Ideas: காதலர் தினம் வர இன்னும் சில நாட்களே உள்ளன. உலகம் முழுவதும் காதலர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் தங்கள் காதலன்/காதலிக்கு தங்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில், அன்பு பரிசுகளை வாங்கிக் கொடுத்து ஆச்சரியமளிப்பார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கை துணைக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசுகளை வாங்கிக் கொடுப்பீர்களா? இந்த ஆண்டு என்ன பரிசளிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?

அப்படியானால் இந்த ஆண்டு வாஸ்துப்படி உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பரிசுகளை வாங்கி கொடுங்கள். இதனால் உங்கள் உறவில் இனிமை அதிகரிப்பதோடு, உங்கள் இருவருக்கும் இடையேயான பிணைப்பு இன்னும் அதிகரித்து, உங்கள் உறவு இன்னும் வலுவாகும். இப்போது வாஸ்துப்படி, எந்த பொருட்களை காதலர் தின பரிசாக வழங்கலாம் என்பதைக் காண்போம்.

மூங்கில் செடி
வாஸ்து சாஸ்திரத்தில் மூங்கில் செடி மிகவும் மங்களகரமான செடியாக கருதப்படுகிறது. உங்கள் வாழ்க்கைத் துணைக்கு செடிகள் ரொம்ப பிடிக்குமானால், இந்த காதலர் தினத்தன்று மூங்கில் செடியை வாங்கி பரிசாக கொடுங்கள். இதனால் உங்கள் உறவில் அன்பும், அமைதியும் நீடித்திருக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணையும் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

சிரிக்கும் புத்தர் சிலை
வாஸ்து சாஸ்திரத்தில் சிரிக்கும் புத்தர் சிலை மங்களகரமானதாக கருதப்படுகிறது. காதலர் தினத்தன்று உங்கள் காதலன்/காதலிக்கு சிரிக்கும் புத்தர் சிலையை பரிசாக வழங்கலாம். இந்த சிலையை பரிசாக வழங்கும் போது, அது உங்கள் துணையின் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அவர்களைச் சுற்றி நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும்.

சிவப்பு நிற பூக்கள்
சிவப்பு நிற ரோஜாப் பூக்கள் காதலின் சின்னமாகும். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த சிவப்பு நிற ரோஜாப் பூக்கள் மிகவும் மங்களகரமானதாகும். இந்த பூக்களை அளிக்கும் போது, அது இருவருக்கும் இடையேயான காதலை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

பூக்களை கொடுக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்
காதலர் தினத்தன்று பெரும்பாலானோர் காதலை வெளிப்படுத்த சிவப்பு நிற ரோஜா பூக்களை வழங்குவார்கள். ஆனால் அப்படி ரோஜாப் பூக்களை வழங்கும் போது, அந்த பூவில் முட்கள் இருக்கக்கூடாது. முட்களுடன் பூக்களைக் கொடுத்தால், அது காதலை அதிகரிப்பதற்கு பதிலாக, உறவில் பிரச்சனையையும், விரிசலையும் அதிகரிக்கும்.

கிப்ட் பேப்பர் நிறமும் முக்கியம்
பொதுவாக பரிசுகளை வழங்கும் போது அந்த பரிசுகளை கிப்ட் பேப்பர் கொண்டு சுற்றி கொடுப்போம். வாஸ்து சாஸ்திரத்தில், ஒருவருக்கு பரிசை கொடுக்கும் போது கிப்ட் பேப்பரின் நிறமும் உறவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் இந்த காதலர் தினத்தன்று உங்கள் துணைக்கு பரிசுகளை வழங்கும் போது நீலம், கருப்பு அல்லது வெள்ளை நிற பேப்பரைப் பயன்படுத்த வேண்டாம். வேண்டுமானால் கோல்டன் நிறம், சிவப்பு, பிங்க், மஞ்சள் நிற பேப்பரைப் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications