Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
Valentine's Day Horoscope 2022:உங்க ராசிப்படி இந்த காதலர் தினம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா?
ஜோதிடக் கணிப்புகளின் படி சில ராசிக்காரர்களுக்கு இந்த காதலர் தினம் வெற்றிகரமானதாக இருக்கப்போவதில்லை. உங்கள் ராசிக்கு இந்த காதலர் தினம் எப்படி இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகக் காதலர்கள் காதலைக் கொண்டாட காத்திருந்த காதலர் தினம் நெருங்கி விட்டது. பல காதலர்கள் தங்கள் காதலை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி செல்லவும், ஒருதலைக் காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தவும், சிலர் காதலை ஏற்றுக்கொள்ளவும் காத்திருப்பார்கள். ஏதோவொரு வகையில் இந்த காதலர் தினம் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

காதலர் தினத்திற்காக அனைவரும் காத்திருந்தாலும் அனைவருக்கும் காதலர் தினம் மகிழ்ச்சியானதாக இருக்கப்போவதில்லை. ஜோதிடக் கணிப்புகளின் படி சில ராசிக்காரர்களுக்கு இந்த காதலர் தினம் வெற்றிகரமானதாக இருக்கப்போவதில்லை. உங்கள் ராசிக்கு இந்த காதலர் தினம் எப்படி இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
சிங்கிளாக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் ஒருவரின் மீது காதலில் விழக்கூடும் அல்லது அவர்கள் ஒரு நபருக்கு உணர்வுகளை வளர்க்கலாம். திருமணமானவர்களுக்கு, உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே உள்ள அன்பான பந்தம் வலுவடையும். காதலில் இருப்பவர்களுக்கு பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது.

ரிஷபம்
காதலில் இருக்கும் ரிஷப ராசிக்காரர்கள் இந்த ஆண்டு பல தடைகளை சந்திக்க நேரிடும், புதிதாக காதலிக்க விரும்புபவவர்களும் பல தடங்கல்களை சந்திப்பார்கள். ஒருவித உணர்ச்சிக் குழப்பம் அல்லது உணர்ச்சிப் பின்னடைவு இருக்கும்

மிதுனம்
சிங்கிளாக இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காதலர் தினத்தில் எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை. திருமணமானவர்கள் தங்கள் துணையிடமிருந்து சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடலாம் மற்றும் காதலில் இருப்பவர்கள் காதலை முறித்துக் கொள்ள முடிவு செய்யலாம்.

கடகம்
இந்த மாதம் திருமணமான கடக ராசிக்காரர்கள் உங்கள் குடும்பத்தாரின் குறுக்கீடுகள் அதிகம் என்பதால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதலில் இருப்பவர்கள் வருத்தத்துடன் வாழலாம் மற்றும் தங்கள் கூட்டாளரிடமிருந்து தங்களைத் தூரத்தில் வைத்துக் கொள்ள விரும்பலாம்.

சிம்மம்
திருமணமானவர்கள் இந்த காதலர் தினத்தில் விவாகரத்து அல்லது பிரிவினைக்கு திட்டமிடலாம். சிங்கிளாக இருப்பவர்கள் காதலில் ஈடுபடலாம். ஏற்கனவே காதலில் இருப்பவர்கள் வாழ்க்கையை அதன் போக்கிலேயே தொடர்வார்கள்.

கன்னி
நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் துணை இந்த மாதம் உங்கள் முயற்சிகளை அதிகம் கருத்தில் கொள்ள மாட்டார். ஆனால் காதலில் இருப்பவர்கள் தங்கள் உறவின் திடீர் முடிவைக் காணலாம். சிங்கிளாக இருப்பவர்கள் சிங்கிளாக இருக்கவே முடிவு செய்வார்கள்.

துலாம்
திருமணமானவர்கள் தங்கள் துணைக்கு இடையே இருந்த கடந்தகால பிரச்சனைகள் அனைத்தையும் மறந்துவிட்டு புதிதாக தொடங்குவார்கள். சிங்கிளாக இருப்பவர்கள் இந்த மாதம் அவர்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அவர்கள் ஒரு உறவில் ஈடுபட முடிவு செய்தால் அது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது. காதலில் இருப்பவர்கள் தங்கள் உறவை முன்னெடுத்துச் செல்ல திட்டமிடுவார்கள்.

விருச்சிகம்
திருமணமான விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களுக்கும் அவர்களின் துணைக்கும் இடையே உள்ள தொடர்பு இடைவெளியை நீங்கும். காதலில்இருப்பவர்கள் சில மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிங்கிளாக இருபவர்களுக்கு இந்த காதலர் தினத்தில் காதலர் கிடைக்க வாய்ப்புள்ளது.

தனுசு
இந்த மாதம் திருமணமானவர்கள் அல்லது உறவில் இருப்பவர்கள் தங்கள் துணைக்கு சிறிது இடம் கொடுப்பார்கள். அவர்கள் உறவை ரகசியமாக வைத்திருக்கலாம் அல்லது வெளியாட்கள் தலையிட அனுமதிக்க மாட்டார்கள். புதிய நபருக்காக கடினமாக உழைக்கத் தயாராக இல்லாததால், சிங்கிளாக இருப்பவர்கள் சிங்கிளாகவே இருக்க முடிவெடுப்பார்கள்.

மகரம்
சிங்கிளாக இருப்பவர்கள் இந்த வருடமும் சிங்கிளாக இருக்கவே முடிவெடுப்பார்கள். அதேசமயம் காதலில் இருப்பவர்கள் தங்கள் துணையுடன் இந்த காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அவர்கள் தங்கள் துணையுடன் ஒற்றுமையாக இருப்பதை அதிகம் விரும்புவார்கள்.

கும்பம்
இந்த மாதம் சிங்கிளாக இருப்பவர்கள் உறவில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது. திருமணம் முடிவடையவில்லை அல்லது காதலில் இருப்பவர்களுக்கு அவர்களின் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிடுவார்கள்.

மீனம்
சிங்கிளாக இருப்பவர்களுக்கு காதல் செட்டாக வாய்ப்புள்ளது. அதேசமயம், திருமணம் ஆனவர்களுக்கு இந்த மாதம் கடினமான காலமாக இருக்கும். காதலில் இருப்பவர்கள் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டு திருமணம் செய்ய முடிவு செய்யலாம்.



Click it and Unblock the Notifications











