Latest Updates
-
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம்
இந்த 5 ராசிக்காரங்களுக்கு மார்ச் மாசம் ஆபத்தான மாசமா இருக்குமாம்...கவனமா இருங்க...இல்லனா அவ்வளவுதான்!
சில மாதங்கள் நமக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும், சில மாதங்களோ நமது விருப்பங்களுக்கு முற்றிலும் எதிற்மறையானதாக இருக்கும்.
ஒவ்வொரு மாதமும் கிரக நிலைகள் மாறுவதால் அனைத்து மாதங்களும் ஒரே மாதிரியானதாக இருக்காது. சில மாதங்கள் நமக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும், சில மாதங்களோ நமது விருப்பங்களுக்கு முற்றிலும் எதிற்மறையானதாக இருக்கும். அதற்கு காரணம் உங்கள் ராசியின் கிரகங்களின் சாதகமற்ற நிலைகள்தான்.

இந்த மார்ச் மார்ச் மாதம் கிரக நிலைகளைப் பொறுத்து சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதமாகவும், சில ராசிக்காரர்களுக்கு ஆபத்தான மாதமாகவும் இருக்கப்போகிறது. அதன்படி இந்த மாதம் எந்தெந்த ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
இந்த மாதம் நீங்கள் பணியிடத்தில் அதிக விடுமுறைகளை எடுக்க நேரிடலாம். இதனால் பணியிடத்தில் சில சாதகமற்ற விளைவுகள் ஏற்படலாம். சிலருக்கு விரும்பத்தகாத இடங்களுக்கு வேலைக்கு செல்ல கட்டளை வரலாம். உங்கள் காதல் வாழ்க்கை மிதமானதாக இருக்கும் மற்றும் உங்கள் காதலியுடனான உறவுகளில் சில சிரமங்களை சந்திப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை கவலையை ஏற்படுத்தலாம்.

கடகம்
இந்த மாதம் பணியிடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் பயனற்ற உரையாடல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் புதியா தொழில் தொடங்குவதை தவிர்க்கவும். மற்றவர்கள் மீது கருத்துக்களைத் திணிக்காதீர்கள், அது உங்கள் சக ஊழியர்களாக இருந்தாலும் சரி அல்லது அன்பானவர்களிடத்திலும் வெறுப்பை ஏற்படுத்தும். காதலில் இருப்பவர்கள் வெளிப்புறத் தூண்டுதல்களால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். வயிற்றில் ஏற்படும் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.

துலாம்
ஒரு பிஸியான மாதம் உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் கூடுதல் பணிச்சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும், இது உங்களின் அனைத்து திட்டங்களையும் பாதிக்கும், மேலும் குடும்ப உறவுகளிலும் சிக்கலை ஏற்படுத்தும். எந்த முதலீட்டையும் பெரியவர்களின் ஆலோசனை இல்லாமல் தொடங்க வேண்டாம், ஏனெனில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். கண் சம்பந்தமான நோய்களில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு
இந்த மாதம் உங்களின் போட்டியாளர்கள் உங்களின் இமேஜை சிதைக்க கடுமையாக முயலுவார்கள். எனவே அவர்களுக்கு எந்த வாய்ப்பையும் கொடுத்து விடாதீர்கள். குறிப்பாக வதந்திகள் மற்றும் பெண்கள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். மேலதிகாரிகளைப் பற்றி யாரிடமும் குறை கூறாதீர்கள் அது உங்களுக்கு எதிரானதாக மாறும். தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லாமல் இருந்தாலும் உங்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்
இந்த மாதம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இந்த மாதம் நீங்கள் விபத்துகளில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. எனவே போதுமான முன்னெச்சரிக்கைகள் அறிவுறுத்தப்படுகின்றன. சில எதிர்பாராத செலவுகள் வரக்கூடும், இது தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும். தேவையற்ற பிரச்சினைகளுக்காக மனஅமைதியை சிதைத்துக் கொள்ளாதீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்காது, எனவே கவனமாகவும், அமைதியாகவும் இருங்கள்.



Click it and Unblock the Notifications