Latest Updates
-
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க..
இந்த 7 ராசிக்காரங்க நிராகரிக்கப்படுவதை அவர்களால் பொறுத்துக்கவே முடியாதாம்... என்ன செய்வாங்க தெரியுமா?
மிதுன ராசிக்காரர்கள் சமூகத்தின் ஆர்வமுள்ள நபர்களாக இருப்பார்கள். ஆனால், அதேநேரம் அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கவலையாகவும் இருக்கலாம்.
இவ்வுலகில் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணநலன்கள், பண்புகள் மற்றும் வாழ்க்கை முறை இருக்கும். அதற்கேற்ப எல்லாரும் தங்கள் வாழக்கையை அமைத்து கொள்கிறார்கள். பெரும்பாலான மக்கள் எல்லா விஷயங்களையும் மனதில் போட்டு குழம்பிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர், என்ன நடந்தாலும், எல்லாவற்றையும் பெரிதாக எடுத்துக்கொள்ளலாமல் சாதாரணமாக இருப்பார்கள். பொதுவாக நாம் ஒருவரால் விரும்பப்படும்போது, அதை மிகுந்த மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்கிறோம். அதேசமயம், மற்றவர்களால் நிராகரிக்கப்படும்போது, அதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. நிராகரிப்பை நீங்கள் கையாளும்போது, அதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள் அல்லது அதை விடுங்கள். ஆனால், சிலருக்கு நிராகரிப்பு என்பது அவர்களின் வாழ்க்கையை மாற்றும் விஷயமாக இருக்கிறது. நாம் ராசி அறிகுறிகளின் அடிப்படையில் சென்றால், அவற்றில் சிலர் நிராகரிப்பைக் கையாள்வதில் கடினமாக இருக்கிறார்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணங்களை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் உணர்திறன் கொண்டவர்களாகவும் உணர்ச்சிமிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். மற்றவர்களால் நிராகரிக்கப்படுவது உட்பட எல்லாவற்றையும் அவர்கள் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களால் நிராகரிக்கப்படும்போது, அவர்கள் மிகவும் மனரீதியாக காயமடைகிறார்கள். எல்லா விஷயங்களையும் உணர்வுபூர்வமாக எடுத்துகொள்கிறார்கள். அதனால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை சூழ்நிலையிலிருந்து பிரிப்பது கடினமாக இருக்கும்
மேலும் அவர்கள் குணமடைய சிறிது காலம் ஆகலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் உணர்ச்சி கொண்டவர்கள் மற்றும் தீவிரமான நபர்கள். அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதிலும் உறவுகளுடன் இருப்பது அவர்களுக்கு அதீத மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால், தங்கள் உறவுக்காரர்களால் விருச்சிக ராசிக்காரர்கள் நிராகரிக்கப்படும்போது, அவர்கள் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படலாம். இதனால், அவர்கள் கோபமாகவோ அல்லது வெறுப்பாகவோ இருக்கலாம். மேலும், இந்த காயத்தை விட்டு வெளியேற அவர்களுக்கு சிறிது நேரம் ஆகலாம்.

மீனம்
மீன ராசிக்கார நேயர்கள் மிகவும் உணர்திறன் மற்றும் உள்ளுணர்வு கொண்ட நபர்களாக இருப்பார்கள். அவர்கள் அக்கறையுள்ள நபர்களுடன் ஆழ்ந்த உணர்ச்சி ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளனர். மேலும் அவர்களால் இந்த ராசிக்காரர் நிராகரிக்கப்படும்போது, அது பேரழிவை ஏற்படுத்தும். அவர்கள் தங்களின் ஒரு பகுதியை இழந்துவிட்டதாக உணரலாம் மற்றும் அவர்களின் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு, என்ன வேண்டுமானலும் செய்யலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை கொண்ட நபர்கள். ஆனால் நிராகரிப்புக்கு என்று வரும்போது அவர்கள் உணர்திறன் உடையவர்களாக மாறலாம். மக்களின் சரிபார்ப்பு மற்றும் கவனம் அவர்கள் மீது இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த தேவை அவர்களுக்கு உள்ளது, மேலும் அவர்கள் நிராகரிப்பை அனுபவிக்கும் போது, அது அவர்களின் நம்பிக்கையை சிதைத்துவிடும். அவர்கள் அதை தங்கள் தகுதி மற்றும் திறன்களின் மீதான தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் வலுவான மற்றும் உறுதியான நபர்களாக இருக்கிறார்கள். ஆனால், அதேநேரம் அவர்கள் மனக்கிளர்ச்சி கொண்டவர்களாகவும் விரைவாக கோபப்படுவார்களாகவும் இருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களால் நிராகரிக்கப்படும்போது, அவர்கள் தற்காப்பு மற்றும் மோதலுக்கு ஆளாகலாம். தங்களை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைக்கலாம் மற்றும் தங்களை நிராகரித்த நபரை வசைபாடலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் நம்பகமான மற்றும் பொறுமையான நபர்கள். ஆனால் அவர்கள் பிடிவாதமாகவும் உடைமையாகவும் இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்று உறுதியாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் நிராகரிப்பை அனுபவிக்கும் போது, அவர்களை நிராகரித்த நபர் மீது மிகுந்த கோபமாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களை நிராகரித்த நபரை மீண்டும் வெல்ல முயற்சி செய்யலாம். அவர்களின் உறவை முற்றிலும் முறித்துக் கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சமூகத்தின் ஆர்வமுள்ள நபர்களாக இருப்பார்கள். ஆனால், அதேநேரம் அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கவலையாகவும் இருக்கலாம். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களால் நிராகரிக்கப்படும்போது, அவர்கள் அந்த சூழ்நிலையை பற்றியே மீண்டும் மீண்டும் யோசித்து மனரீதியாக் அதிக காயமடையலாம். இந்த காயத்திலிருந்து முன்னேற அவர்கள் மனதோடு போராடலாம்.

இதர ராசிக்காரர்கள்
துலாம், கன்னி, கும்பம், மகரம் மற்றும் தனுசு ஆகிய ராசிக்காரர்கள் மற்றவர்களால் நிராகரிப்படுவதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதை நினைத்து, அவர்கள் பெரிதாக கவலையடையவும் மாட்டார்கள். தங்கள் முன்னேற்றத்திற்கானதாக நிராகரிப்பை எடுத்துக் கொள்ளவார்கள். நடைமுறையை புரிந்துகொண்டு சிந்தித்து முன்னேறுபவர்களாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications











