Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
இந்த 6 ராசிக்காரங்க உங்களுக்கு உண்மையா இருக்க மாட்டாங்களாம்... உங்க கணவன் அல்லது மனைவி என்ன ராசி?
மிதுன ராசி நேயர்களுக்கு இரட்டை ஆளுமை திறன் உள்ளது மற்றும் அது வெளிப்படையாக உள்ளது. அதனால், பொய்யான போலி வாக்குறுதிகளை வழங்குவது அவர்களுக்கு இயல்பாகவே வரும்.
அனைத்து வகையான உறவுகளிலும் விசுவாசம் ஒரு முக்கிய அங்கமாகும். அது காதல் உறவு, குடும்ப உறவு, சமூகம் அல்லது நிதி உறவுகள் போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கையை விதைக்கிறது. விசுவாசம் வாழ்க்கைக்கான நீண்ட கால உறவுகளை உருவாக்க உதவுகிறது. ஆனால் விசுவாசம் இல்லாமல் தங்கள் துணைக்கு துரோகம் செய்யும் அல்லது குறைவான விசுவாசம் கொண்ட சில ராசி அறிகுறிகள் உள்ளன. ஆம், ஜோதிடம் உங்கள் துணை உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறாரா? இல்லையா? என்பதை தெரிந்துகொள்ள உதவும்.

இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள 6 ராசிக்காரர்கள் உங்களுடன் உறவில் ஈடுபடுவார்கள். ஆனால், நீங்கள் நினைத்த அளவுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள். அவை என்னென்ன ராசி என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மிகவும் கடுமையானவர்கள். எனவே அவர்கள் கொஞ்சம் கூடுதலான சுயநலமாக இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் விரும்பிய பொருளை அல்லது விரும்பியவர்களை வெல்வதே அவர்களின் குறிக்கோள். அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தவுடன், எளிதில் சலித்துவிடுவார்கள். மேலும் அவர்கள் அடுத்த சாகசத்திற்கு செல்ல விரும்புகிறார்கள். அதனால், இந்த ராசிக்காரர்கள் உங்களிடம் குறைந்த விசுவாசத்துடன் இருப்பார்கள்.

மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இரட்டை ஆளுமை திறன் உள்ளது மற்றும் அது வெளிப்படையாக உள்ளது. அதனால், பொய்யான போலி வாக்குறுதிகளை வழங்குவது அவர்களுக்கு இயல்பாகவே வரும். அவர்களின் நம்பகத்தன்மையின்மை அவர்கள் நீண்ட காலத்திற்கு உண்மையாக இருக்க இயலாது.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மிகவும் குழப்பமானவர்கள். அவர்கள் எப்போதும் ஒரு முடிவை எடுப்பார்கள், இருப்பினும் அதில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் உண்மையான நோக்கங்களை மறைப்பதில் நிபுணராக இருப்பதாலும், அனைத்திலும் போலியாக இருப்பதாலும், நீங்கள் அவர்களை ஒருபோதும் நம்ப முடியாது. அவர்கள் உங்களிடமிருந்து அவர்கள் விரும்புவதைப் பெற்றவுடன், அவர்கள் ஒருபோதும் உங்களுக்காக விசுவாசமாக இருக்க மாட்டார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு உலகில் உள்ள அனைத்து அன்பையும் கொடுத்தாலும், அவர்கள் உண்மையிலேயே தகுதியான அன்பைப் பெறவில்லை என்று நினைக்கிறார்கள். அது அவர்களுக்கு ஒருபோதும் போதாது. இந்த ராசிக்காரர்கள் பெறும் அன்பில் எப்போதும் அதிருப்தியுடன் இருப்பதால், அவர்கள் தங்கள் உறவுக்கு வெளியே வேறொரு அன்பை தேடுகிறார்கள். அவர்கள் மிகவும் அழகாகவும் நட்பாகவும் இருக்கிறார்கள், அது அவர்களுக்கு இயல்பாகவே வருகிறது.

கும்பம்
கும்பம் எல்லாவற்றிலும் குறைவான விசுவாசமான ராசியாகும். ஒரு உறவில் நேசிக்கப்படுவதில்லை என்ற அவர்களின் பயம் ஒருபோதும் அவர்களின் உண்மையான சுயத்தை தங்கள் துணையின் முன் வெளிப்படுத்த அனுமதிக்காது. அவர்களின் மனம் உடைந்துவிடுமோ என்ற பயத்தில், அவர்கள் முதலில் அவர்கள் துணையின் மனதை உடைக்கிறார்கள். ஆதாவது, இந்த ராசிக்காரர்கள் குறைந்த விசுவாசத்தை கொண்டிருப்பதால், தங்கள் துணைக்கு துரோகம் செய்ய யோசிக்க மாட்டார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் எல்லா காலத்திலும் மிகப்பெரிய கனவு காண்பவர்களாக இருக்கிறார்கள். யாராலும் அவர்களின் கற்பனைகளுக்குள் பொருந்துவது சாத்தியமில்லை. அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூயவர்கள் மற்றும் உணர்திறன் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இயற்கையில் மிகவும் திரவமானவர்கள். அவர்களின் விசித்திரக் கதைகளில் தங்களை இளவரசாரக நினைத்துக்கொள்வார்கள். நீங்கள் இருப்பதையே மறந்துவிட்டு, அவர்கள் வேறொரு உலகில் இருப்பார்கள்.

இதர ராசிக்காரர்கள்
ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம் மற்றும் மகரம் ஆகிய ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் விசுவாசமான நபர்கள். இவர்கள் தங்கள் துணைக்கு எப்போதும் அதிக விசுவாசமாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications