Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
தைப்பொங்கல் ஏன் அறுவடை திருநாள் என்று அழைக்கப்படுகிறது? அதைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல் இங்கே!
தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாக பொங்கல் பண்டிகை இருக்கிறது. பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. இது பண்டிகை என்பதை விட விழா என்று அதிகம் கூறப்படும். பொங்கல் பண்டிகையின்போது, மக்கள் மிகவும் கொண்டாட்ட மனநிலையில் இருப்பார்கள்.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது முதன்மையாக தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படுகிறது. இது பொதுவாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மகர சங்கராந்தி என்று குறிப்பிடப்படுகிறது. தைப்பொங்கல் தேதி, சடங்கு, பூஜை விதி மற்றும் அவற்றின் முக்கியத்துவம் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பொங்கல் பண்டிகை
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இன்னும் சில நாட்களில் வர இருக்கிறது. பொங்கல் கொண்டாட்டத்தின் முதல் நாள் போகி பொங்கல் என்றும், இரண்டாவது நாளான தைப் பொங்கல் நிகழ்வின் மிக முக்கியமான நாள் என்றும் கூறப்படுகிறது.
மூன்று மற்றும் நான்காம் நாட்களில் மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என்று கோலாகலமாக நான்கு நாட்கள் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

தைப்பொங்கலின் தேதி மற்றும் நேரம்
ஜனவரி 15 அன்று, இரண்டாம் நாள் பொங்கல் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. இது அதிகாலை சூரிய உதயத்தில் பொங்கல், கரும்பு மற்றும் மஞ்சள் வைத்து சூரியனை வழிபடுகிற பொங்கல் விழா. இது தைப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது.
தை பொங்கல் ஞாயிறு, ஜனவரி 15, 2023
தை பொங்கல் சங்கராந்தி தருணம் 08:57 PM

அறுவடைத் திருநாள்
பொங்கல் என்பது தமிழ்நாட்டில் சூரியபகவானைப் போற்றுவதற்காகக் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளாகும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இலங்கையில் நான்கு நாட்கள் இந்த நிகழ்வு பரவலாக அனுசரிக்கப்படுகிறது.
அறுவடைத் திருவிழா, மார்கழி மாதத்தின் முடிவோடு இணைந்து, ஆண்டு அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் சடங்காகக் கடைப்பிடிக்கப்பட்டு, தமிழில் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில், இந்த விடுமுறை மகர சங்கராந்தி என்றும், தெற்கில் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது.

முக்கியத்துவம்
மகத்தான விளைச்சலுக்கு உதவிய சூரியன், இயற்கை அன்னை மற்றும் மாடு , ஆடு போன்ற அனைத்து பண்ணை விலங்குகளுக்கும் நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது. நான்கு நாட்கள் அனுசரிக்கப்படும் பொங்கல், தமிழ் மாதமான தை முதல் நாளில் வருகிறது. இது அதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது.

தைப்பொங்கல் வரலாறு
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் வைத்து சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

பொங்கல் சடங்குகள்
பண்டிகையின் போது பெண்கள் மஞ்சள் பூசி குளித்து, அனைவரும் புத்தாடை உடுத்துகிறார்கள். வாசலில் ரங்கோலி பொங்கல் கோலம் இடுவார்கள். மண் பானை மற்றும் அடுப்புகளை சேமித்து கோலத்திற்கு நடுவே வைக்க வேண்டும். மூன்று கரும்புகளை பொங்கல் பானையை சுற்றி வைக்க வேண்டும்.
பானையில் மஞ்சள் கொத்தை கட்ட வேண்டும். ஈரமான விபூதியுடன், மூன்று கோடுகளை உருவாக்கி, பானையில் ஒரு குங்குமப் புள்ளியை வைக்கவும். இப்போது பொங்கல் வைப்பதற்கான சடங்குகள் தயார். பெரிய பொங்கல் நாட்களில் மக்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருப்பார்கள், ஏனென்றால் அவர்கள் சூரிய உதயத்தில் பூஜை செய்ய வேண்டும், இது சுமார் 6 மணிக்கு நிகழும்.

பொங்கல் பூஜை விதி
முதல் நாள் போகி பொங்கலில், வீட்டை சுத்தம் செய்து அலங்கரிக்க வேண்டும். புதிய அரிசி அறுவடை செய்யப்பட்டு இரண்டாவது நாளில், சூரியனுக்கு பொங்கல் வைப்பது, தைப் பொங்கல் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நேரத்தில், சூரிய கடவுளுக்கு அதிகாலையில் பொங்கல் வைத்து வணங்கி வழிபட வேண்டும். மூன்றாவது நாளான மாட்டு பொங்கல், முற்றிலும் விவாசாயத்திற்கு உதவும் கால்நடைகளுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. இந்நாளில் பசுக்களை சுத்தம் செய்வது பூஜை செய்வது வழக்கம். "காணும் பொங்கல்" என்று அழைக்கப்படும் நான்காவது நாளில் குடும்ப ஒன்றுகூடல்கள் நடக்கும். அறுவடையின் போது தங்களுக்கு உதவிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு விருந்து வைத்து நன்றி உபசரிக்கும் நாள்.

பாரம்பரிய உணவுகள்
பொங்கல் பண்டிகையின் போது பாரம்பரிய உணவுகளை மக்கள் உண்ணுகிறார்கள். பொதுவாக பொங்கல் நாளில் வெண் பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல் தான் அதிகமாக செய்து உண்ணப்படுகிறது. தங்கள் நிலத்தில் விளைந்த பருப்பு மற்றும் காய்கறிகளை வைத்து பல சமையல் செய்து படையல் போடுகிறார்கள்.



Click it and Unblock the Notifications